ஆசிரியர் குறிப்பு:

சென்னையில் வசிப்பவர். சவூதி மற்றும் UAEல் மின்தூக்கி நிறுவனங்களில் பணிபுரிந்தவர். சார்பட்டா பரம்பரையில், அடிப்படை சிலம்ப பயிற்சி பெற்றவர். குத்து சண்டைகள் குறித்து இதழ்களில் தொடர்ந்து எழுதுபவர். உடற்பயிற்சிக் கூடங்களில் பயிற்சி மேற்கொண்டவர்.

Robin Cook அடிப்படையில் மருத்துவர். மருத்துவத்தின் நுணுக்கங்களைப் பற்றி அவர் எழுதிய நாவல்களின் Authenticity குறித்து இதுவரை எதிர்ப்பு வந்ததேயில்லை.
போலவே John Grishamன் Legal thrillers. அடிப்படையில் அவர் வழக்கறிஞர். இது போல் துறைசார்ந்த எழுத்து ஆங்கிலத்தில் ஏராளம். இந்த நாவலை எழுத, மிகத்தகுதி வாய்ந்தவர்களில் நிச்சயமாக இவரும் ஒருவர்.

வாடகை ஆட்டோ ஓட்டும் ஒருவன் ஜிம்முக்குச் சென்று உடல் வளர்த்தால், நிரந்தர வேலை கிடைக்கும் என்ற ஆசையில் அதில் சேர்வதைப்பற்றிய கதை இது. ஜிம்மும் ஒரு போதை. இரண்டு நாட்கள் தொடர்ந்து ஜிம்முக்குச் சென்றுவிட்டு, Bicepஐ Check செய்யும் போதிருந்தே அந்த போதை விடாமல் பிடித்துக் கொள்ளும்.

உடற்பயிற்சிக்கூடங்களின் அரசியல், அங்கும் காணும் வர்க்கபேதம் உடையில் இருந்தே ஆரம்பிப்பது, உடற்பயிற்சி முறைகள், உணவுகள், உடம்பைக் காட்டுவதில் மதநம்பிக்கைகள் குறுக்கே வருவது, உடல்பயிற்சி குறித்து ஏராளமான தகவல்கள் என்று தமிழுக்கு முற்றிலும் புதியகளம்.

ஆணழகன் போட்டிக்கு உடல் வளர்ப்பது மட்டுமில்லை, மற்றவர்களை பின்னுக்குத் தள்ள வேண்டும். இந்தப் போட்டியில் முதலிடத்தைத் தவிர வேறு எல்லா இடமும் ஒன்றே. அதே போல் 75 கிலோ category என்றால் அதை விடாமல் பிடித்துக் கொள்வதும் எளிதான விசயமல்ல. இந்தக் கதையைச் சொல்ல இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த, மூன்று வேளை உணவுக்கு உத்திரவாதமில்லாத குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனைத் தேர்ந்தெடுத்தது மிகவும் புத்திசாலித்தனமானது. துறைசார்ந்த புனைவுகள் தமிழில் தொடர்ந்து வரவேண்டும். சிறந்த வாசிப்பனுபவத்தை அளித்த நாவல் இது.

பிரதிக்கு:

எழுத்து பிரசுரம் (Zero Degree) 89520 61999
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ. 270.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s