American Academy of Achievementன்படி இவரது அடுத்தடுத்த இருபத்தெட்டு நாவல்கள் தொடர்ந்து Best seller listல் இருந்திருக்கின்றன. இந்த நாவல், இருபத்தொன்பது, பட்டியலில் பலவாரங்களாக முதலில் நிற்கிறது. இவரது அச்சு நூல்கள் 30 கோடிக்கும் மேல் விற்பனையாகி இருக்கின்றன. முதல்பதிப்பிலேயே இருபது லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்கும், மூன்று எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.

லேஸிக்கு இன்னும் ஏழுமாதத்தில் நாற்பது வயதாகப் போகிறது. ஒரு ஆண் நண்பன், வேறு நகரத்தில், எப்போதேனும் சந்திப்பு.
சட்டக்கல்லூரியில் இவளுடன் படித்தவர்கள் பெரிய நிறுவனங்களில் சேர்ந்து விட்டார்கள்.
இவளுடன் படித்த பெண்களுக்கு, மணமாகி,
குழந்தைகள், சிலருக்கு பதின்மவயது குழந்தைகளும் உண்டு. திருமணத்திற்கோ அல்லது குழந்தைகளுக்கோ இவள் வாழ்வில் சந்தர்ப்பம் இருப்பதாகத் தோன்றவில்லை. பன்னிரண்டு வருடங்களாக இவள் வேலைபார்க்கும் Board of Judicial Conductக்கு அரசாங்கம் நிதிஉதவியை வருடாவருடம் குறைத்துக் கொண்டே வருகிறது. இவளது Careerல் மிகப்பெரிய கேஸான நீதிபதிக்கு இன்னொரு பெண்ணுடனான தொடர்பு வழக்கின் பின் நடந்த Hit and Run விபத்தில் இவளது கூட்டாளி இறக்கவும், இவள் பலமாதம் மருத்துவமனையில் இருக்கவும் நேரிட்டது. அதற்கு கோரிய நட்டஈடு வழக்கு இன்னும் Trialக்கே வரவில்லை. இதுவே லேஸியின் தற்போதைய நிலை. இந்த நேரத்தில் ஒரு Sitting Judgeஐ Serial Killer என்று ஒரு பெண் லேஸியிடம் புகார் சொல்லி விசாரிக்கக் கோருகிறாள். Monotonous and purposeless lifeல் இருந்து லேஸிக்கு Natioal sensationஐ உருவாக்கும் ஒரு வாய்ப்பு.

Absolute Power என்ற நாவலில் Baldacci,.sitting Presidentஐ ஒரு கொலையுடன் சம்பந்தப்படுத்தி இருப்பார். அமெரிக்காவில்
Sitting Judgeஐ சீரியல் கில்லராக சித்தரிப்பது
பெரிதல்ல. ஆனால் இதில் Legal pricedures மட்டும் வருவதில்லை, Police procedures வருகிறது, FBI profiling குறித்து வருகிறது, Private investigator procedures, கைரேகையை மாற்றுவது, சட்டக்கல்லூரிகளில் நடக்கும் விசயங்கள் வருகிறது. இவ்வளவு பெயர்பெற்ற எழுத்தாளர் எல்லா Procedures குறித்தும் எழுதுகையில் அது குறித்து ஆய்வு செய்யாமல் எழுத முடியாது.
அந்தந்த துறை சார்ந்தவர் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஒரு சிறிய Slipக்காக காத்திருக்கையில் எழுதுவது கடினம். அத்துடன் American Professional midlife crisisம் அழகாக சேர்ந்து வருகிறது. அது தான் Grisham.

ஒரு கொலை நடந்தால் விசாரணையில் முதலில் பார்ப்பது Motive. ஆனால் போலீஸுக்கு Motive கிடைக்காமல், Cold cases ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? இதுவே நாவலில் Catchy point. கொலையாளி காத்திருக்கிறான். பத்துவருடம், பதினைந்து வருடம் பழிவாங்கக் காத்திருக்கிறான். பழிவாங்குவதும் கூட பெரிய காரணங்களிற்காக இல்லை, எல்லோர் முன்னும் கேலிசெய்து சிரித்தது கூட காரணம். இதனாலேயே Motive என்பது விசாரணையில் தெரியாமல் போகிறது, கொலைகாரனும், Grishamமும் இதை வைத்தே நாவலில் விளையாடுகிறார்கள்.

முந்தைய நூல் Sooley ஏப்ரல் 2021ல் இது அக்டோபர் 2021ல் வெளியாகி இருக்கின்றன. ஒன்றை முடித்து விட்டு மற்றொன்றை எடுத்திருக்க வாய்ப்பில்லை, இதற்குண்டான ஆய்வு தனியாக நடந்திருக்கும். மேலும் Lacy ஏற்கனவே Whistler என்ற நூலில் வந்த கதாபாத்திரம். இருந்தும் இந்த நாவலில் இருக்கும் Perfectionஐ எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. It is so lonely at the top, அதனாலேயே Grisham தனக்குத் தானே Competitor என்ற விளையாட்டை ஒவ்வொரு நூலிலும் உருவாக்கிக் கொள்கிறார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s