தொலைதல் – சமயவேல்:
சுற்றுச்சூழல் குறித்து உலகின் பல நாடுகளில் இருந்தும் கதைகள் வந்து கொண்டே இருக்கின்றன. புக்கர் இறுதிப் பட்டியலில் வந்த Bewilderment சுற்றுசூழல் குறித்த நாவல். தமிழில் சாயாவனம் ஒரு பேராசையால் காடு அழிவது. சமயவேலின் இந்தக் கதை சமகால அழிவுகளைச் சித்தரிக்கிறது. கல்யாணியிடம் நம் கவனம் குவிந்திருக்கும் போது சட்டென்று கதை பாதை மாறுவது நல்லயுத்தி. இயற்கையை எதிர்த்து மனிதனால் ஜெயிக்க முடியாது என்பதைப் பல உலக இலக்கியங்கள் சொல்லி இருக்கின்றன. இயற்கையை மனிதன் அழித்தால், இயற்கை மனிதனை அழிக்கும். ஒரு கையறுநிலையை வாசகர்களுக்கும் கடத்தும் கதை.
ரூபி- ரதீஸ் கௌசல்யா:
நினைவுக்கும் கனவுக்கும் மாறிமாறி போய் வரும் கதை. ஒரு மரணத்தில் தொடங்கும் கதை, மயக்கநிலை எது, நிஜம் எது என்றுதெரியாது கலந்தே வருவது நன்றாக இருக்கிறது.
நான் தான் சுத்தம் செய்தேன் – ஆங்கிலத்தில் கன்யா டி அல்மைடா – தமிழில் கார்குழலி:
இலங்கை சிங்கள எழுத்தாளர் இவர். இன்னொரு இலங்கைத்தமிழ் எழுத்தாளரான அருட்பிரகாசம் புக்கர் இறுதிப்பட்டியலுக்குள் வந்திருக்கிறார். சமீபத்தில் கன்னட எழுத்தாளர் காய்கிணி நூல் மொழிபெயர்ப்புக்கான சர்வதேச விருதைப் பெற்றிருக்கிறது. தமிழ் நவீன இலக்கியம் இதில் எங்கே இருக்கிறது?. அவரவர் குழுவில் உள்ளவர்கள் எழுதியதே இலக்கியம் அதைப் போற்றாதவர்கள் இலக்கியம் தெரியாதவர்கள் என்று கற்பிதம் கொள்கிறார்கள்.
அநாதைகளுக்கான விடுதியில் நடக்கும் இந்தக் கதையில் என்ன தான் இருக்கிறது? உலகத்தின் எந்த மூலையில் இருப்போரும் உணர்ந்து கொள்ளக்கூடிய எல்லா உணர்ச்சிகளும் இருக்கின்றன. அதே நேரத்தில் கதை எந்த இடத்திலும் Melodrama ஆகவில்லை. A Life Apartல் பிரபா சொல்வது இதைத்தானே. “நான் இருந்ததையே யாரும் கவனிக்கவில்லை. ” அன்னையைப் போல் நடந்து கொண்டால் மட்டும் உரிமை கொள்ள முடியுமா? இருபது வருடங்கள் மலத்தை, நிணத்தைத் துடைத்தால்……. அந்தக் கதையைச் சொல்லத் தேர்ந்தெடுத்த நபரில் கதையில் கூடுதல் அழகியல் இருக்கிறது. Conceptual and Global undetstanding இல்லாத எந்தக் கதையும் சர்வதேச அரங்கில் பரிசு வாங்க இயலாது. தமிழில் கதை எழுதுபவர்கள் கண்டிப்பாகப் படிக்கவேண்டிய கதையிது. தயவுசெய்து பதிவிரதைக்கு இன்னல் வந்து தீரும் கதைகளை 2021ல் எழுதாதீர்கள். ஆங்கிலத்தில் படித்த அதே உணர்வில் கிஞ்சித்தும் குறையாது தமிழுக்குக் கொண்டு வந்திருப்பது கார்குழலியின் மொழிபெயர்ப்பு.
சிற்றூழி – கார்த்திகா முகுந்த்:
தனிமையைச் சொல்லும் கதை. மழைகொட்டிய பள்ளிநாளில் கூட்டிச்செல்ல யாரும் வராத காலத்தில் இருந்து தொடரும் தனிமை. தனிமை தொடர்ந்து வரும் பொழுது, மனது என் பங்கைக் கொடு என்று கூச்சல் போட்டுப் பல நினைவைக் கொண்டுவரும். நன்றாக வந்துள்ளது. தொடர்ந்து எழுதுங்கள் கார்த்திகா.
தமிழ்வெளி இதழுக்கு:
9094005600 (வாட்ஸ்அப்)
Commonfolks லும் கிடைக்கிறது.