சிறுகதை காலாண்டிதழில் வந்த கதை இது.
வழமை போல் அகர முதல்வன் மொழிக்குள் நீந்திக்கரையேறி அதன்பின் கதையைப் படிக்கவேண்டும்.
“வானத்தின் அடிவயிறு என்னை அழுத்தியது. என்னைக் காப்பாற்றுங்கள் என்று கூக்குரல் எழுப்பினேன். வார்த்தைகள் அவிழ்ந்து உதிர்ந்தன. கல்லுக்குள் அலையெழுப்பும் குருதிக்கடலின் மீது சூரியன் நிமிர்வது மட்டும் தெரிந்தது. என் பாதங்களில் காட்டு மரங்களின் வேர்கள் படர்ந்தன. ஒரு பெண்ணின் கூந்தல் வாசத்தில் கொப்புகள் முளைத்தன. உச்சிக்கொப்பில் வண்ணத்துப்பூச்சியாய் ஆகியிருந்தேன். கைபிடித்தானியம் போல இரண்டு கற்களையும் சுமந்திருந்தேன்”
மாயதார்த்தம் போல் விரியும் கதையின் கடைசியில் குருதிக்கல் என்பது ஒரு metaphor என்று தெரிய வரும்போது இது நடந்த கதை என்பது தெளிவாகிறது. அண்ணனின் பார்வையில் சொல்லப்படும் கதையில், பார்வை போவதும் பின் திரும்பவருவதும் தம்பியின் உலகை அவன் புரிந்து கொள்வது.
அகர முதல்வனின் வழக்கமான நம்பிக்கையும் கடைசியில் தொனிக்கிறது.
“யுகத்தின் கல்லோடு ஆழிக்குள் இறங்கி விட்டான், என்றோவொரு நாள் பேரலையைப் போல் எழுந்து வருவான்”.
தம்பி என்பது யாரைக் குறிக்கிறது என்பது தெரிகிறதா?
தலைப்பு : சிறுகதை காலாண்டிதழ் (ஏப்ரல்-ஜுன் 2021)
ஆசிரியர் குழு : உதயசங்கர், ம.மணிமாறன், இளங்கோ கிருஷ்ணன்
முதல் பதிப்பு : ஏப்ரல் 2021
பதிப்பு : காலாண்டிதழ், மே/பா.கம்பம் அகாடமி, 514, குமுளி சாலை, கம்பம் 685 509. தொலைபேசி: 04554-272271