கனலி மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறது. எண்ணிக்கையில் மூன்று வருடங்கள் குறுகிய காலம். ஆனால் தாக்கத்தைக் கருத்தில் கொள்கையில் ஏராளமான இலக்கிய முயற்சிகள், மற்ற புது இணையதளங்களுக்கு ஒரு தூண்டுதல் என்று பல நன்மைகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறது. கனலியில் அறிமுகமாகி இப்போது நன்கு எழுதுபவர் பலர். நல்ல வாசகனுக்கு தான் அதிகம் படித்து விட்டோம் என்ற உணர்வு வரவே கூடாது, அதே போல இலக்கிய இதழாசிரியருக்கு இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என்று தோன்றிக் கொண்டே இருக்க வேண்டும். அந்த உணர்வு விக்னேஷிடம் இருக்கிறது, அந்தத்தீ அணையாமல் இருக்க என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.

தூதன்- ரேமண்ட் கார்வெர் – தமிழில் ஜி.குப்புசாமி:

கார்வெரின் கதைகள் நுட்பமானவை. செகாவ்வின் கடைசி மணித்துளிகள் இறப்பு, டால்ஸ்டாய் வந்து பார்ப்பது எல்லாமே உண்மை சம்பவங்கள். செகாவ் இறந்ததில் இருந்தே புனைவு ஆரம்பிக்கிறது. கதைக்குள் கதையாக வோல்காவின் மனதிற்குள் ஒரு கதை விரிகிறது. நல்ல யுத்தி இது. உண்மை சம்பவங்களுக்கு ஒரு கனவின் சாயையைப் பூசுவது. முதல் முறையாக தமிழில் இந்தக்கதை வாசிக்கக் கிடைக்கிறது என நம்புகிறேன். கார்வரின் பெரிய விசிறி ஜி.குப்புசாமி.

விதியை நம்புபவன்- ஐஸக் பேஷவிஸ் சிங்கர்- தமிழில் எம்.ஏ.சுசீலா:

விதியின் மீது நம்பிக்கை என்பது உலகத்தில் எல்லோருக்கும் இருப்பது. Irony தான் இந்தக்கதையின் கரு. Russian Roulette போலத் தான் இந்த விளையாட்டும். அந்த விளையாட்டை விளையாடும் பரபரப்புக்காக மட்டுமே அதில் ஈடுபட்டதாகப் பிழைத்தவர்கள் சொல்லியதுண்டு. வாழ்வு இல்லை சாவு என்று துணிவது ஒரு சூதாடியின் மனநிலை. எல்லோருக்கும் அது சித்திப்பதில்லை. கடைசி வரியில் சிங்கரின் Sarcasm. அருமையான மொழிபெயர்ப்பு.

மின்னற்பொழுது மாயை- அம்புரோஸ் பியர்ஸ்:

Civil War Story. Western novelகளில் வருவது போன்ற கதைக்களம். மூன்றுபகுதிகளில் கதை வெவ்வேறு திசை நோக்கி நகர்வது நல்ல யுத்தி. கடைசி வரியில் ஃபர்க்வாரின் உடல் ஊஞ்சலாடுகிறது ஆனால் கதையின் உயிர்நாடியே அந்த வரியில் தான் இருக்கிறது. ஆங்கிலத்தில் இருந்து தமிழ்படுத்துவது என்பது இந்தக் கதையைப் பொறுத்தமட்டில் சவால். மிக அழகாக செய்துள்ளார் லதா அருணாச்சலம். கதைத் தலைப்பை மிகவும் ரசித்தேன்.தமிழில் இதை விட எளிமையாக கதையின் உயிர்ப்பு குலையாமல் கொண்டு வருவது கடினம்.

நான் ஒரு சிறிய நகரத்தை வாங்கினேன்- டொனால்ட் பார்தெல்ம்- தமிழில் காளி பிரசாத்:

அமெரிக்கக் கலாச்சாரத்தை அப்படியே பிரதிபலிக்கும் கதை. பணமும், அதிகாரமும் ஒரு மனிதனை எப்படி சகமனிதர்கள் மேல் சிறிதும் கருணையில்லாது நடந்து கொள்ள வைக்கும் என்பதைச் சொல்லும் கதை. Donald Trump முகம் கதை படிக்கையில் கண்முன் வந்து போனது. தெளிவான மொழிபெயர்ப்பு.

