தஸ்தயேவ்ஸ்கியின் சுயசரிதைக் கூறுகள் நிறைந்த நாவல் இது. சைபீரியச் சிறையின் அனுபவங்களின் தொகுப்பு இந்த நாவல். Petrashevsky நண்பர் கூடுகையில் இருந்த காரணத்தினால், சதிவழக்கு பதியப்பட்டு, மரணதண்டனை வரை கொண்டு செல்லப்பட்டு பின் சைபீரியக் கடுங்காவலுக்குக் கொண்டு செல்லப்படுகிறார். மார்க்சியம் பரவலாகத் தெரியாத காலம் அது. Communist Manifestoவே 1848ல் தான் வெளியாகிறது. கிருத்துவப் போதனைகள் மூலம், வர்க்கபேதத்தைக் களைந்துவிடலாம் என்ற கொள்கையைக் கொண்ட இந்தக்குழுவில் இருந்த தஸ்தயேவ்ஸ்கி சிறைத்தண்டனை அனுபவிக்க நேர்ந்தது, ஒரு Dark humour. மற்ற நாவல்களில் இருந்து வேறுபட்ட மொழிநடையும், Intensityயும் கொண்ட நாவல் இது. டால்ஸ்டாய், இதுவே தஸ்தயேவ்ஸ்கியின் மாஸ்டர்பீஸ் என்று ஒருமுறை கூறியிருக்கிறார்.

Petrashevskyயின் குழுவில் கூட தஸ்தயேவ்ஸ்கி தீவிரமாக இயங்கியதில்லை. சதி என்று, இன்று கூட நாம் யாரை வேண்டுமானாலும் சொல்ல முடியும். தஸ்தயேவ்ஸ்கியின் குற்றம் என்ன? மரணத்தண்டனை (Eventhough it was a mock punishment) வரைக் கொண்டு செல்ல வேண்டிய குற்றத்தின் பின்னணி என்ன? ரகசியப் போலீஸ் தவறான அறிக்கை கொடுத்திருக்கலாம், ஆனால் எந்த தவறும் செய்யாத நான் இப்படி எல்லாம் பாதிக்கப்பட்டேன், நான் அப்பாவி, Victim என்று தஸ்தயேவ்ஸ்கி ஏன் நேரடியாகச் சொல்லவில்லை? கிருத்துவ மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட தஸ்தயேவ்ஸ்கி, இயேசு தன்னைப்போலவே இந்தத் தண்டனையை ஏற்றுக்கொள்ள இவரைத் தேர்ந்தெடுத்ததாக நினைத்திருக்கலாமோ?

மனைவியைக் கொன்ற குற்றத்திற்காக சைபீரியச் சிறையில் அடைக்கப்படும் ஒருவனின் பார்வையில் சைபீரியச்சிறை குறித்துச் சொல்லப்படுகிறது. போதைப் பொருட்கள், வோட்கா, விபச்சாரிகள், ஆயுதங்கள், பணம் என்று எல்லாமே தாராளமாகப் புழங்கியிருக்கின்றது அச்சிறையில். எளிதில் இணங்கக்கூடியவர், Bullies, வட்டிக்கு விடுபவர் என்று பலதரப்பட்ட மனிதர்களும் அந்தச்சிறையில். தீவிரக் கிருத்துவர் ஒருவரைக் கதைசொல்லி நட்பாக்கிக் கொள்கிறான்.

சைபீரியச் சிறையின் கடுமையான தட்பவெப்பநிலை பற்றிய குறிப்புகளுடன், பலவிதமான குணாதிசயங்கள் கொண்ட
மனிதர்கள் வருகிறார்கள். பைபிளை விற்று வோட்கா வாங்குகிறான் ஒருவன். அவனே கதைசொல்லியின் Intellectual companion. எல்லோரது நகைப்புக்கும் ஆளாகும் Isaiah.
ஜெர்மன் பெண்ணைக் காதலித்து அவள் பணக்கார ஜெர்மன் ஒருவனை மணம் செய்யப் போகிறாள் என்று தெரிந்ததும், அவனைக் கொலைசெய்து சிறைக்கு வந்த மனிதன் என்று மனிதரில் எத்தனையோ நிறங்கள்.

ஜார் மன்னரின் அரசாட்சியில், ரஷ்ய அரசியல், தண்டனைகள், சிறை வாழ்க்கை, குறுவிவசாயிகள் மற்றும் தொழிலாளர் வாழ்க்கை குறித்த தகவல்கள் நாவலின் இடையிடை வருகின்றன. எளிய மக்களின் கதையை, அவர்களது குரலாக, தன் கண்முன் பார்த்த சம்பவங்களை வைத்து தஸ்தயேவ்ஸ்கி எழுத எண்ணியிருக்க வேண்டும். கதைசொல்லியோ அல்லது வேறு கதாபாத்திரங்களோ தஸ்தயேவ்ஸ்கியின் சாயலில் இந்த நாவலில் இல்லை. Writer’s diaryல் தன்னை முன்னிலைப்படுத்தி சம்பவங்களைச் சொல்லியது போல் இந்த நாவலில் செய்யவில்லை.

Mock execution தஸ்தயேவ்ஸ்கியை கிருத்துவ மதத்தில் இன்னும் ஆழ்ந்த நம்பிக்கை வைக்கும்படி செய்தது. அவரது இறை நம்பிக்கையில் கடைசிவரை சற்றும் தளரவில்லை. அதே போல் சிறை வாழ்வில் அதிக எண்ணிக்கையில் இருந்த எளிய மக்களுடன் கழித்த வருடங்கள் அவரது Upper class mentalityயில் இருந்து, இவர்கள் நிலையை empathize செய்ய வைத்தது. நல்ல உணவுக்காகப் போராடுகையில் கதைசொல்லியை அவர்கள் சேர்த்துக் கொள்ளாமல் கும்பலில் இருந்து தள்ளுவதாகக் காட்சி ஒன்று வரும். கிருத்துவ மத நம்பிக்கைகள் குறித்துப்பல விசயங்கள் இந்த நாவலில் வரும். கிறிஸ்துமஸ்ஸை மற்ற பேதங்களை எல்லாம் மறந்து, மது, நல்ல உணவு, பொழுதுபோக்கு அம்சங்களுடன் சிறையில் எல்லோரும் கொண்டாடும் ஒருபகுதியும் நாவலில் வருகிறது.

Poor folk மற்றும் சிறுகதைகள் மூலமாகப் பரவலான கவனத்தைப் பெற்ற தஸ்தயேவ்ஸ்கி சில நூல்களுக்காக எதிர்மறை விமர்சனத்தைச் சந்திக்க நேர்ந்த போதும் அவருடைய கலைநேர்த்தியை யாரும் சந்தேகிக்கவில்லை. ஆனால் சிறை வாழ்க்கை முடிந்து இந்த நாவலுக்குப் பிறகு,எழுதிய பல நாவல்கள் அவரை ருஷ்ய மாஸ்டர்களின் முன்னிருக்கைக்குக் கொண்டு வந்தன. சிறையில் தகப்பனைக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட ஒருவனின் கதை பின்னாளில் The Brothers Karamazovக்கு உபயோகமாகியது போல் பல கதைகள் அங்கே அவருக்குக் கிடைத்திருக்கும். சிறை வாழ்க்கைக்குப் பின்னரே அவருடைய எல்லா உன்னத நாவல்களும் எழுதப்பட்டன.
ஒருசிறு இடைவெளிக்குப் பின்னர் தஸ்தயேவ்ஸ்கியை மீண்டும் சந்திக்க வேண்டும்.

English

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s