அல்லி ராணி- பிரமிளா பிரதீபன்:

ஆண்களின் பலம் உடம்பில் என்றால் பெண்களின் பலம் வஞ்சத்தில் என்பது கதைக்கரு. கதையைக் கொண்டு செல்லும் நேர்த்தி பிரமிளாவிற்கு நன்றாகக் கைவசப்பட்டுவிட்டது. அல்லிராணி காது கேட்காமல் எதற்காக சத்தமாக வானொலியை வைக்கிறாள் என்பது கடைசியில் தெரியவரும். மற்றவரின் பார்வையில் திமிர்தனமாக நடந்து கொள்ளும் அல்லிராணி, நினைத்திருந்தால் எல்லோருடைய பரிதாபத்தையும் சம்பாதித்திருக்கலாம். தமிழ்நாட்டுப் போலிஸூக்கும் சிங்களப் போலிஸூக்கும் பெரிய வித்தியாசமில்லை போலிருக்கிறது.
முதலில் ஒரு பிம்பத்தை உருவாக்கி பின் அதை உடைக்க கதையை நான்கு பகுதிகளாகப் பிரித்துச் சொல்லும் யுத்தி உதவுகிறது. நல்ல கதை.

அல்லிராணி

தடம் பார்த்து நின்றேன் – மணி எம் கே மணி:

மீண்டும் திரையுலகின் ஏற்ற இறக்கங்களைப் படம்பிடிக்கும் மணியின் கதை. சினிமாவின் மீதான ஆசை கிட்னியை விற்பதில் கொண்டு சேர்க்கிறது. சட்சட்டென்று மாறும் காட்சிகள் போல Sharpஆக கதைகளை நகர்த்தும் தனிப்பாணி மணியுடையது. இன்னொன்று மணியின் கதைகள் நிதர்சனத்தை ஆடையின்றிக் காட்டுபவை.

தடம் பார்த்து நின்றேன்

குளிர்ச்சி – ஐ.கிருத்திகா:

கிருத்திகா பெண்களின் பிரத்யேக உலகத்தை மீண்டும் இந்தக் கதையில் கொண்டு வந்திருக்கிறார். நைட்டியை பின்னால் அம்மா சரிசெய்வது போல நுணுக்கமான விவரங்கள் ஏராளம் இந்தக் கதையில். மணமான பெண் பத்து நாட்கள் பிறந்தவீட்டுக்கு வந்து இருக்கும் உணர்வுகளே கதை. ஐந்து வயதில் தனியாகப் படுக்கும் இன்றைய தலைமுறைக்கு மாறாக, இருபதுகளிலும் அப்பா அம்மா உடன் படுத்து பின்னர் யோசிக்கையில் குற்றஉணர்வு கொள்ளும் தலைமுறையும் இருந்தது. கிருத்திகாவின் கதைகள் பல நினைவுகளைக் கொண்டு வந்து சேர்க்கின்றன. நல்ல கதைகள் எப்போதும் அப்படித்தான்.

குளிர்ச்சி

சிப்பி- சுஷில் குமார்:

சுஷில் குமார் இம்முறை மிக வித்தியாசமான கதைக்களத்துடன் வந்திருக்கிறார். லாரா-ரோக்கா இருவருக்குமிடையே என்ன என்பதை, மூன்றாம் நபரின் பார்வையில் பாதியும், முன்னர் நடந்தது அங்கங்கே வாசகர்களுக்காகவும் சொல்லப்படுகிறது. கதைசொல்லியை விட வாசகர்களுக்கு அதிகம் நடந்தது தெரிவதும் ஒருவித மகிழ்ச்சி தானே. கதையின் முன் வரும் கவிதையில் மொத்தக்கதையும் வருவதும் அதை ரோக்கா பாடுவதும் கடைசியில் தான் தெரிகிறது. நல்ல வாசிப்பனுபவம்.

சிப்பி

சாவின் பிரதி – ஜீவ கரிகாலன்:

கரிகாலனின் ஒவ்வொரு சிறுகதையும் வித்தியாசமான கதைக்களத்தில் வருகிறது.
Lithography, நிழலுலகம் இவற்றுடன் ஒரு
Choleric personalityஐயும் சேர்த்திருப்பது தான் இந்தக்கதையில் சுவாரசியமே. இல்லை என்றால் திரில்லர் கதையாக முடிந்திருக்கும்.
Lithography stoneஆல் Magic செய்ய முடியும் என்பது தமிழில் இதுவரை வந்துள்ளதாகத் தெரியவில்லை. கரிகாலன், காயத்ரி போன்ற பதிப்பாளர்கள் அவர்களுக்குள் இருக்கும் படைப்பாளியின் கையைக்கட்டி விட்டு பதிப்பக வேலையைப் பார்ப்பவர்கள்.

சாவின் பிரதி

அல்ஜீப்ரா – எஸ். சங்கரநாராயணன்:

அல்ஜீப்ரா ஒரு Gothic story. Gothic storyகள் பெரும்பாலும் பயத்தை ஏற்படுத்த, திரில்லுக்காக எழுதப்படுகின்றன. Jane Eyre என்ற Classic novel Gothic Romance வகை. சங்கரநாராயணனும் அதே யுத்தியை இந்தக் கதையில் பயன்படுத்தி இருக்கிறார். மாயா மற்றும் காசி குறித்த விவரங்கள்,.காதலைச் சொல்ல முடியாது தடுக்கும் பொருளாதார சூழ்நிலை என்று நகரும் கதை, பாதிக்கு மேல் வேறு பாதையில் செல்கிறது. அல்ஜீப்ரா போன்ற சிக்கலே இல்லாத நல்ல கதை.

அல்ஜீப்ரா

ஈவும் மீதியும்- கா.சிவா:

அரசு அலுவலரின் ஒரு அனுபவமே கதை.
என்னவோ பொதிகையில் விரிவான செய்திகளைக் கேட்ட ஒரு Feeling வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஈவும் மீதியும்

சங்கரன் விஸ்வநாதன் குறுங்கதைகள்:

ஏனோ வருத்தமாகவும் இருந்தது என்று நான்காவது கதை முடிகிறது. எனக்கும் அப்படித் தான். ஏன் இந்தக் குறுங்கதையை மட்டும் எல்லோருமாகச் சேர்ந்து இந்தப்பாடு படுத்துகிறார்கள்?

சங்கரன் விஸ்வநாதன் குறுங்கதைகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s