எமிலிக்காக ஒரு ரோஜா -வில்லியம் ஃபாக்கனர்- தமிழில் அசதா:

இம்மாதத்தில் மட்டும் மூன்றாம் முறையாக இந்தக் கதையைப் படிக்கிறேன். அதற்கு முன்னும் படித்திருக்கிறேன். இரண்டுமுறை எழுதியதையே Copy paste செய்துள்ளேன். அசதாவின் மொழிபெயர்ப்பு வெகு இயல்பாக வாசிக்க உதவுகிறது.
நெருங்கியவர் யாரேனும் இறந்தால் சிலகாலம் நம்மிடையே அவர் இல்லை என்பதை நம்மால் நம்ப முடிவதில்லை. மரணத்தை மறுத்தல் கதையில் மூன்றுமுறை நடக்கிறது. அது போலவே தன்னைப் பெரிதாகக் கருதிக் கொண்டு எல்லோரிடமிருந்தும் தனிமைப் படுத்திக்கொள்வது. ஆனாலும் எமிலியின் வாழ்வு பரிதாபமானது. Faulkner கூட அதனாலேயே அவளுக்கு ஒரு ரோஜாவைப் பரிசளிக்க எண்ணியிருக்கலாம்.

இனிமை- டோனி மாரிசன்- தமிழில் ச.வின்சென்ட்:

இதுவும் ஏற்கனவே தமிழினியில் கார்குழலி மொழிபெயர்ப்பில் வந்த கதை. Weaker section அவர்களிலும் Weaker sectionஉடன் சேருவது அவமானம் என்பது போல கருப்பர்களிலும் வெளிறிய கருப்பு, கருங்கருப்பு என்று பிரிவுகள்! ஒவ்வொருக்கும் அவரவர் நியாயங்கள், அதை நிரூபிக்க அவர்கள் கொண்டு வரும் ஆதாரங்கள். வெகு சிறப்பான மொழிபெயர்ப்பு.

சோப்பியின் தேர்வு- ஓ ஹென்றி- தமிழில் கீதா மதிவாணன் :

கடைசி வரியில் ஓ ஹென்றியின் வழக்கமான Twist. எது வேண்டும் என்று அதிகமாக விரும்புகிறோமோ அப்போது கிடைப்பதில்லை. சர்க்கரை நோயாளிக்கு இனிப்பு சாப்பிடச் சொல்லி வற்புறுத்துவார்கள். நல்லதொரு மொழிபெயர்ப்பு.

கொலைகாரர்கள் – ஏர்னஸ்ட் ஹெமிங்வே- தமிழில் சூ.ம.ஜெயசீலன்:

ஹெமிங்வேயின் இந்தக் கதையில் நடக்காத கொலைக்கு நடக்கும் நான்கு எதிர்வினைகள். முதலில் சமையல்காரர், கண்ணையும் காதையும் மூடிக்கொண்டு தன்னை விலக்கிக் கொள்கிறார். ஜார்ஜ், பரிதாபப்படுகிறார் ஆனால் தான் ஏதும் செய்யாது அடுத்தவரை அனுப்புகிறார். நிக் தான் அப்பாவி. அவரால் ஆன முயற்சிகள் செய்த போதும் சமாதானம் கொள்ள முடியவில்லை. ஓலேயின் எதிர்வினை தான் கதையில் முக்கிய அம்சம். விதி வழிப்பயணம். வாசிக்க எளிதாக இருக்கும் மொழிபெயர்ப்பு.

