தோண்டிக்குச் செல்லும் பெருந்து – சுதா ஸ்ரீநிவாசன்:

அசோகமித்திரனின் ரிக் ஷா என்பது ஒரு குறுங்கதை. கிட்டத்தட்ட இந்தக் கதைக்கருவை ஒட்டியது. ஆனால் அதன் மொழிநடையும், ஒரு பிசகு கவனத்தைத் தாண்டிப் போகவைக்கும் லௌகீக வாழ்க்கையும் நுட்பமாக சொல்லப் பட்டிருக்கும். இதில் Repetition தான் கதையை ஜனரஞ்சகமாக்கி இருக்கிறது.

விலக்கம் – கமலதேவி:

ஆதவனின் பட்டு மாமாவும் குட்டி மாலுவும் கூட இதே கதையின் மறுபக்கம் தான். மூன்றாமவர் வரும்பொழுது, அவர்கள் அதிக உரிமையை அந்த உறவால் எடுத்துக் கொள்ளும் போது, விலக்கம் வருவதும் இயல்பான ஒன்று தான். ஆனால் கதை அதுவல்ல. நுட்பமாக ஒரு விசயத்தை, வரிகளுக்கிடையே மறைந்திருக்கும் போரோசையைப் பற்றிச் சொல்கின்றது. பெண்களைப் பெண்களை விட யார் நன்றாகப் புரிந்து கொள்ளப் போகிறார்கள்.

விலைக்கு மேல் விலை – அமர்நாத்:

சிறுகதைகளில் பத்து வருடங்கள் உருண்டோடின என்று வந்தால் சாதாரணமாக வரும் அலுப்பு இதில் வருவதில்லை. வீடு என்பது செங்கல்களால் மட்டும் கட்டப்படுவதில்லை. பிரியமானவர்களின் மூச்சுக்காற்றின் வெப்பம் அவர்கள் மறைந்த பின்னும் வீட்டில் இருக்கும். அத்துடன் அமெரிக்கா போன்ற நாடுகளில் வீடுகளை நிறுவனங்கள் பயன்படுத்துவதும், புதிதாக வந்த தம்பதியருடன் தன்னுடைய கடந்தகால வாழ்வை இணைத்துப் பார்ப்பதும் அழகாக வந்திருக்கின்றன.

நீக்(ங்)குதல் – உஷா தீபன்:

லஞ்சம் வாங்குவது என்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம். ஆனால் எதுவுமே அதைப் புனிமாக்க முடிவதில்லை.
ஒரு கண சலனம் தான் கொலை, பாலியல் வல்லுறவு, விபத்து போன்ற எல்லாவற்றுக்கும் காரணம். தியாகராஜன் அவரைத் தான் உலகம் சுற்றுகிறது என்று நினைக்கிறார். அவர் மேல் பரிதாபம் வரவில்லை, இருந்தாலும் வயதானவர் என்பதால் சொல்கிறேன். Contactல் Select all கொடுத்து Delete செய்யுங்கள் சார். தனித்தனியாக சிரமப்பட வேண்டாம்.

ரஜத் – விஜயலஷ்மி:

வறுமையில் இருப்போர் அதுவும் பாதிக்கப்பட்டோர் அடுத்தவர் மேல் கருணை இல்லாமல் நடந்து கொள்வது நிதர்சனம்.
மனிதமனம் தன் தவறுக்கு நூறு காரணங்களைக் கற்பிதம் செய்து கொள்ளும். ரஜத் கம்பளி மற்றும் மகன் இழப்பை எளிதாகக் கடந்து விடுவான். இவனுக்குத் தான் பாரம் இருந்து கொண்டே இருக்கப் போகிறது.

ஜெயந்தி டீச்சர் – சக முத்துக்கண்ணன்:

டீன்ஏஜ் பெண்களின் உலகம் பயமும், பரபரப்பும், கனவுகளும் நிறைந்தது. இந்தக் கதையில் அது நன்றாக வந்துள்ளது. ராசாத்தி டீச்சர் சொல்வது எதற்கு என்று புரியும் முதிர்ச்சி இல்லை. இந்த வயதுப் பெண்களுக்கு மட்டும் என்றல்ல, யாருக்குமே பாராட்டை மட்டுமே கேட்டுப் பழகிய காதுகள்
வேறு எதையும் கேட்க விருப்பப்படுவதில்லை.

முதல் அற்புதம்-.ஜெஃப்ரி ஆர்ச்சர்- தமிழில் சஞ்ஜெயன் சண்முகநாதன் :

“Writing can be taught, story telling is a gift” என்று Jeffrey Archer சொன்னதையே மொழிபெயர்ப்புக்கும் சொல்லலாம் போலிருக்கிறது. Jeffrey Archer மொழிநடையிலும், கதைசொல்லலும் வல்லவர். அவருடைய மொழிக்கும் இநதத் தமிழாக்கத்திற்கும் சம்பந்தமேயில்லை, இரண்டிலும் கதை ஒன்றுஎன்ற போதும்.
சிறுவன் யாரைச் சந்திக்கிறான் என்ற ஆர்ச்சரின் விவரணை Goosebumbsஐ ஏற்படுத்தும். ஆங்கிலத்தில் கதை வாசிப்பது, புரிந்து கொள்வது, கூடிய மட்டும் அதை தமிழுக்குக் கடத்துவது ஆகிய மூன்றும் தனிப்பட்ட மூன்று நடவடிக்கைகள்.

விடியல் – இலட்சுமி நாராயணன்:

சரி விடு ஆனது ஆயிப்போச்சு என்ற வரியில் தான் கதையின் உயிர் தங்கி இருக்கிறது. அநாவசியமான வார்த்தைகளே இல்லாமல் கதை அழகாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. பாராட்டுகள். தி.ஜாவின் மறதிக்கு என்ற சிறுகதையை இந்தக் கதை படித்து முடித்ததும் படித்துப் பாருங்கள். மனிதர்களில் எத்தனை நிறங்கள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s