Francis பிரிட்டனைச் சேர்ந்த எழுத்தாளர். அல்புனைவுகளை எழுதிக் கொண்டிருந்தவர், 2016ல் Golden Hill என்ற முதல் நாவலை அவருடைய ஐம்பத்தி இரண்டாவது வயதில் எழுதினார். நல்ல வரவேற்பைப் பெற்ற நாவல் அது. லண்டன் பல்கலையில் எழுத்துக்கலையைக் கற்பிக்கும் இவரது இந்த இரண்டாவது நாவல் 2021 புக்கர் நீண்ட பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது.

“Come, other future. Come, mercy not manifest in time; come knowledge not obtainable in time. Come, other chances. Come, unsounded deep. Come, undivided light. Come dust.”

அலெக்சாண்டர் முப்பத்தி மூன்று வயதில் இறக்காமல் இருந்திருந்தால்! இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி ஜெயித்திருந்தால்! அமெரிக்கா ஜப்பானின் மீது அணுகுண்டுகள் வீசாதிருந்தால்! The ifs and buts of history … form an insubstantial if intoxicating diet என்றார் Vikram Seth. இந்த நாவலும் ஜெர்மனி இரண்டாம் உலகப்போரில் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 168 பேர் இறந்ததில், இறந்து போன ஐந்து குழந்தைகள் ஒருவேளை இறக்காமல் தப்பித்திருந்தால்! எழுபது வயது வரை அவர்கள் உயிர் வாழ்ந்திருந்தால் என்ற கற்பனையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது.

உயிர் பிழைத்த காரணத்தினால் Happily lived ever after என்ற வாழ்க்கை இந்த ஐவருக்கும் கிடைக்கப் போவதில்லை. வாழ்க்கை என்பது போராட்டங்களும், ஏமாற்றங்களும் நிறைந்தது. Alecஓ Joவோ அவர்கள் ஆசைப்பட்ட வாழ்க்கையை சென்றடையப் போவதில்லை. ஐவரின் வாழ்க்கையும் ஒரு நிகழ்வினால் இணைக்கப்படுகிறது. என்னருகே விமானத்தில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் இந்தப் பேரழகி யார்? என் வாழ்வின் ஒன்றரை மணிநேரம் இவள் அருகாமையில், இவளது வாசனையில் நான் கழிக்கவேண்டும் என்று எந்த விதி தீர்மானித்தது?

ஒவ்வொரு பதினைந்து வருட இடைவெளிகளில் ஐவரின் வாழ்க்கை மாறிக் கொண்டே இருக்கிறது. 1944ல் ஆரம்பிக்கும் கதை 2009 வரை செல்கிறது. கற்பனைக் கதை என்பதற்காக ஐவரின் வாழ்க்கைக் கதைகளோடு முடிவதில்லை இந்த நாவல். எல்லாக் காலங்களிலும் லண்டன் குறித்த தெளிவான சித்திரம் பதிவாகியிருக்கிறது. Period detailsஐ யாருமே ஆழ்ந்த ஆராய்ச்சி இல்லாமல் எழுதியிருக்க முடியாது.

பொருட்களை துகள்களாக பகுப்பது போல் காலத்தை பகுப்பதற்கில்லை. வினாடியில் பத்தாயிரத்தில் ஒரு பங்கு காலம் கூட ஒரு அழிவை ஏற்படுத்தும் அல்லது ஒரு உயிரை உருவாக்கும். முடிவிலிகள் பிரமாண்டமாகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இந்த நாவல் இந்தக்கருவையே வேறு கோணத்தில் அணுகியிருக்கிறது.

நாவலின் ஆரம்ப அத்தியாயத்தையும் கடைசி அத்தியாயத்தையும் இரண்டு முறையேனும் படியுங்கள். ஒரு புனைவு வாழ்க்கையின் எல்லாப்பகுதியையும் கேள்வி கேட்க வைக்கிறது. என் மனைவி என்று சொல்லும் இந்தப்பெண் யார் என்பதில் ஆரம்பித்து நூறாயிரம் கேள்விகள். முடிவேயில்லாத அளவு கேள்விகள். Francis இரண்டு நாவல்கள் மூலம் Contemporary fictionல் அழுத்தமான தடத்தைப் பதிக்கிறார். சாதாரணர்களின் வாழ்வை, உணர்ச்சிகளை, வெற்றிதோல்விகளை அசாதாரணமாக மாற்றுகையில் அங்கே இலக்கியம் உருவாகுகிறது. Francis is hugely talented and a gifted writer.

bookerlonglist2021

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s