ஆங்கிலத்தில் புக்கர் மற்றும் National Book award போன்ற போட்டிகளில் வரும் நாவல்களையும், தமிழ் நாவல் போட்டிக்கு வரும் நாவல்களையும் ஒப்பிட முடியாது. முன்னதில் பலநாடுகளின் படைப்புகள் பங்கு பெறுகின்றன. தேர்வுமுறை, எதிர்பார்ப்புகள், தரம் எல்லாமே வேறுபடும். இருப்பினும் யாவரும் மற்றும் Zero Degree நடத்திய போட்டிகளில் விருதுபெற்ற/இறுதிசுற்றுக்கு வந்த நாவல்களைப் படித்தபின் இதை யோசிக்காமல் இருக்க முடியவில்லை.

2020ல் புக்கர் நீண்ட பட்டியலில் இடம்பெற்ற Hilary Mantel இறுதிப்பட்டியலில் வரவில்லை. அது தெரிந்ததும் அவருடைய எதிர்வினை
” Disappointed but freed “. 2021 புக்கரில் நோபல் பரிசு வென்ற Kazuo Ishiguro நீண்ட பட்டியலில் இடம்பெற்று, இறுதிப்பட்டியலில் நுழையவில்லை. Ishiguro இம்முறை எதிர்வினை செய்யாத போதும், சென்றமுறை புக்கர் குறித்துப் பேசிய போது,
புக்கர் விருதுகள், பிரான்ஸ் நாட்டைப் போல நாவலாசிரியருக்கு விருது வழங்காது, நாவலுக்கு விருது வழங்குவதும், அதிகம் தெரியாத அல்லது முதல்முறை நாவலாசிரியர் பட்டியலில் வருவதும் முக்கியமான விசயம் என்றிருந்தார்.

தமிழில், இந்த இரண்டு பதிப்பகங்களும் போட்டியை ஆரம்பித்து, ஒரு நல்ல முன்னெடுப்பைத் தொடங்கியிருக்கின்றன. Zero degree இறுதிப் பட்டியலில் வாசு முருகவேலும், கணேச குமாரனும் ஏற்கனவே நூல்கள் வெளியிட்டுப் பரிட்சயமானவர்கள். மற்றவர்கள் நாவலுக்குப் புதியவர்கள். யாவருமில் நால்வர் நாவலுக்குப் புதியவர்கள். புதிய படைப்புகள் பட்டியலில் வருவது உலகமெங்கும் உள்ளது. ஆனால் Popular Senior writers யாருமே இந்த இரண்டு நாவல் போட்டிகளில் கலந்து கொள்ளாதது ஆச்சரியமான விசயம். விருதுத்தொகை குறைவு என்பது தான் காரணமாக இருக்கும் என்று நான் நம்பவில்லை. புதியவர்களுடன் சேர்ந்து ஒரு போட்டியில் பங்கேற்க மனமில்லை அல்லது போட்டிகளையெல்லாம் தாண்டிய நிலையில் தான் இருப்பதாக நம்புவது, இரண்டில் ஒன்றாகவே இருக்கக்கூடும். ஒவ்வொரு பிரதியும் பரிசீலனைக்கு உட்பட்டது என்ற
மனப்பான்மை இல்லாது, பெயர்பெற்ற எழுத்தாளர் எழுதுவது எல்லாமே பிரசாதம் என்று பவ்யமாக ஏந்திக் கொள்ளும் வாசகர்களும் இந்த தமிழ்சூழலுக்குப் பாதி பொறுப்பாளிகளாகிறார்கள்.

இன்னொரு வகையில் பார்த்தால், மூலப்பிரதி Vs அச்சுப்பிரதி. லாவண்யாவின் காயாம்பூ நாவலை அச்சுக்கு முன் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப்பிரதியில், நாவலில் பலஅடுக்குகள் இருந்தன. மையஇழை குழந்தையின்மை அல்லது குழந்தை பெற்றும் உருப்படியில்லாதது என்றே இருந்தது. மீறல்கள் இருந்தன, பல திசைகளில் பயணம் செய்யும் கதைகள் இருந்தன. எல்லாமும் சேர்த்து நாவலின் கட்டமைப்பு குலையாமல் இருந்தது. அந்தப் பிரதிக்கும், அச்சுப் பிரதிக்கும் நடுவில் எத்தனை பேர் ஆலோசனை என்பது தெரியாது, பல சங்கிலிக்கண்ணிகள் அறுபட்டு விட்டன. இப்போதிருக்கும் நாவலை சுமார் என்று நான் சொல்லவில்லை, நான் சொல்வது அந்தப்பிரதி அச்சுப்பிரதியைக் காட்டிலும் பலமடங்கு சிறந்தது. லாவண்யாவின் முதல் நாவல் இது, இதுவே பத்துநாவல்கள் எழுதிய Established writers என்றால், யாரும் வலியப்போய் யோசனை சொன்னாலும், உங்கள் புத்தகத்தில் இந்த யோசனையைப் பயன்படுத்துங்கள் என்றிருப்பார்கள்.
எல்லாவற்றையும் சேர்த்துப் பார்க்கையில்
தமிழின் நாவல்களை விட, நாவல்களின் பின்னிருக்கும் அரசியல் சுவாரசியமான விசயமாக இருக்கிறதல்லவா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s