சுரேஷ் ஒரு Investigative Journalist. இந்துஸ்தான் டைம்ஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகளில் வேலை பார்த்தவர். அகிலஉலக Investigative Journalist அமைப்பில் உறுப்பினர். இதற்கு முன் மதக்கலவரங்கள், அயல்நாட்டில் பதுக்கிவைக்கப்பட்ட பணம் உள்ளிட்ட பல விசாரணைகளைச் செய்தவர்.

பிரியங்கா ஒரு பத்திரிகையாளர். Cambridge Universityயில் சமூகவியலில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.

இந்தியாவில் ஆராய்ச்சி செய்வது மிகக் கடினம். இங்கே தஸ்தாவேஜ்களை முறையாக நாம் பராமரிப்பதில்லை. காந்தியின் கொலை குறித்து ஏராளமான நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. பின் இந்த நூலின் அவசியம் என்ன?. இந்த நூல் விடுபட்ட சில இழைகளை இணைக்கும் முயற்சி. காந்தி கொலை பற்றித் தெளிவான தகவல்களைத் தரக் கூடியவர்கள் நாதுராம் கோட்ஸேயும், நாராயண் ஆப்தேயும் மட்டுமே. நாதுராமின் சிறிய புத்தகம் ஏன் கொலைசெய்தேன் என்பதைச் சொல்கிறது, ஆனால் அது ஒரு Religious fanaticன் கோணம்.

சாவர்க்கர் சிறுவயதில் இருந்தே இந்துத்வா கொள்கைகளில் ஆர்வம் கொண்டவர். பல நூல்கள் இந்துத்வா குறித்து எழுதியவர். இந்து ராஜ்ஜியம் அமைக்கும் கொள்கை கொண்டவர். இங்கிலாந்தில் சட்டம் பயின்றவர். இந்தியா வந்ததும் கைதுசெய்யப்பட்டு ஐம்பது ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டவர். பதிமூன்று வருடங்கள் சிறையில் இருந்தார். பிரிட்டிஷ் அரசால் அவர் அபாயகரமான கைதி என Branding செய்யப்பட்டு அதற்கான Treatments அனுபவிக்க நேர்ந்ததில் உள்நோக்கம் இருக்கிறது.(Hindutva vs Christianity). ஆனால் அதற்கான சாவர்க்கரின் எதிர்வினை ஒரு சராசரித்தரத்திற்கும் கீழானது.
“‘I for one cannot but be the staunchest advocate of constitutional progress and loyalty to the English government” இவருக்கு மாவீரன் பிம்பத்தை இப்போது உருவாக்குவது அபத்தம். 1945ல் இருந்து உடல்நலக் குறைவால் பம்பாயை விட்டு பலமாதங்கள் அசையாத சாவர்க்கர் ஆகஸ்ட் 8, 1947 மும்பையில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் பயணம் செய்தபோது, அவருடன் வந்த இருவர், காந்தி கொலைக்காகத் தூக்கிலிடப்பட்ட அதே இருவர்.

கோட்ஸேயும் ஆப்தேயும் நெடுநாள் குடும்ப நண்பர்கள். கொலை நடப்பதற்கு ஒரு வாரம் முன்பு, கோட்ஸே தனது இன்ஸூரன்ஸ் தொகையின் பயனாளியாக ஆப்தேயின் மனைவியையும், தம்பியையும் சேர்க்கிறார். கோட்ஸேயின் Status மகாசபாவில் சாவர்க்கரின் நெருக்கத்தால் பலநிலைகள் உயர்ந்தது. ஆனால் ஆப்தேயின் நிலை அவ்வாறு இல்லை. கடைநிலையான ஒருவருடன் தலைவரான சாவர்க்கர் ஏன் ஒன்றாகப் பயணம் செய்ய வேண்டும்?

காந்தி எப்போதும் மைனிரிட்டியான முஸ்லீம்கள் பக்கமே நின்றார். அதைவிட மைனாரிட்டியான சீக்கியர்கள் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதற்கு அவருடைய எதிர்வினை என்ன? லட்சோபலட்சம் இந்துக்கள், சீக்கியர்கள் உடைமை, உற்றாரை இழந்து, பாலியல் வல்லுறவுக்குள்ளாகி தேசமே கொதித்துப் போன நேரத்தில் இங்குள்ள முஸ்லீம்களை யாரும் தொடக்கூடாது என்று மட்டும் உண்ணாவிரதம் இருந்தால் போதுமே, எதற்காக பாகிஸ்தானுக்குக் கொடுக்க வேண்டிய ஐம்பத்தைந்து கோடியை உடனே தரவேண்டும் என்று அரசை நிர்பந்திக்க வேண்டும்? Has he played the role of more loyal than the King? பாகிஸ்தான்காரர்கள் எத்தனை பெண்களின் மார்பகத்தை அறுத்து இந்தியாவுக்குஅனுப்பினார்கள் என்பதற்கு எண்ணிக்கையேயில்லை. இந்துக்கள் மட்டுமல்ல, சீக்கீயர்களும் கூட காந்தி உயிரோடு இருந்தால், இந்தியா சுக்குநூறாகிவிடும் என்று உறுதியாக நம்பிய காலகட்டம் அது.
20/1/48 அன்று ஆப்தே குழு நடத்திய கொலைமுயற்சி தோல்வியடைந்தது.

