ஆந்த்துவான் த சேந்தெக்ஸுபெரி:

இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர்களில் ஒருவர். பத்திரிகையாளர். விமானி. பல பிரெஞ்சு இலக்கிய விருதுகளையும் USAன் National Book Awardஐயும் வென்றவர். எல்லாவற்றிற்கும் மேல் The Little Prince என்ற படைப்புக்காக உலகவாசகர்கள் அனைவருக்கும் நெருக்கமானவர். Aviation writing வகையில் மூன்று குறுநாவல்களை எழுதியவர். அதில் Night Flight என்பதன் மொழிபெயர்ப்பு இது.

எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி:

புதுவை மாநில பல்கலை முன்னாள் பிரெஞ்சுத்துறைத் தலைவர். மொழிபெயர்ப்புக்காக பல விருதுகள் பெற்றவர். தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் இருந்து மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

ஆந்த்துவான் Night Airmailஐக் கொண்டு செல்லும் விமானியாகப் பணிபுரிந்தவர். அப்போது தொழில்நுட்பம் தகவல் துறையிலும் சரி, விமானத்தின் கட்டுமானத் தொழில்நுட்பத்திலும் சரி வளர்ச்சி அடையாத நிலை. 1903ல் விமானம் ரைட் சகோதரர்களால் கண்டுபிடிக்கப்படுகிறது, இந்த நூல் 1931ல் வெளியாகிறது. இந்தப் பின்னணியிலேயே இந்த நாவலை வாசிக்க வேண்டும்.

இரண்டு மையக்கதாபாத்திரங்களை வைத்து நகரும் சிறிய நாவல். தனிமனிதனுக்கு உணவில்லையெனில்……
என்பது கவிஞனின் அறச்சீற்றம். நிஜவாழ்க்கையில் தனிமனித இழப்புகள் பொருட்படுத்தப்படுவதில்லை. Greater goodஐ இலட்சியமாகக் கொண்டவர்கள், சொந்த விருப்புவெறுப்புகளையோ, மனம் கைகாட்டும் விசயங்களையோ ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களின் பிடிவாதம் பெரும்பாலும் விமர்சனத்துக்குள்ளாகும், அவர்கள் நோக்கம் கேள்விக்குள்ளாகும், ஆனாலும் அவர்கள் அதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. உங்களுக்குப் பிடித்தமான, வெற்றிபெற்ற, எந்தத் தலைவரை எடுத்துக் கொண்டாலும், இந்தப் பிடிவாதம் இருந்தே தீரும்.

Semi autobiographical elements கலந்த இந்த நாவல், முதல் பாதியில் ஏதோ விமானியின் அல்லது Aviation engineerன் நாட்குறிப்பு போலக் காட்சி அளிக்கிறது. பாதிக்குப்பின் கதை முழுவேகத்தை எடுக்கிறது. இன்றும் விமானப்பயணம் ஆபத்தானதாகக் கருதும் வேளையில், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தொழில்நுட்பம் வளராத காலத்தில், விமானிகளின் நிலையையும், அவர்களது தைரியத்தையும் பற்றி சிறிதுநேரமேனும் யோசிக்க வைக்கும் நாவல் இது.

ஆந்த்துவான் வாழ்க்கைக்கும் இந்த நாவலுக்கும் இன்னொரு வகையிலும் தொடர்பு இருக்கிறது. அவருடைய மறைவும் எப்படி என்று பலகாலம் கேள்விக்குறியாகவே இருந்தது. விமானத்தைக் கடைசியாக ஓட்டிச்சென்ற ஆந்த்துவான் திரும்பாமலேயே மறைந்து விட்டார்.

பிரெஞ்சிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்ட நூல், இரண்டாவது மொழிபெயர்ப்பின் குறைபாடுகளைக் கடந்திருக்கிறது. நல்ல, சரளமான மொழிபெயர்ப்பு. “கடவுளின் கைபோல் அவளுக்குள் ஆயிரமாயிரம் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பிய தெய்வீகக்கை அது” இந்த வரிகளை விட, மொழிபெயர்ப்பை விட, இதைச்சொல்லுமிடம் நம்மைச் சிலிர்க்க வைக்கும். Another Masterpiece from
Antoine de Saint-Exupery.

பிரதிக்கு:

காலச்சுவடு பதிப்பகம் 4652-278525
முதல்பதிப்பு அக்டோபர் 2021
விலை ரூ.125.

One thought on “விடியலைத் தேடிய விமானம் – ஆந்த்துவான் த சேந்தெக்ஸுபெரி- பிரெஞ்சிலிருந்து தமிழில் எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s