Mitch உலகப்புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர், பத்திரிகையாளர், திரைக்கதை ஆசிரியர், நாடகாசிரியர், ஒளிபரப்பாளர், இசைஞர். விளையாட்டுச் செய்திகளை எழுதும் பத்திரிகையாளராகத் தொடங்கிய இவர், இன்று Inspirational stories எழுதும் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர்.
Jason மிகப்பெரிய பணக்காரர். அவருக்கு சொந்தமான 200 மில்லியன் டாலர் மதிப்புள்ள Yachtக்கு, உலகின் சிறந்த Idea makersஐ அழைத்து ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறார். எதிர்பாராத நிகழ்வினால் அந்த Yacht வெடித்துச் சிதறுகிறது. கப்பலில் இருந்து கடலில் குதித்த பத்துபேர் ஒரு Lifeboatல் ஒன்று சேர்கிறார்கள். வேலை செய்பவர்களின் முகத்தைப் பார்க்காது கட்டளையிட்டவர்கள், எஜமானர்களின் கண்களைப் பார்க்காது, பேசிய வேலைக்காரர்கள் எல்லோருமே ஒன்றாக அரைநிர்வாணமாக, ஒருவர் உடலில் சுரக்கும் வியர்வை நாற்றத்தை முகரும் தூரத்தில் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு, சமத்துவஉலகத்தை ஏற்படுத்தி, ஆனால் அதில் தொடர்ந்து வாழமுடியுமா என்ற நம்பிக்கை இல்லாமல், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, யாராவது காப்பாற்ற வருவார்களா என்று பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இது அவர்களின் கதையல்ல. மூன்றாம் நாள், ஒரு இருபது வயது இளைஞன் கடலில் மிதந்து வருவதைப் பார்த்து, அவனைக் காப்பாற்றி,
படகினுள் சேர்த்துக் கொள்ளும் போது, அதில் ஒருவர் கடவுளுக்கு நன்றி நீ பிழைத்ததற்கு என்கிறார். அதற்கு அவன் நானே கடவுள், நீங்கள் வேண்டிக் கொண்டதால் வந்தேன் என்கிறான்.
பிரியமானவர்களை இழக்கும் போது, சிறு குழந்தைகளை பெற்றோர் இழக்கும் போது, கடவுள் கொடுத்ததை திருப்பி எடுத்துக் கொண்டார், மறைந்தவர் குறித்த இனிமையான நினைவுகளை என்றென்றுக்குமாய் நமக்குக் கொடுத்திருக்கிறார் என்று சமாதானம் கொள்வதா இல்லை கடவுள் என்பவர் இருந்திருந்தால் இது நடந்திருக்காது என்று கடவுளைவிட்டு விலகுவதா? கடவுள் என்பது உண்மையில் ஒரு Weakness இல்லையா? நம் செயல் எல்லாவற்றிற்கும் நாமே பொறுப்பெடுத்துக் கொள்தல் பரிபூர்ண சுதந்திரம் இல்லையா?
ஒருவிதத்தில் Mitch போன்ற எழுத்தாளர்கள், தங்களது படைப்புகளின் மூலம், இவர் மட்டுமே கடவுள் என்று ஒருவரை அடையாளப்படுத்துகிறார்கள். அவர் கூறிய கேளுங்கள் தரப்படும் என்பது போன்ற ஒன்றை கதையின் ஆழத்தில் செருகி மறைத்துவிட்டு, வாசகர் அதைக் கண்டுபிடிப்பதைப் பார்த்து புன்னகையுடன் அகல்கிறார்கள்.
இன்னொரு விதத்தில் Faith என்பது எப்படிப்பட்டது? Faith என்பது 100% இல்லை Zero percent. இடைப்பட்டது என்பதே இல்லை. இப்போது ஒரு கால் போனாலும், இரண்டு கைகள் + ஒரு காலைக் காப்பாற்றியதற்காக நாம் கடவுளுக்கு நன்றி சொல்லியாக வேண்டும்.
கதையே படகில் இருக்கும் ஒருவன் எழுதிய
Note bookன் மூலமாகத் தான் தொடங்குகிறது. அவனது மனைவிக்கு அவன் தெரிவிக்க விரும்பும் செய்திகளே அந்த நூல். ஒரு Confessionம் சேர்த்து. ஆரம்பத்தில் இருந்தே Twistக்குப் பஞ்சமில்லாமல் அடுத்து என்ன என்று Express வேகத்தில் விரையும் நாவல். Beginnings and endings are earthly ideas என்பது போன்ற வரிகளால் Mitch, Superficial spritualityஐ நாவலெங்கும் கொண்டு வருகிறார். ஒருவேளை உணவு மட்டுமே உண்டு, கொடுமையான சிறுபிராயத்தைக் கடந்து, உழைத்து முன்னேறி, உலகத்தின் பெரிய நிறுவனம் ஒன்றை சொந்தமாக்கிய பெண்மணி, கண்முன்னே இறந்த பிறகு, கிருத்துவ வழக்கப்படி, அவரது ஆன்மா சாந்தியடைய, அவர் குறித்து ஒரு வரியைச் சொல்லக்கூட உடனிருப்பவர் திணறுகிறார்கள். அவர்களுக்கு இவர் குறித்துத் தெரியாது. கடைசியில் ஒருவரிப் பெறுமானம் இல்லாத வாழ்க்கைக்கா நம்முடைய இத்தனை ஓட்டங்களும், சாதனைகளும்!