விழிப்பு- டோபியாஸ் வுல்ஃப்- தமிழில் கார்குழலி:

உறக்கம் வராத நீண்ட இரவுகளும், எங்கு சுற்றினாலும் காமத்தில் மனம் கொண்டு போய்விடுவதும் போல மேலோட்டமாகத் தோன்றும் இந்தக்கதை ஆண் ஒரு பெண்ணின் உடல் பழகியபின் விட்டுவிலகத் துடிக்கும் உளவியலைப் பேசுகிறது. தெளிவான வேகமாக வாசிக்க ஏதுவான மொழிபெயர்ப்பு.

கரிய பூனை -எட்கர் ஆலன் போ – தமிழில் இல.சுபத்ரா:

போவின் புகழ்பெற்ற Gothic story. மனிதன் மனத்தில் ஒளிந்திருக்கும் தீயதனத்தைச் சொல்லும் கதை. மனிதமனம் கற்பிதங்களை
ஏற்படுத்தி தோற்றப்பிழைகளை உண்டு பண்ணுவது போவின் பல கதைகளில் நடப்பது. கரிய பூனை அமெரிக்கர்களைப் பொறுத்தவரை Bad Omen. சுபத்ராவின் அழகான மொழிபெயர்ப்பு இந்தக்கதை.

பிரமாண்ட வானொலிப்பெட்டி- ஜான் ச்சீவெர்- தமிழில் பத்மஜா நாராயணன்:

Peeping Tom story. அடுத்தவர்களது அந்தரங்கத்தைக் கேட்டுப் பழகியபின் ஐரினால் அதிலிருந்து வெளியே வர முடிவதில்லை. அடுத்தவரது விசயங்களில் ஆர்வம், தன்னைப் பரிசுத்தமாகக் காட்டிக் கொள்ளுதல், எப்போதும் pamperingஐ எதிர்பார்த்தல் ஆகியவற்றைச் சொல்லும் கதை. ஒருவேளை இந்த வானொலிப்பெட்டி கிடைத்தால்…… வாங்கிவிடலாம். பத்மஜாவின் திருத்தமான மொழிபெயர்ப்பு.

வாழ்க்கை விதி- ஜேக் லண்டன்- தமிழில் கீதா மதிவாணன்;

இந்தக்கதை ஓலைச்சுவடியில் கார்குழலி மொழிபெயர்ப்பில் ஏற்கனவே வந்தது.

வாழ்க்கையின் கடைசி மணித்துளிகளில் இருக்கும் முதியவரது கதை. யாரெல்லாம் உடல் தகுதியோடு இருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே செல்ல முடியும் என்பதில் எஸ்தர் நினைவுக்கு வருகிறது. கதையின் கடைசி அசோகமித்ரனின் பிரயாணம் கதையை நினைவுபடுத்துகிறது. முதியவரின் பார்வையில் கதை. அவரது இளமைக்கால அனுபவங்களைப் படிப்பது லா.ச.ரா கதைகளைப் படிப்பது போல் இல்லை! ஒரு விட்டேத்தியான Toneல் சொல்லப்பட்ட கதை. கீதா மதிவாணனின் சிறந்த மொழிபெயர்ப்பு.

நெமேஷியா- கீற்ஸ்ட்டின் வால்டேஸ் குவேட்- தமிழில் நரேன்:

இரு சகோதரிகளின் உணர்வுகளின் மோதல்.
நெமேஷியாவைப் பார்த்துப் பரிதாபப் படுவதா இல்லை வெறுப்பதா என்பதே தெரியாது. கதையில் சம்பவங்களை அடுக்கிக் கொண்டே சென்று வாசகர்களை முழுமையான சித்திரம் வரையச்செய்யும் யுத்தி. முழுக்கவே ஒருசகோதரி பார்வையிலேயே சொல்லப்படுவதால் நெமிஷியாவைக் குறித்த பிம்பத்தை நாம் தனியாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு அவள் ஏன் சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள்? கன்னத்தில் புண் ஆறவிடாது செய்வது இன்னொரு நெமிஷியா. Such a wonderful story. நல்ல மொழிபெயர்ப்பும் சேர்ந்திருக்கிறது.

