Poor Folk முதலில் பதிப்பு கண்ட தஸ்தயேவ்ஸ்கி நாவல். Belinskyயிடம் கொடுத்த கையெழுத்துப்பிரதி, ஜனவரி 15, 1846ல் Petersburg Almanacல் Nikolai Nekrasov எடிட் செய்து வெளியாகிறது. இருவர் ஒருவருக்கொருவர் எழுதும் கடிதங்களே இந்த நாவல். இது வெளியாகி இரண்டு வாரங்களில் The Double என்ற மற்றொரு நாவல் வெளியாகிறது. இரண்டும் குறுகிய காலத்தில் வெளியாகி இருந்தாலும் இரண்டுக்கும் நடுவில் எவ்வளவு வித்தியாசங்கள். The Master has arrived.

“How is it that YOU are so unfortunate, Barbara? How is it that YOU are so much worse off than other people? In my eyes you are kind-hearted, beautiful, and clever—why, then, has such an evil fate fallen to your lot? How comes it that you are left desolate—you, so good a human being! While to others happiness comes without an invitation at all? Yes, I know—I know it well—that I ought not to say it, for to do so savours of free-thought; but why should that raven, Fate, croak out upon the fortunes of one person while she is yet in her mother’s womb, while another person it permits to go forth in happiness from the home which has reared her?”

நாவலில் ஒரு கதாபாத்திரம் Kitchenல் வசிப்பதாகச் சொல்கிறார். அங்கே வசிப்பது வசதியாகவும், Economical ஆகவும் இருப்பதாகச் சொல்கிறார். பலப்பல வருடங்கள் கழித்து Banana Yoshimotoவின் கதாநாயகி Kitchen நாவலில் இதையே சொல்லப்போகிறாள்.

Aristocrats மற்றும் படித்தவர்கள் மட்டுமல்ல, படிக்காத சாமானியர்களும் கடிதங்கள் மூலம் உணர்வை வெளிப்படுத்த முடியும் என்பதை நிரூபிக்க இந்த வடிவத்தைத் தஸ்தயேவ்ஸ்கி
தேர்ந்தெடுத்திருக்கக்கூடும். இன்னொன்று மனதின் ஆழத்தில் இருந்து இருவர் அவர்கள் உணர்வுகளைத் தெரிவிக்க, இரண்டு கதைசொல்லிகளை விட, கடிதங்கள் மேல் என்று தஸ்தயேவ்ஸ்கி நினைத்திருக்கலாம். இந்த நாவலை எழுதுகையில் அவர்வயது 24.

பதினேழு வயதுப் பெண்ணும், நாற்பத்தேழு வயது ஆணும் காதலில் விழுவது அவளது சூழ்நிலை. தவறான உறவினரால் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு வந்து போகும் ஒருவரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாகி, ஒருவனைக் காதலித்து, அவனும் இறந்து எல்லாம் பதினேழு வயதுக்குள் முடிகிறது.

Makar கடைநிலை ஊழியன் மட்டுமல்ல, அலுவலகத்தில் எல்லோராலும் கேலி செய்யப்படுபவன். குடித்து விட்டு,தெருவில் அலைந்து, காவல்துறையினர் கண்டித்ததை பெரிய அவமானமாகக் கருதுபவன். வாழ்வில் எந்த மாற்றமும் இல்லாது, அழுக்கு உடைகளுடன் அலைந்து திரிந்தவனைக் காதல் மாற்றுகிறது. காதலிக்காக கைமாற்று வாங்கி மேலும் கடனாளியாகவும், வறுமையிலும் விழுகிறான்.

புஷ்கின் புத்தகங்கள் மேல் இரு கதாபாத்திரங்களுக்கு இருக்கும் காதல், மகன் இறந்து சவப்பெட்டியின் பின் செல்லும் தகப்பனின் பையில் இருந்து புத்தகங்கள் விழுவது, பாலியல் வல்லுறவைப் பூடகமாகச் சொல்வது (எப்படி பத்தொன்பதாம் நூற்றாண்டு வாசகர்கள் புரிந்து கொண்டனர்!) நூறு ரூபிள்களை விட, மேலதிகாரியின் கைகுலுக்கல் Makarன் மனதைக் கொள்ளை கொள்வது, பட்டினியில் கிடந்த குடும்பம் கணிசமான பணம் வரும் என்று தெரிந்ததும் எப்படி அந்த செய்தியை எதிர்கொள்வது என்று தெரியாது தவிப்பது, Barbara எடுக்கும் முடிவு என்று தஸ்தயேவ்ஸ்கியின் Artistical touches அவரது முதல் நாவலிலேயே.

காதல் கதை என்றாலும், சமூகத்தில் வர்க்க வேறுபாடு, பணம் படைத்தவர்கள் துளியும் குற்றஉணர்வு இல்லாதிருத்தல், சமூகநீதி இல்லாது போதல், அவமானங்கள் என்று எல்லாவற்றையும் பேசுகிறது. கடவுள் எனக்கு விதித்தது இவ்வளவு தான் என்று காலதேசவர்த்தமானமில்லாது, மக்களுக்கு அமைதி கொள்ள ஒரு புகலிடம் கிடைக்கிறது. உண்மையான காதல் எப்போதும் கொடுப்பது, பெறுவது அல்ல, இழப்பது, அடைவது அல்ல.

English

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s