Daribha, Shillongல் பிறந்து வளர்ந்தவர். IRS மறைமுகவரிப்பிரிவில், இணைஆணையராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய முதல் நாவல் இது.
நாவலின் தலைப்பு பள்ளியில் சிறார்கள் விளையாடும் விளையாட்டு. கையில் கிடைத்த எழுத்தை வைத்து, நினைவடுக்குகளில் இருந்து பெயரை உருவி, விளையாடும் விளையாட்டு. Daribha இந்த நாவலில் அதையே செய்திருக்கிறார்.
நாவலின் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு பெயரும், அவர் குறித்த நினைவுகளும். இதன் மூலம் Kashi இனத்தைச் சேர்ந்த Shillongல் வளர்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை கண்முன் விரிகிறது.
Shillong, Northeast நகரங்களில் ஒன்று. இந்தியா ஒரு குழப்பங்களின் மூட்டையான தேசம். வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வருபவர்கள், அவர்களது வித்தியாசமான முகஅமைப்பு காரணமாகத் தெற்கு மாநிலங்களில் தாக்கப்படுகிறார்கள். பிழைப்புக்காக Shillong செல்லும் பெங்காலிகள், பீகாரிகள் போன்றோர் அங்குள்ளவர்களால் தாக்கப்படுகிறார்கள். சீனாவில் இருந்து பலர் வந்து வாழ்ந்த நகரம், 1962 சீனப்போருக்குப் பிறகு அவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. பயங்கரவாத குழு ஒன்று பணம்கேட்டு, தராதவர்களைக் கொலைசெய்வதை நாவல் விவரிக்கின்றது.
பெண்பிள்ளைகள் வளர்வதைப் பார்த்தல் பேரானந்தம். இந்த நாவலில் ஒரு பெண் வளர்கிறாள். பதின்வயதில் பாலியல் குறித்த குறுகுறுப்புகள், சிறுவர்கள் கன்னத்தில் முடி முளைக்கவில்லையே என்று கவலைப்படுவது போல் தன்னை விடச் சிறுமிகள் age attain செய்யும் போது தான் ஆகவில்லையே எனக் கவலைப்படுவது, பள்ளியில் Eraserஐத் திருடி தூங்கமுடியாமல் தவிப்பது, பையன்களின் பாராட்டைப் பெறும் அளவிற்கு அழகாக இல்லையோ எனக் கவலைப்படுவது என்பது போல் முழுக்கமுழுக்க ஒரு வளரும் பெண்ணின் பார்வையில் நாவல் நகர்கிறது.
வ.ராவின் நடைச்சித்திரம் போல் வளர்கையில் இடைப்பட்ட மனிதர்களின் குணாதிசயங்களும் வருகின்றன. Mrs. Trivedi Swinging moodsஉடன் ஒரு வித்தியாசமான பெண்மணி. Pentecostal Sarkar, பிழைப்புக்காக குழந்தைகளை விட்டு வந்த Bi மற்றும் அவளது காதல் முயற்சிகள். எல்லோரையும் விட கடைசியில் Score செய்வது Yuva. நெருங்கிய சிநேகிதிகளுக்குள் தோன்றும் விருப்புவெறுப்புகள். சிறிய நாவல் என்றாலும் பலகாலம் நினைவில் வைத்திருக்கும்படி எழுதப்பட்டது. சுயசரிதைக்கூறுகள் ஏராளமாகக் கலந்திருக்கிறது இந்த நாவலில். நம் கதையை விட வேறு யாருடைய கதையை நம்மால் சுவாரசியமாகச் சொல்லமுடியும்?
A brilliant debut.