கோட்ஸேயை Glorify செய்யக்கூடாது. ஆனால் Mountbatten, பிரதமர் நேரு, பட்டேல் ஆகிய மூவரும் கொலைவிசாரணை செய்த DSP சிங்கிற்கு எந்தவிதமான அழுத்தத்தைத் கொடுத்திருப்பார்கள், எந்தவிதத்தில் விசாரணை இருந்திருக்கும் என்று நம்மால் யூகிக்க முடிகிறது. ஆனால் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தவிர போலீஸால் வேறு எதையும் கோட்ஸேயிடமிருந்து கடைசிவரை வரவழைக்க முடியவில்லை. ஒருவேளை கோட்ஸே தாங்க முடியாமல் சாவர்க்கர் பெயரைச் சொல்லியிருந்தால் இந்தியாவில் RSSன் நிறம் மாறியிருக்கும். கோட்ஸே கடைசிவரை நான் மட்டுமே இதற்குப் பின்னால் என்றதற்கு என்ன ஒரு மனத்திட்பம் இருந்திருக்கும்!

20 January தோல்வியான கொலை முயற்சிக்குப் பிறகு போலீஸாரின் கெடுபிடி அதிகமாகியது. ஆனால் பிப்ரவரி 2 காந்தி, டெல்லியை விட்டுக் கிளம்புவதால், அதற்குள் இன்னொரு முறை முயல வேண்டிய கட்டாயம். நேரம் குறைவு. ஆப்தேக்கு கொலை செய்து விட்டுத் தப்பிவிட வேண்டும். கோட்ஸேயைப் பொறுத்தவரை தனிநபரின் இழப்புகள் முக்கியமில்லை. வேறு எந்த வழியும் தோன்றாததால் ஆப்தே தோழனைக் கைவிடக்கூடாது என்ற ஒரே காரணத்தினால் உடனிருக்க வேண்டியதாகியது.

20ஆம் தேதி பிராத்தனை முடிந்து சில நிமிடங்களில் குண்டு வெடிக்கிறது. சதிகாரர்களில் ஒருவனான மதன்லால், Third degree treatmentல் எல்லாவற்றையும் கக்கிய பிறகும், மீதமிருப்பவர்களை ஏன் போலீஸால் பிடிக்க முடியவில்லை? இன்டெலிஜென்ஸ் எவ்வளவு மோசமாக இருந்திருக்கும். பத்து தினங்கள் முன்பு ஒரு கொலைமுயற்சி நடந்திருக்கும் பொழுது பாதுகாப்பு எவ்வளவு பலமாக இருந்திருக்க வேண்டும்.? பிரதமரும், உள்துறை அமைச்சரும் காந்தியின் இரண்டு லெப்டினன்ட்ஸ், அவர்கள் காந்தியின் மேல் வைத்த அன்பு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. காவல்துறையின் அப்பட்டமான தோல்வியின் முழுஅடியும் பட்டேலின் நெஞ்சில் விழுந்தது.

சாவர்க்கரின் உதவியாளர் மற்றும் பாதுகாவலர் இருவரின் வாக்குமூலமான, கோட்ஸே, ஆப்தே சாவர்க்கரை பலமுறை சந்தித்தது டிரையலில் கொண்டு வரப்படவில்லை. குவாலியரில் கொலைக்கருவியான துப்பாக்கி கொள்முதலில் சாவர்க்கரின் reference இருந்தது என்ற இன்டெலிஜன்ஸ் ரிப்போர்ட் டிரையலுக்கு வரவில்லை. சாவர்க்கர் நீதிமன்றத்தில் கடைசிவரை இருவருடனும் Eye contact வைத்துக்கொள்ளவில்லை. காவல்துறைக்கு குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளி கிடைத்தாகி விட்டது. சாவர்க்கரின் மேல் குற்றம்சாட்ட போதிய ஆதாரம் இல்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டு
காந்தியின் வயதை விடக்கூடுதலாக ஐந்து வருடங்கள் வாழ்ந்து இறந்தார். சாவர்க்கரின் முடிவு மருந்து, உணவு இன்றி தன் ஜீவனைத் தானே போக்கிக்கொண்டது.

