ரச்செல் Tennesseeல் பிறந்து வளர்ந்தவர். தன்னுடைய கனவான Vanity Fair magazineல் Photo Shoots வேலைக்காக, நியூயார்க்குக்கு பெயர்ந்தவர். இது இவருடைய முதல் நூல்.

Anna Sorokin என்ற ரஷ்யாவில் பிறந்த ஜெர்மன் பெண், ரச்செலுடன் நட்புகொண்டு, ஒரு Costly vacationக்கு கூட்டிச் செல்கிறேன் என்று மொத்த செலவான $62,000த்தைத் ( இன்றைய இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட நாற்பத்தி ஆறு லட்சரூபாய்) ரச்செல் தலையில் கட்டிய உண்மைக்கதை இந்த நூல். தன்னை Anna Delvey என்ற பணக்கார வீட்டுப் பெண்ணாகக் காட்டிக் கொண்டு இந்த மோசடியை செய்திருக்கிறார்.

Con artist எல்லோருக்குமே ஒரு தனிப்பட்ட வழிமுறை உண்டு. இப்போது நாம் படிக்கையில் எப்படி ஏமாந்தார் என்று கேட்கக்கூடும் ஆனால் எப்போதும் அவர்கள் செயல்முறை கண்கட்டி வித்தையைப் போல. அத்துடன் ரச்செல்லுக்கு இருபத்தி ஆறு வயதில் பெரிதாக உலக அனுபவம் இருக்கும் வாய்ப்புமில்லை. பணக்காரப் பெண்ணாகக் காட்டிக் கொண்ட அன்னா, ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மாதக்கணக்கில் தங்குவது, அங்கே உணவு உண்ணுவது, ஒரு ஜிம் பயிற்சியாளருக்கு ஒரு மணிநேரத்திற்கு $350 கொடுப்பது, குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் எப்போதும் தாமதமாக வருவது, ஓட்டுனர், பரிசாரகர் ஆகியோரின் சேவைக்கு நன்றி சொல்லாதது என்று பணக்காரர்களுக்கே உரிய cynical
way of behavingஐ விடாது செய்து வந்திருக்கிறார்.

ரச்செல் அவரிடம் வாங்கி சாப்பிட்டதை, உடைகள் வாங்கிக் கொண்டதை, ஜிம், Spa என்று பல இடங்களுக்கு தனக்கும் சேர்த்து அவர் பணம் அளித்ததை வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். உறுமீனுக்காக அன்னா காத்திருந்தது இவருக்குத் தெரியவில்லை. அடுத்தது நடுத்தரக்குடும்ப மனநிலை என்று ஒன்று உண்டு. ஹோட்டல்காரர்கள் பணத்திற்கு நெருக்க, அன்னா செய்வதறியாது அமர்ந்திருக்க, பணக்கார நண்பியை Rescue செய்யும் நோக்கத்துடன் கடன் அட்டை மற்றும் கார்ப்பரேட் அட்டையை ரச்செல் உபயோகித்திருக்க வேண்டும். ஊருக்கு வந்ததும் $70,000 தந்து விடுகிறேன் என்று அன்னா சொன்னதையும் இவர் மறைக்கவில்லை.

இந்த நூலில் ஆச்சரியப்படும் இரண்டு விசயங்கள் இருக்கின்றன. முதலாவது Amex Bankஇன் Stand. கார்டை உபயோகித்த இடத்தில் நீங்கள் இருந்தால், Charge slipல் இருப்பது உங்கள் கையொப்பமென்றால், உங்களை யாரேனும் மிரட்டி கார்டை உபயோகப்படுத்தியதை, காவல்துறையில் புகார் செய்து, இருபத்திநான்கு மணிநேரங்களுக்குள் வங்கிக்கும் தெரிவிக்காவிட்டால் அந்தப் பணத்தை நீங்கள் செலுத்துவதில் இருந்து தப்ப முடியாது. ஆனால் இரண்டு மாதங்கள் கழித்து வங்கிக்கு நான் ஏமாற்றப்பட்டேன் என்று சொல்லியதை வைத்து மொத்தப் பணமும் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது ஆச்சரியம். The power of being an american.

அடுத்தது காவல்துறையோ, குற்றஒழிப்புத் துறையோ எடுத்துக் கொள்ள முடியாத கேஸை DA office எடுத்துக்கொண்டது. Anna மேல் வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும் சேர்ந்து Tour போனோம், பணத்தை அவள் தருகிறேன் என்று சொல்லிப்பின் தரவில்லை என்று இந்தியாவில் யாரிடம் நாம் புகார் சொன்னாலும் நம்மைத்தான் உதைப்பார்கள்.

இந்தியாவில் ஏமாந்த கதையை புத்தகம் எழுதினால் என்ன கிடைக்கும்? நிறைய அறிவுரைகளுடன் ஐந்தில் இருந்து பத்தாயிரம் ரூபாய் கூடுதல் விரயம். ஆனால் ரச்செல் Book deal is $300,000 மற்றும் HBO dealக்காக மற்றுமொரு $ 300,000 (இரண்டும் சேர்த்து இந்தியமதிப்பில் 4.45 கோடி ரூபாய்கள்) சம்பாதித்திருக்கிறார். அமெரிக்க வெள்ளையினப்பெண் அழுதால் அமெரிக்க ஆன்மாவில் இரத்தம் வடியும். அன்னாவின் வழக்கறிஞர் ரச்செலின் Testimonyக்கும் அழுகைக்கும் Oscar விருது கொடுக்கலாம் என்றது குறிப்பிடத்தக்கது. அத்துடன் விசயம் முடியவில்லை. அன்னா எப்படி ஏமாற்றினார் என்ற கதையை சீரிஸ் எடுக்க Netflix அவருடன் $320,000க்கு ஒப்பந்தம் கையெழுத்திட்டிருக்கிறது. Lunatics are not the only ones to be called lunatics.

English

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s