Men In Black, Independence day போன்ற படங்களைப் பார்த்தவர்களுக்கு Will என்ற பிம்பம் வேறு. முதல் அத்தியாயத்திலேயே அதை உடைக்கிறார் Will. பத்துவயது சிறுவனாக இருந்த போது, இவருடைய அம்மாவின் தாடையில் அப்பா பலமாகக் குத்தி, அம்மா தரையில் சுருண்டு விழுந்த போது, பக்கத்திலேயே இருந்தும் எதுவும் செய்யாது கோழையாய் நின்றது பின்னால் Super Heroவாக Action moviesல் தோன்றிய போது நினைவிற்கு வராமலா போயிருக்கும்! ஐந்து பிள்ளைகளுடன் வளர்ந்த Willஐத் தவிர அந்தக் குடும்பத்தில் அம்மா உட்பட எல்லோருமே Rebels. சிறுவயது முழுதும் அடிக்குப் பயந்து கோழையாகவே இருந்திருக்கிறார். Oprah வின் நான் படித்த சுயசரிதைகளிலேயே சிறந்தது என்ற Strong recommendationஉடன் அண்மையில் வெளிவந்த நூல் இது.

அமெரிக்கா ஒரு புதிர்களின் தேசம். Oprahவை Billionaire ஆக்கியது Will Smithஐ Super star ஆக்கியது மொத்த அமெரிக்கா தான். 1968ல் பிறந்த Will, பள்ளியில், வளர்கையில் Racismஐ எதிர்கொள்ள நேர்ந்ததைக் குறிப்பிட்டிருக்கிறார். Michelle Obama தன் சுயசரிதையில் இதையே குறிப்பிட்டிருக்கிறார். இன்றும் கூட புள்ளிவிவரங்கள் ஒரே குற்றத்திற்கு வெள்ளையர் குறைந்த தண்டனை பெறுவதையும், அதே குற்றத்திற்கு கறுப்பினத்தவர் அதிக தண்டனை பெறுவதையும் நிரூபிக்கின்றன. ஆனால் வெள்ளையரோ, கறுப்பரோ அரசாங்கத்தின் உச்சகட்ட பதவி வகிப்பவரை, பொதுவில் மோசமாக விமர்சித்து, சேதமில்லாமல் அடுத்த வேலையைப் பார்க்கமுடியும்.

Willன் அம்மா, கல்லூரிப்படிப்பே ஒருவருக்குப் பாதுகாப்பு கொடுக்கும் என்று அவருடைய வாழ்க்கை அனுபவத்தில் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறார். அதையே மகனுக்கும் போதிக்கிறார். போதனை என்பது என்ன? நம் அனுபவங்களில் பெற்ற படிப்பினை அல்லது Perception. Successful career என்பதற்கு Template எதுவும் கிடையாது. வேறு யாரேனும் Will செய்தது போல் படிக்காமல், பாடப்போயிருந்தால் வாழ்க்கையில் சோற்றுக்கே திண்டாடி இருக்கக்கூடும்.

அதிருஷ்டத்தை மூட நம்பிக்கை என்று சொல்வதுண்டு. ஆனால் Lady Luck கைகளை இறுகப் பற்றிக் கொண்டால் எந்த சக்தியாலும் வீழ்த்துவதற்கில்லை. FBIன் வளையத்தில் இருந்து தப்புவது கடினம், Black என்றால் இன்னும் கடினம், Lying low என்பது எப்போதும் சாதகமாக அமைவதில்லை, ஆனால் Hollywoodன் எல்லா
முக்கியநபர்களும் இருக்கும் பார்ட்டியில், Audition செய்யும் வாய்ப்பை அதிருஷ்டம் என்று சொல்லாது வேறு என்ன பெயர் சொல்லி அழைப்பது.

வாழ்க்கையில் நினைத்தவற்றுக்கும் மேல் பெறுவதற்கு வெகுசிலருக்கே வாய்த்திருக்கிறது. ஆனால் அவர்கள் வாழ்க்கையிலும் ஒரு Hole இருப்பது, பல சுயசரிதைகளைப் படிக்கையில் தெரிய வருகிறது. இப்படி இருந்திருக்கலாம், இப்படி செய்திருக்கலாம், அதை சொல்லி இருக்க வேண்டாம்……. Ifs and buts…….. கடைசியில் இல்லாததையும், இழந்ததையும் தான் அதிகம் நினைவில் வைத்திருக்கிறோம். A honest and very professionally made Autobiography.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s