Alwar அப்போது Princely State. அதன் முனிசிபல் கமிஷனர் காந்தி இறப்பதற்கு இரண்டு மணிநேரம் முன்பு அவர் இறந்ததாக அறிவிப்பை செய்யாதிருந்தால், Alwar பக்கமே யாரும் திரும்பியிருக்க மாட்டார்கள். Alwar Prime Minister ஓம் பாபா என்று அழைக்கப்பட்ட Khare தீவிர இந்துத்துவவாதி. அவரது வாக்குமூலமும் கோட்ஸேயின் வாக்குமூலமும் வேறுபட்டாலும் டெல்லி போலிஸ் அதற்குள் புகவில்லை. மேலும் Alwar காவல்துறை மொத்தமும் இந்துத்துவாவிற்கு அனுதாபிகள். எதற்காக Alwar State காந்திக்கு எதிராக இயங்க வேண்டும். Alwar மட்டுமல்ல மற்ற Princely statesக்கும் காந்தியின் இந்த Statement எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்:
“The Princes have only to reform themselves and become servants of their subjects. The Congress will be on their side to help them. Unless they mend their ways they will be inviting their own doom.”

இந்தக் கொலை வழக்கின் நீதிபதியாக இருந்த Khosla அவருடைய புத்தகமான Murder of the Mahatmaவில் எழுதியிருப்பது:

” The audience, Khosla wrote, was moved. The room fell silent, with some people in tears, others pretending to hide their tears. Justice Khosla felt as if he were in a scene from a melodrama. Even as he pointed out the irrelevance of what Godse was saying, the audience listened to the murderer, transfixed. To them, Godse’s performance was the only worthwhile part of the court proceedings. ‘I have no doubt,’ Khosla wrote, ‘that had the audience of that day been constituted into a jury and entrusted with the task of deciding Godse’s appeal, they would have brought in a verdict of Not Guilty by an overwhelming majority.’”

எந்த காந்தி கொல்லப்பட்டார்? தேசத்தந்தையும் மகாத்மா என்று நாட்டு மக்களால் பிரியமாக அழைக்கப்பட்டவரா? சுதந்திர இயக்கத்தை தன் அசைக்க முடியாத பிம்பத்தால் கடைசிவரை கட்டுக்கோப்பாகக் காப்பாற்றியவரா? நேரு, படேல் உட்பட்ட மாறுபட்ட சக்திகளை இணைக்கும் சங்கிலியாக இருந்தவரா? அகிம்சையை உலகமெல்லாம் ஏற்றுக்கொள்ளும் மதமாக்கியவரா? தன்னுடைய முஸ்லீம் சார்பு கொள்கைகளினால் கோட்ஸே போன்றவர்களால் Anti national என்று சொல்லப்பட்டவரா?………… இன்னும் எத்தனையோ காந்திகள். தன் வாழ்க்கை முழுதும் தேசத்திற்காக செலவிட்ட, பாபுஜி என்று சிறுவர் முதல் பெரியவர் வரை அழைக்கப்பட்ட, இன்னும் சில வருடங்களில் இயற்கை மரணமடைந்திருக்கும் எழுபத்தெட்டு வயது முதியவரைக் கொன்றது கோட்ஸே மட்டும் தானா?

கோட்ஸே மிகத் தவறான சித்தாந்தத்தைப் பின்பற்றி, வாழ்க்கையைத் தொலைத்த ஒரு இந்தியன். மதச்சார்பற்ற நாடான இந்தியாவை எப்படி இந்து நாடாக மாற்ற முடியும்? கோட்ஸே சென்ற பாதை தவறு ஆனால் கோட்ஸேயின் Determination கேள்விக்கு இடமில்லாதது. காஷ்மீரில் Invaders நுழைந்து மகாராஜா இந்தியப்படையின் உதவியைக் கேட்ட போது, காந்தியிடம் கேட்டுத்தானே நேரு படையை அனுப்பினார்?.எதற்காகப் படையை அனுப்பவேண்டும்? அகிம்சை, சத்தியாக்கிரகத்தை நடத்தி இருக்கலாமே என்பது போல கோட்ஸேயின் பல கேள்விகளுக்கு இன்றும் பதிலில்லை.

இந்த நூல் K P Shankaran போன்ற Gandhian thoughtல் Authority ஆனவர்களிடம், National Archieves, Nehru memorial museum Library, Jeevan Lal Kapur Commission report, டெல்லி மற்றும் புறநகர்களின் CID மற்றும் Intelligence reports ( இவை எளிதில் பார்க்க முடியாதவை) , காந்திகொலையை ரிப்போர்ட் செய்த Foreign Correspondentsகளுடன் கலந்துரையாடி, National Archieves of Londonல் தகவல்கள் சேகரிக்கப்பட்டுப் பின்னர் எழுதப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் பிறகும் மனதால் மட்டுமன்றி, காந்தி இறக்கவேண்டும் என்று நினைத்து, கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்து ஆதாரபூர்வமாகத் தெரிந்த ஒரே ஆள் நாதுராம் கோட்ஸே மட்டுமே. ஆனால் கோட்ஸே எல்லாமே தான் மட்டுமே, வேறு யாருமில்லை என்றதுடன் இந்த விசயத்தில் இருள் சூழ்ந்து கொள்கிறது.

English

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s