தமிழில் எழுதுவதற்கும், ஆங்கிலத்தில் எழுதுவதற்கும் மிக முக்கியமான வித்தியாசம் கலவையான வாசகர்கள். அதே நேரத்தில் எழுத்தாளர்களைப் பொறுத்தவரைக் கும்பலில் தொலைந்து போகவும் வாய்ப்பு இருக்கிறது. Misplaced Heads என்ற வெற்றிகரமான நாவலைத் தொடர்ந்து இந்த நாவல். Delhi Wireன் 50 Most Influential Authors பட்டியலில் இந்த நூலும், இவர் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. தமிழில் இருபது நூல்களுக்கும் மேல் எழுதிய ஜெயந்தி சங்கரை அதிகம் பேர் படித்ததில்லை.
இந்த நாவல் ஒரு Historical Fiction. வழக்கமான Historical fictionல் இருந்து விலகி, நாவல் பல அடுக்குகளைத் தனக்குள் அமைத்துக் கொள்கிறது. இந்த நாவலின் கரு பதினைந்து வருடங்கள் வெளிவரக் காத்திருந்ததாக ஜெயந்தி பின்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். National Library Boardல் இருந்து பெரும்பாலான தகவல்கள் சேகரிக்கப்பட்டு இருக்கின்றன. கதை முழுதுமே சிங்கப்பூரைச் சுற்றியே நடைபெறுகின்றது.
கொலைமுயற்சியில் தப்பித்த இளவரசன், இந்தத் தீவின் அழகில் கவரப்பட்டு, தனக்கெனத் தனிநாடாக சிம்மபுராவை உருவாக்குகிறான். அதன்பிறகு Sir Stamford Raffles (William Farquhar?) நவீன சிங்கப்பூரை உருவாக்குகிறார். பதிமூன்றாம் நூற்றாண்டுக்கும், நடப்பு காலத்திற்கும் Time machineல் உட்கார்ந்தது போல் நாவலில் காலம், முன்னும் பின்னும் நகர்கின்றது. கதை பின்நவீனத்துவக் கூறுகளில் சொல்லப்பட்டதால், நேர்க்கோட்டில் நகர்வதில்லை.
ஒரு Broad angleல் இந்த நாவலை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று காலம்தோறும் சிங்கப்பூர். ஆளற்ற தீவுக்கு ஏதோ காரணத்திற்காக வருகிறார்கள், பின்னர் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் அது ஒரு தொழில்மைய நகரமாகிறது, சீனர்கள் ஏராளமாக வந்து தலைமுறை தலைமுறைகளாகத் தங்குகிறார்கள். இடையில் சிங்கப்பூர் ஜப்பானியர் வசம் மூன்று வருடங்கள், மூன்று மாதங்கள். இரண்டாம் உலகப்போருக்குப்பின் மீண்டும் ஆங்கிலேயர். சீனா, இந்தியா, பங்களாதேஷ் போன்ற கீழை தேசத்தில் இருந்து வரும் Cheap Labours சுரண்டப்படுகிறார்கள். இப்போதும் US போக முடியாதவர்கள், சிங்கப்பூர் சென்றால் நன்கு பணம் சம்பாதித்து மீண்டும் வரலாம் என்று செல்கிறார்கள்.
இரண்டாவது Angle காலம் தோறும் ஆண். பெண்ணுக்கு ஆண்கள் ஒரே நோக்கத்திற்காக மட்டுமே பழகுவார்கள் என்று நூற்றாண்டுகளாகச் சொல்லிக் கொடுப்பது போல, ஆணுக்கும் பெண் குறித்து ஒரு Preception இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக ஆணின் மனநிலையை ஒரு பெண் எழுத்தாளரின் எழுத்தில் படிப்பது ரசிக்கச் செய்கிறது.
Malaysian Tigers சிங்கப்பூர் காடுகளினால் அடர்ந்திருந்த போது ஏராளமாக இருந்திருக்கிறது. சீனர்களைத் தேடிப்பார்த்து புலி கொல்லுவதாக வதந்தி, பின் புலிகளைக் கொல்லுவது பொழுது போக்கு, வீரவிளையாட்டு என்று தொடர்ந்து கொன்றதனால் இன்று இந்த இனமே சிங்கப்பூரில் இல்லாமல் அழிந்துவிட்டது. இது போன்று நூற்றுக்கணக்கான தகவல்கள் சிங்கப்பூர் குறித்து நாவலின் இடையில் வருகின்றன.
இரண்டு மையக்கதாபாத்திரங்கள், இருவருக்குமே சிங்கப்பூர் தாய்நாடு இல்லை. அப்படிப் பார்த்தால் யாருக்குத் தான் சிங்கப்பூர் தாய்நாடு? நாவலில், வளரும் எழுத்தாளர் சொல்வது போல், ஆறு
தலைமுறைகளாக இருப்பவர் முப்பது வருடங்களாக வாழ்பவரை வந்தேறிகள் (Immigrants) என்று சொல்ல முடியுமா! முத்து, தன் தாத்தாவின் சகோதரர் குடும்பம் அங்கே தான் இருக்கிறது என்று உரிமை கொண்டாடுவதில் தொடங்கும் நாவல் அவன் அத்தனை வருடங்கள் வாழ்ந்தும் ஒரு Sense of belongingnessஐ உருவாக்க முடியாது முடிகிறது. Li Weiன் பூர்வீகம் சைனாவா இல்லை சிங்கப்பூரா சொல்வது கடினம். ராஜாக்கள் காலத்தில் இருந்து ஏராளமான கதாபாத்திரங்கள் வருகிறார்கள். ஒரே கதாநாயகி, சிங்கப்பூர். சிங்கப்பூரை நூற்றாண்டுகளுக்கு உயிரோட்டமாகக் காட்டுவதில் ஜெயந்தி வெற்றி பெற்றிருக்கிறார்.
பிரதிக்கு:
எழுத்து பிரசுரம் (Zero Degree) 89520 61999
முதல்பதிப்பு செப்டம்பர் 2021
விலை ரூ. 470.