தஸ்தயேவ்ஸ்கியின் மற்ற நாவல்களில் இருந்து முற்றிலும் விலகிய நாவல் இது. அவருடைய மூன்றாவது நாவலான இது Gothic Literature Genre முயற்சி.
1847 ல் வெளியாகியது. இதே வருடத்தில் தான் இன்றளவும் Gothic Literature ல் தலைசிறந்த நாவல் எனக் கருதப்படும், Jane Eyre வெளியாகியது. இப்போது இதைப் படிக்கும் பொழுது தஸ்தயேவ்ஸ்கி இதை மிகச்சிறிய நாவலாக எழுதியது தான் இந்த நாவலின் தோல்விக்குக் காரணம் என்று தோன்றுகிறது.

முதலாவதாக, நமக்கு எளிதாகப் புரியும் மந்திரவாதிக் கதைகள் மேலைநாட்டினர் எல்லோருக்கும் புரியும் என்று சொல்வதற்கில்லை. அங்கேயும் Folktalesல்
sorcerer வந்தாலும், நவீன இலக்கியத்தைப் படிக்கும் பிரிவினர் வேறு. அவர்கள் Fantasyஐ ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு, இது போன்ற விசயங்களை ஏற்றுக் கொள்வதில்லை.

அடுத்து ஏற்கனவே கூறியது போல் Charlotte Bronteன் மாஸ்டர்பீஸ் Jane Eyre இதே Genreல் அதே வருடம் வெளியாகி, இலக்கிய அந்தஸ்தில் மிக உயர்ந்த ஸ்தானத்தில் இன்றும் இருப்பதால் இந்த நாவலை யாரும் பொருட்படுத்தவில்லை. தஸ்தயேவ்ஸ்கி என்ற பெயருக்காக இது உன்னதமான நாவல் என்று நம்மவர்களைப் போல் சொல்லவும் அதை ஏற்றுக்கொள்ள இங்கு போல் கணிசமான ஜனத்திரளும் தஸ்தயேவ்ஸ்கிக்கு இல்லாததும் ஒரு காரணம்.

Oldmanக்கும் Katerinaவுக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக Katerina வின் அம்மா அவ்வளவு கோபப்படவேண்டும்? எதற்காகத் தீ விபத்து திடீரென நடைபெறவேண்டும்?
எதற்காக Katerina அவ்வளவு துயரத்தில், நான் பாவம் செய்தவள் என்று சொல்ல வேண்டும்? தஸ்தயேவ்ஸ்கியின் எழுத்தில் இருக்கும் அதீதநுட்பம் ஒரு Incest relationshipஐ
பல வாசகர்களும் கவனிக்காது கடக்கச் செய்து விடுகிறது.

White Nightsன் கதாநாயகனுக்கும் இந்த நாவலின் கதாநாயகனுக்கும் அனுசுயாவுக்கும், அம்மணிக்கும் இருக்குமளவு ஒற்றுமை இருக்கிறது. அதே போல் இந்த Landlady தஸ்தயேவ்ஸ்கியின் Subconsciousல் ஒளிந்திருந்து வேறு ரூபத்தில் Crime and Punishmentல் வெளி வந்திருக்க வேண்டும்.

Ordynov காய்ச்சலில் விழுந்து கிடக்கும் பொழுது Oldman னுடன் ஏற்படும் துப்பாக்கி சம்பவம், Oldmanஐக் கொல்ல நினைப்பது எல்லாமே Hallucinationக்கும் கண்கட்டி வித்தைக்கும் இடையில் இருப்பது பல வாசகர்களுக்கு புரிதலில் சிரமங்களை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.

Ordynov முதல் பார்வையிலேயே காதலில் விழுவது, அவன் சிந்தனை முழுவதையும் Katerina ஆக்கிரமிப்பது என்பது எப்போதும் நிகழ்வது. ஆனால் Oldman, Katerinaவை Brainwash செய்து அவனது Controlல் வைத்திருப்பது மீண்டும் காலத்திற்கு முன்பு சொல்லப்படும் ஒருவிசயம். எப்படியாகினும் இது குறைந்தபட்சம் இருநூறு பக்கங்கள் குறைவாக எழுதப்பட்ட நாவல்.

English

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s