சென்ற வருடத்தில் நோபல் பரிசு இலக்கியத்துக்கு அறிவிக்கப்பட்டதும் உலகெங்கிலுமிருந்து ஏராளமான எதிர்மறை விமர்சனங்கள். அதற்கு முன்பே கூட யாருக்கும் தெரியாத, யாராலும் யூகிக்கமுடியாத எழுத்தாளர்களை நோபல் கமிட்டி தேடிக் கண்டுபிடிப்பதாக பேசப்பட்டது. புக்கர் ஓரிரவில் எழுத்தாளரின் வாழ்க்கையை, அவர்களின் நூல்களின் விற்பனையை மாற்றுகிறது. நோபல் இன்று பெருங்காய டப்பாவாக இருக்கிறது. Louise Glückஐ நோபலுக்குப் பிறகு எத்தனை பேர் படித்தார்கள்? இன்றைக்கு இந்தியாவில், அவர்கள் ராஜகுடும்பம் என்று சொல்வது போல Nobel Laurette என்பது.

Louise Erdrich புலிட்சர் விருதை வென்ற உடன், இப்போது பலரால் தேடிப் படிக்கப்பட்டு வருகிறார். Richard Powers, Anthony Doerr போன்றவர்கள் புலிட்சருக்குப்பின் உலக அளவில் பரவலாகப் படிக்கப்பட்டு வருகிறார்கள்.

இர்விங் வாலஸின் The Prize 1961ல் வெளியானது. Nobel Prize Award எப்படி Manipulation செய்யப்படுகிறது என்பதே அந்த நாவல். புனைவு பின்னர் பலவருடங்கள் கழித்து
உண்மையாவது வரலாற்றிற்குப் புதிதல்ல. நோபல் கமிட்டிக்கு/Swedish Academyக்கு வேறெப்போதையும் விட. இம்முறை அதிக அழுத்தம் இருக்கிறது.
அவர்கள் Popular ஆன ஒரு எழுத்தாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. Annie Ernaux க்கு அதிக வாய்ப்பு என்கிறது Guardian. ஒருவகையில் அவருக்குண்டான வாய்ப்பை Guardian ஒரு நீண்ட கட்டுரை வெளியிட்டுக் கெடுத்ததாக எனக்குத் தோன்றுகிறது. Ngũgĩ wa Thiong’o விற்குக் கொடுத்தால் தவறான தேர்வு என்று உலகவாசகர்களில் எவரும் சொல்வதற்கில்லை. அவர் world literary circleல் Popularம் கூட. ஆனால் கறுப்பினத்தவரா இல்லை வெள்ளையின பாப்புலர் எழுத்தாளரா என்றால் Swedish Academy எந்தப் பக்கம் சரியும் என எல்லோருக்கும் தெரியும்.
Margaret Atwood மிகப்பிரபலமானவர். Isabel Allendeம் மிகப் பிரபலமானவர். ஆனால் பின்னவருக்குக் கொடுத்தால் அவர் நாட்டிலேயே விமர்சனங்கள் எழும்.
Atwoodக்குக் கொடுத்தால் நானும் மனம் மகிழ்வேன். எண்பது வயதுக்கு மேல் Atwood எழுதிய, சென்ற வருடம் வெளியான Dearly கவிதைத்தொகுப்பை கைக்குழந்தையை வாரி அணைப்பது போல் தழுவிக்கொண்டார்கள் உலக வாசகர்கள். Clock is ticking now. பார்க்கலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s