கணவனுக்கான தையல்- கார்மன் மரியா மிச்சாடோ- தமிழில் அனுராதா ஆனந்த்:

கணவனுக்கான தையல் ஒரு Horrible story. சொல்லப்பட்ட விதத்தில் அல்ல அதனுடைய உள்ளடக்கத்தினால். பெண்ணுடல் எப்படி ஒரு லாகிரி வஸ்து போல் உபயோகப்படுத்தப்படுகிறது என்பதற்கு இந்தக்கதை உதாரணம். அதை மட்டும் சொல்லி விட்டுவிட்டால் வெறும் பிரச்சாரம்.
அதனால் தான் ஆரம்பத்தில் இருந்தே ரிப்பன் கதையில் தொடர்ந்து வருகிறது. ரிப்பனை ஒரு பெண்ணின் ரகசியமாக உருவகித்துக் கொண்டால் என்னவாகும் என்பதே கதையின் முடிவு. Beautifully translated by Anuradha.

ரயில் வரும் நேரம் – டி ஆர்சி மெக்நிக்கெல்- தமிழில் விஜயராகவன்:

புலம் பெயர்தல் வயதானவர்களுக்கே கடினமான ஒன்றாக இருக்கும் பொழுது, குழந்தைகள் வீட்டை விட்டு, பெற்றோரை விட்டு, வெகு தொலைவுக்குச் செல்வது என்பது……. நாமெல்லாம் அதிர்ஷ்டம் செய்தவர்கள். நல்ல மொழிபெயர்ப்பு.

ஒரு தற்கொலைக்கு மிகச்சரியான நாள்- ஜே.டி.சாலிங்ஜர்- தமிழில் க.ரகுநாதன்:

போரின் பின்விளைவுகள் ஒருவனுக்கு ஆழ்மனதில் ஏற்படுத்தும் தொல்லைகள் குறித்த கதை. வியட்நாம் போருக்குப்பின் தன் சுயநிலைக்கு வரமுடியாத போர்வீரர்கள் பற்றி உண்மைக் கதைகளும் புனைவுகளும் ஏராளமாக வந்திருக்கின்றன. இது அநேகமாக இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய கதை. முழுக்கவே உரையால் மூலம் Traumatizationஐச் சொல்லும் கதை. எளிதாகப் படிக்கவைக்கும் மொழிபெயர்ப்பு.

நான் மீட்டுத் தருவேன்- ஷெர்மன் அலெக்ஸி- தமிழில் நரேன்:

அமெரிக்காவின் பூர்வகுடிகளை விரட்டி விட்டு வெள்ளையர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். இந்தக்கதை தனது கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் அடையாளத்தை மீட்டெடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் பழங்குடி இனத்தவனின் கதை. Black humour நடையில் சொல்லப்பட்டிருக்கிறது. நல்ல மொழிபெயர்ப்பு.

போர் நடனங்கள் – ஷெர்மன் அலெக்ஸி- தமிழில் கமலக்கண்ணன்:

சுயசரிதைக்கூறுகள் நிறைந்த கதை. காது சரியாகக் கேட்காத ஒருவன் அவன் பிரியத்துக்குரிய தந்தையை நினைவுகூர்வது. காதுகோளாறினால் வரும் பிரச்சனைகளும், தந்தை குறித்த நினைவுகளும் ஒரு டயரிக்குறிப்புகள் போல் எழுதப்பட்ட கதை. கமலக்கண்ணனின் தெளிவான தமிழ் மொழிபெயர்ப்பு.

மென்சாரல் மழை பொழியத் தொடங்கும்- ரே ப்ராட்பரி- தமிழில் பாலகுமார் விஜயராமன்:

கயல் மொழிபெயர்த்திருக்கிறார் தமிழினிக்காக இந்தக் கதையை. ஜப்பான் அணுகுண்டு வெடிப்புகளுக்குப்பின் எழுதிய கதை. Sci fi கதை.ஆள் இல்லாத வீட்டில் இயந்திரங்கள் அவற்றின் பணியை செய்து கொண்டிருக்கின்றன. 2026ல் நடப்பதாக 1950ல் எழுதியது. இப்போது 1950.எங்கோ தூத்திற்குச் சென்று 2026 நெருங்கிவிட்டதில் ஒரு Surreal தன்மை தெரிகிறது. மொழிபெயர்ப்பு நன்றாக இருக்கிறது.

