டுமேனியன் ஆர்மேனியாவைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இலக்கியவாதி. ஆர்மேனியாவின் தேசியக் கவிஞராகப் போற்றப்படும் இவர் சிறார்களுக்கான தேவதைக் கதைகளும், பெரியவர்களுக்கான நாவல்களையும் எழுதியவர்.

ரிஷான் சிங்களத்தில் இருந்தும், ஆங்கிலத்தில் இருந்தும் பல நூல்களை மொழிபெயர்த்தவர். சிங்களத்தின் சிறந்த Contemporary writersஐ தமிழுக்குக் கொண்டு வந்தவர். பல விருதுகளை மொழிபெயர்ப்புக்காகப் பெற்றவர். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.

தி.ஜாவின் சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்
சிறுகதையும், இந்த குறுநாவலும் Child exploitation என்ற புள்ளியில் ஒன்றிணைகின்றன. இரண்டிலுமே பையன் பெரிய ஆளாகி நிறைய சம்பாதிப்பான் என்ற எதிர்பார்ப்பே, அவனைத் தனியாக நகரத்துக்கு அனுப்ப வைக்கிறது.

கிகோர் குறுநாவலை அதிகபட்சம் ஒரு மணிநேரத்திற்குள் படித்து விடலாம் ஆனால் ஆயுளுக்கும் மறக்கமுடியாது அது நம்மிடையே தங்கிக் கொள்ளும். வீட்டின் வறுமை, வேறுவழியில்லாது பெற்றவர்களை, குழந்தைகளை வேலைக்கு அனுப்ப வைக்கிறது. குழந்தைகள் தலையில் குடும்பபாரத்தை சுமத்தும் போது அவர்களது குழந்தைமை அவசரமாகக் கொல்லப்படுகிறது.

கிகோர் விளையாட்டை வேடிக்கை பார்த்து அடைந்த தண்டனையை நினைக்கும் போதெல்லாம், அடுத்து வேடிக்கை நினைவே வராது. கடையில் வேலை பார்க்கும் சிறுவன், கிகோரைக் கொட்டினாலும், ஒரு துண்டு ரொட்டியைக் கொடுப்பது, பொருந்தாத பழையதுணியைப் போட்டிருக்கும் கிகோரைப் பார்த்து, அவனது கிராமத்து மக்கள், புதிய ஆடையுடன் சீமானாகி விட்டான் என்று வியப்பது போன்று அதிகம் விளக்காமல், நுட்பமாகச் சொல்லிச் செல்லும் எழுத்து.

தி.ஜா கதையின் கறுப்புக்கண்ணாடி பெரியவருக்கும், கிகோரின் முதலாளிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அவர்கள் மனிதாபிமானத்தை இழந்து ஏழ்மையை தங்கள் வசதிக்கு உபயோகிக்க பழகிக் கொண்டவர்கள். தங்கள் குழந்தைகளை அந்த இடத்தில் வைத்துப்பார்க்கும் சிந்தனை இல்லாதவர்கள்.

டுமேனியன் எந்த ஒரு உணர்வையும் ஒரு மாத்திரை அதிகமாகிவிடாமல் நுணுக்கமாக எழுதியிருக்கிறார். முதலாளியம்மாவின் தேவைக்கும், முதலாளியின் தேவைக்குமுள்ள இடைவெளியே அவள் வெறுப்புக்குக் காரணம் என்பதை வாசகரே உணர்ந்து கொள்ள வேண்டியது போல் பல இடங்கள் இருக்கின்றன. குட்டி இளவரசன் போல் சிறாரும், பெரியவர்களும் வெவ்வேறு தளங்களில் வாசிக்கும் நாவல். வழமை போல் ரிஷானின் மொழிபெயர்ப்பு எளிமை, இனிமை. You cannot afford to miss this book.

பிரதிக்கு:

வம்சி பதிப்பகம் 94458 70995
முதல்பதிப்பு பிப்ரவரி 2021
விலை ரூ.60.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s