Susanna இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர். 2004ல் வெளிவந்த இவரது Jonathan Strange & Mr Norrell எழுத இவர் பத்து வருடங்கள் எடுத்துக் கொண்டார். மிகுந்த வரவேற்பைப் பெற்ற நாவலது. இது இவரது இரண்டாவது நாவல், 2020 செப்டம்பரில் வெளிவந்தது. இந்த நாவலுக்கு இவர் எடுத்துக் கொண்ட காலம் பதினாறு வருடங்கள்.
புக்கர் இறுதிப்பட்டியல் செப்டம்பர் 14ல் வெளியாவதற்கு முன், இருபத்தி ஆறாவது Women’s Prize For Fictionன் வெற்றியாளர் யாரென்று இம்மாதம் 8ஆம் தேதி தெரிந்து
விடும். இம்முறை போட்டி Patricia Lockwoodக்கும் Susanna Clarkeக்கும் இடையே என்று பரவலாகக் கருதப்படுகிறது. என் Gut feeling Susannaவை நோக்கி சாய்கிறது. பார்க்கலாம். வெல்பவருக்கு, இங்கிலாந்தின் இந்த உயரிய விருதும், பரிசுத்தொகையாக இன்றைய இந்திய மதிப்பில் முப்பது லட்சத்து முப்பதாயிரமும் கிடைக்கும்,
அது வேறு ஒரு உலகம். அங்கே பழைய நினைவுகள் மொத்தமாக அழிக்கப்படும். நாவலில் அது House என்று அழைக்கப்படுகிறது. அதில் மொத்தம் 7678 ஹால்கள். ஒரு ஹாலுக்கும் மற்றொன்றுக்கும் கிலோ மீட்டர்கள் இடைவெளி. மூன்று தளங்கள். முதல் தளத்தில் கடல் அலைகள் சுவர்களை அறைந்து கொண்டிருக்கும். இரண்டாவது தளத்தில் பறவைகள் மற்றும் சிலைகள். மூன்றாவது தளம் திறந்த வெளி. மேகங்களுக்கும், மழை நீருக்குமான வெளி.
மொத்த நாவலுமே இந்த Houseல் தனியாக இருக்கும் (13.எலும்புக்கூடுகளையும் அவ்வப்போது வந்து போகும் இவருடைய சீனியர் விஞ்ஞானியைச் சேர்க்காமல்) ஒருவர் குறிப்பேட்டில் வரிசைக்கிரமாகப் பதியும் நிகழ்வுகள். அதன் வழியே கதை மொத்தமும் சொல்லப்படுகிறது. (இந்த வருடம் புக்கர் இன்டர்னேஷனல் நீண்ட பட்டியலுக்குத் தேர்வான Olga Ravnன் The Employees Novel மொத்தமும் பணியாளர்களின் அறிக்கைகள் மற்றும் குறிப்புகள்.) இந்தக் குறிப்பேடுகள் இல்லையெனில் இந்தக் கதையே கூட இருந்திருக்காது.
Piranesi அல்லது அவனது குறிப்பேடுகள் கதைசொல்லியாக இருந்தாலும் இந்த நாவலில் House தான் முக்கிய கதாபாத்திரம். Piranesi Houseஐ மதிப்பவன், காதலிப்பவன். அதனால் House அதன் மர்மங்களோடும், பரந்து விரிந்த அறைகளில் மையமாக வீற்றிருக்கும் தனிமையோடும் அவனைப் பாதுகாத்துக் கொள்கிறது. Piranesi சொல்வதைத் திரும்பச் சொன்னால் ” The beauty of the house is immeasurable; its Kindness infinite”.
இது எளிய வாசிப்புக்கான நாவல் இல்லை.
கிரேக்கப் புராணங்களில் வரும் Minotaur Labyrinthஐ இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் Fantasy மூலமாக இந்த நாவலில் மீட்டுருவாக்கம் செய்கிறார். இது Fantasy genreஐச் சேர்ந்த நாவல், ஆனால் Harry Porter போலவோ Game of Thrones போலவோ
குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்வதல்ல. இந்த நாவலில் வரும் ஏராளமான Metaphors மற்றும் Allegories வாசகர்களை பலதிசைகளில் திணற வைக்கக்கூடும். Masterfully crafted novel by a brilliant writer. ஒருவேளை இது போட்டியில் வெல்லாவிட்டாலும் கூட, இந்த ஆண்டுக்கான சிறந்த நாவல்களில் ஒன்று இது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.