லாப்ஸ்டர் விருந்து – அலெக்ஸாண்டரா க்ளிமேன்- தமிழில் ப்ரீத்தி வசந்த்:

Surreal story. Lobstersஐ மனிதர்கள் விரும்பி சாப்பிடுகையில் அவை மனிதர்களை விரும்பி சாப்பிட்டால் என்ன நடக்கும்?.Zombie
போல லாப்ஸ்டர் கடித்தவன் வாய் பெரிதாக விரிகிறது. Love is fatal or kiss is fatal?.மொழிபெயர்ப்பு நன்றாக இருக்கிறது.

பழுப்பு நிறப்பெட்டி- ஜான் அப்டைக்- தமிழில் ராகவேந்திரன்:

ஒரு மரப்பெட்டி மௌனசாட்சியாக ஒருவனது குழந்தைமையில் இருந்து முதுமை வரை எத்தனையோ நிகழ்வுகளைப் பார்த்திருக்கிறது. பொருட்களில் படிந்த நினைவலைகளை அழகாகச் சொல்லும் கதை. நல்ல மொழிபெயர்ப்பு.

வினோதக்கனவு- அலெக்ஸாண்டரா க்ளிமேன்- தமிழில் அனுராதா கிருஷ்ணசாமி:

surrel and bizarre இரண்டும் சேர்ந்ததே இவர் கதைகள் போலிருக்கிறது. திருமணப் பேச்சில் இடையே பலர் புகுகிறர்கள். Nightmareஆ இல்லை கனவுக்காட்சியா தெரியவில்லை. தமிழ்மொழி பெயர்ப்பு நன்றாக இருக்கிறது. கதையைக் குழப்பம் தீர்ந்ததும் ஒருமுறைபடிக்கவேண்டும்.

ஒரு நீதிக்கதை- மார்க் ட்வெயின்- தமிழில் ஈஸ்வர்:

ஒவ்வொருவரும் அவரவர் கோணத்திலேயே புறக்காட்சிகளைப் பார்ப்பதைச் சொல்லும் நீதிக் கதை. மொழிபெயர்ப்பு நன்று.

Wild Green – Lavanya Sundararajan- Translated from Tamil by Kayal

முரட்டுப்பச்சை என்ற பெயரில் எழுதிய கதை. இந்திய ஆண்கள் அமெரிக்கப் பெண்களை மணக்கும் திருமணங்களைவிட இந்தியப் பெண்கள் அமெரிக்க ஆண்களுடன் செய்யும் திருமணங்களுக்கு ஆயுள் அதிகம் என்றார் அமெரிக்கப் பெண் ஒருவர். அதற்கான காரணம் நமக்குத் தெரிந்ததே. பெண்களே வேலைசெய்து பார்த்துப் பழகியவர்கள் நாம். இது ஒரு அலைவரிசையில், வேலையில் பாதுகாப்பின்மை இன்னொரு அலைவரிசை, அலுவலகம் குடும்பம் இரண்டையும் ஒன்றாக்கும் இந்தியமனம் மூன்றாம் அலைவரிசை என எல்லாவற்றையும் இந்தக்கதையில் அழகாகக் கொண்டு வந்திருக்கிறார் லாவண்யா. தீபிகா கறுப்பா, சிவப்பா, குள்ளமா, உயரமா என்று தேவைப்படாத தகவல்கள் எதுவும் இந்தக்கதையில் இல்லை என்பதை கவனியுங்கள். கயலின் ஆங்கில மொழிபெயர்ப்பு சிறப்பு.

ராஜவீதி- நந்தா குமாரன்:

அமெரிக்காவிற்கு முதல் பயணம் செய்தவன் பார்வையில் நகரும் வரைபடம். Hypocrisy என்பதும் இந்தியர்களின் சொத்து, எங்கு போனாலும் எடுத்துப் போவார்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s