சடம் – ஜெயமோகன்:

ஒரே நேரத்தில் எழுதப்பட்ட இரண்டு காவல்துறைக்காரர்களின் கதைகள். இரண்டும் எதிரெதிர் திசையில் பயணிக்கின்றன. சவடால் போலிஸே இரண்டிலும் இருக்கும் ஒற்றுமை. ஜடம் என்றால் அன்னமயலோகம் என்கிறான் சிஷ்யன். ஆனால் ஜடம் என்பது வேறு அர்த்தத்தில், கதை முழுக்க வருகிறது. சிஜ்ஜடம், சித்தத்தை ஜடம் ஆட்கொள்வது.
கடைசிவரியில் கதையை U turn செய்யும் வித்தை தெரிந்தவர் ஜெயமோகன். சுடலைப்பிள்ளை ஒரு சுவாரசியமான கதாபாத்திரம்.

https://lm.facebook.com/l.php?u=https%3A%2F%2Folaichuvadi.in%2Fstory%2Fsadam-jeyamohan-story%2F&h=AT1g0nrTdIBHixLwceB16fa6nUBBTyHUVQlG3fFELmTfWugdxobsdszUTumZJC9csZKa3G6vZOTn5xH7RHeRBqSlKGn5dE7c6dOWFW-5GOAKRS9Eg2JttJ2VpuMCy-G1Bao-xqvYz9Zb-aceLMaX

தொற்று -வா.மு.கோமு:

கோமுவின் கதை ஒரு கிராமத்தில் மனிதவாழ்வு அழிந்து சூனியம் சூழ்வதை அழகாகச் சொல்கிறது. டைகர் என்னும் நாய் மௌன சாட்சியாக இருக்கிறது. வண்ணநிலவனின் மிருகம் கதை நினைவுக்கு வந்தது. அந்தக் கதை இதற்கு நேரெதிர். கட்டெறும்புகள் ஊர்வது மரணநெடியின் குறியீடு. மீராவின் Poison of Loveல் சிற்றெறும்புகள் மரணஅழைப்பின் குறியீடாக வரும். கோமுவின் மொழிநடை இந்தக் கதையின் அழுத்தத்தை அதிகரிக்கிறது. Perfectly presented story.

மதவிலாசம் – சுஷில்குமார்:

சுஷில்குமாரிடம் இருந்து முற்றிலும் வித்தியாசமான கதை. மதங்கள் எப்போதும் துவேஷத்தையே வளர்க்கும். எவ்வளவு காலம் பழகியிருந்தாலும் மதம் பிரிவினையை ஏற்படுத்தும். மதங்கள் அற்ற சமுதாயத்தில் மட்டுமே Humanity நிலைத்து நிற்கும். நண்பர்கள் இருவருக்குள் அடுத்தவனை மதம் மாற்றத் துடிப்பது இஸ்லாமைச் சேர்ந்தவன். உலகத்திலேயே அதிகம் மற்றவரை மாற்றத்துடிப்பது கிருத்துவர்கள் தான். எங்கே Anti conversion law வந்தாலும் முதலில் எதிர்ப்பவர்கள் அவர்களே. மற்ற கடவுளை சாத்தான் என்பவன் உண்மையில் தெய்வ நம்பிக்கை இல்லாதவன். அவரவர்க்கு அவரவர் மார்க்கம் என்பது சாத்தியமேயில்லை, பின்னால் மறைத்த கையில் கத்தி கண்டிப்பாக இருக்கும். மதங்கள் அழிவதே ஒரே வழி. கடைசி வரிகளில் சுஷில் தெரிகிறார்.

விளிம்பு- வைரவன் லெ.ரா:

விளிம்பு கதை Hallucinationஆ இல்லை Fantasyஆ புரியவில்லை. எதுவாக இருந்தாலும் ஒரு சிறுகதைக்குரிய அம்சம் இதில் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s