Pereira மும்பையில் பிறந்து வளர்ந்தவர். பத்திரிகையாளர், எழுத்தாளர். இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இது இவருடைய முதல்நாவல்.

Linear கதைசொல்லலில் இருந்து வேறுபட்டு,
Obrigado Mansion என்ற மும்பாயின் புறநகரில் அமைந்த கட்டிடத்தில் வாழும் Goans பற்றிய சில காட்சிகள், இந்த நாவல். கட்டிட உரிமையாளரும் சேர்த்து, எட்டு குடும்பங்கள், சிலர் நாவலில் அடிக்கடி வருகிறார்கள், சிலர் ஒருமுறை வருவதுடன் சரி.

ஆங்கிலோ இந்தியர்கள் பேசுவது போன்ற ஆங்கிலம் நாவலில் அடிக்கடி உபயோகிக்கப்படுகிறது. Glimpses of Characters நாவலாக மாறும் பொழுது எழுத்தாளர் தான் சொல்ல விரும்புவதை சொல்வது கடினம். வாசக கவனம் Scattered ஆகப் போவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆனால் முதல் நாவலிலேயே அதை எளிதாகச் செய்திருக்கிறார் Pereira.

Wife beating, Alcoholism, Fornication நாவலில் அடிக்கடி நிகழ்கிறது. பாண்டிச்சேரியில் இருப்பவர்கள் பலர் தங்களை பிரஞ்சுக்காரர்கள் என்று உறுதியாக நம்புவது போல், கோவாவில் இருப்பவர்கள் தங்களை போர்த்துக்கீசியர் என்ற நினைப்பில் வாழ்கிறார்கள். மதுவும் இதர போதைகளும் கோவாவை நோக்கி உள்நாட்டினர், வெளிநாட்டினரை இழுக்கின்றன. கோவாவின் கலாச்சாரம் கலவையானது.

கத்தோலிக்கர்களை மணம் செய்பவர் மதம் மாறவேண்டும். முஸ்லீம்களுக்கும் அதே போல. இந்து அல்லாதவரை இந்து மணம் செய்தால் சட்டப்படி அது Hindu Marriage Actல் வராது. இதற்காகவே Special marriages act இருக்கின்றது. காதலையும் விடாமல், அவரவர் நம்பிக்கையையும் விடாமல் வாழ்வதற்கான வழி. நாவலில் மிக்கேலி ஒருநாளும் என் மதநம்பிக்கையை விடமுடியாது என்று சொல்வது முக்கியமான, சிந்திக்கப்பட வேண்டிய விசயம்.

ஒரு இருண்ட உலகத்தை நம் கண்முன் கொண்டு வருகிறார் Pereira. அநேகமாக நாவலில் வரும் எல்லாப் பெண்களுமே, Physical or mental abuseக்கு உள்ளாகுகிறார்கள். விதவைகளே நிம்மதிப் பெருமூச்சுடன் சுதந்திரமாக இருக்கிறார்கள்.
பதினான்கு வயதுப் பெண், பெற்ற தந்தையினால் பாலியல் வல்லுறவுக்குள்ளாகிறாள். கணவன் வேறு பெண்ணுடன் உறவு வைத்திருக்கிறான் என்பது தெரிந்து, பிறந்த வீட்டுக்குப் போன பெண் அவர்களது தொல்லை தாங்காது கணவனிடமே திரும்புகிறாள்.

கத்தோலிக்கக் கிருத்துவக் குடும்பங்களே நாவலின் கதாபாத்திரங்கள். அதனால் அவர்கள் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், வழிபாடுகள் நாவலில் வருகின்றன. அதற்காக மதமோ, கடவுளோ இவரது எள்ளலில் இருந்து தப்பிக்கவில்லை. Alcoholic ஒருவன் யேசுவுக்கு பிடித்தமில்லாமலா தண்ணீரை ஒயினாக்கினார் என்கிறான். பாவமன்னிப்புக் கொடுக்கும் பாதிரி பெண்களை நினைத்து உருகுகிறார். நாவலின் முக்கியமான அம்சம் மற்ற ஐந்து நாவல்களில் இருந்து வேறுபட்டுத் துளியும் இந்தியத்தனம் இல்லாமல் எழுதியிருப்பது.
உலகின் எந்த நாட்டில் இருந்தும் வந்த நாவல் என்று இதைச் சொல்லலாம். இந்திய எழுத்தாளர்கள் வெகுசிலரைத் தவிர, மற்றவர்களால் இதைச் செய்யமுடிவதில்லை. முதல் நாவலிலேயே அதை இவர் சாதித்திருப்பது ஆச்சரியப்படத்தக்க விஷயம்.

English

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s