மாணவப் பருவத்திலிருந்தே எழுதத் தொடங்கியவர். அக்கு ஹீலராக பணிபுரிபவர். பல மருத்துவ நூல்களை எழுதியுள்ளார். தமிழில் ஆரோக்கியநிவேதனம் வெளிவந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுளுந்தீ வந்தது அதன்பின் வந்த முழுமருத்துவ நாவல் இவருடைய ஆதுரசாலை. இவர் பிறந்த மாவட்டமான தேனியின் அகழ்வாராய்ச்சி குறிப்புகள் அடங்கிய அழநாடு இன்னொரு முக்கியமான நூல். இது இவரது சமீபத்திய நாவல்.

எல்லாத் தொழில்களுக்குமே ஏற்ற இறக்கங்கள் இருந்தே தீரும். ஒரு காலத்தில் Sunrise industry ஆக இருந்த Online tourism இருந்த இடமே தெரியவில்லை. எல்லாத் தொழில்களுமே உலக அளவில் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த சூழலில் கொரானா மற்ற எல்லாத் தொழில்களையும் நசுக்கி Healthcare Boomஐ ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் Lifetime savingsஐ இழக்க முக்கியமான காரணம் மருத்துவமனைகள்.

உமர்பாரூக் தன் நூல்களில் தொடர்ந்து அலோபதி மருத்துவம் எப்படி வியாபாரமாக மாற்றப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் தந்து கொண்டே இருக்கிறார். இதில் கார்டு டெஸ்ட்டை விட்டு PCR எடுக்கச் சொல்வது, Lab testகளின் நம்பகத்தன்மை, வெறும்குச்சிக்கு பாஸிட்டிவ் என்று ரிசல்ட் வருவது, சிறுநீரகக் கோளாறு, இருதய நோய் இருப்பவர்கள் பரிசோதனைக்குச் சென்றால் உயிருக்கு ஆபத்து என்று லட்சங்களில் கறந்து விட்டு அனுப்புவது, பாசிட்டிவ் என்று சேர்க்கப்பட்டவர் இறந்து பின் நெகடிவ் ரிசல்ட் வருவது போன்ற நடைமுறை சம்பவங்கள் எல்லாவற்றையும் நாவலில் குறிப்பிட்டிருக்கிறார்.

மரணத்தை விட மரணம் குறித்த பயம் இன்னும் அச்சமூட்டக்கூடியது. கொரானாவை மையக்களமாகக் கொண்ட நாவல், மக்கள் புரியாத பெருநோயைக் கண்டு அச்சப்பட்டதையும், பாதிக்கப்பட்டவர்கள் மனஉறுதியை இழந்து
உடலை மேலும் பலவீனமாக்குவதையும் சொல்கிறது.

மூவர் கதைசொல்லிகள். பள்ளி நண்பர்கள் மூவரின் வாழ்வும் வேறுவேறு திசையில் பயணம் செய்யும் பொழுது நூற்று இருபது பக்கங்களில் யாராலுமே Justify செய்ய இயலாது. குறைந்தது நூறு பக்கங்களாவது இந்த நாவலின் நீளம் குறைவு.

நாவல்கள்

பிரதிக்கு:

டிஸ்கவரி புக் பேலஸ் 87545 07070
முதல்பதிப்பு ஆகஸ்ட் 2021
விலை ரூ.150.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s