ஆசிரியர் குறிப்பு:

குமரி மாவட்டத்தில் வசிப்பவர். சிறுகதை மற்றும் கவிதைத் தொகுப்புகள், சினிமா குறித்த கட்டுரை தொகுப்பு, குறும்படங்கள் முதலியன ஏற்கனவே வெளிவந்துள்ளன. ஒரு ஆய்வுநூல், சிற்றிதழில் கட்டுரைகள் என தொடர்ந்து இலக்கியத்தின் பலதளங்களில் இயங்கி வருகிறார். இது இவருடைய முதல் நாவல்.

Fukushima அணுஉலை விபத்து மிக சமீபத்தியது. அதற்கு முன் உக்ரைனில். அதற்கு முன்னர் ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து எல்லா நாடுகளிலும் அணுஉலை விபத்துகள் நடந்திருக்கின்றன.
இயற்கையின் சீற்றமோ, சிறுகவனக்குறைவோ பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆபத்து, அணு உலைகளில் Damocles Sword போல் தலைக்கு மேல் ஆடிக் கொண்டே இருக்கிறது. இந்த நாவல் கூடங்குளம் அணுஉலைகளை மையப்படுத்தி உருவானது.

சாத்தாவை விட்டு கேரளா சாமியைத் தேடிப் போகிறார்கள். சாமியாடி குறி சொல்கிறார்.
அறியாத ஜனங்கள் அணுஉலைகள் பற்றி அவர்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள். நாட்டுமாடுகள், நாட்டுக் கோழிகள் இடத்தை,
ஜெர்சியும், பிராய்லரும் பிடிக்கின்றன. சுயநலத்திற்காக அரசாங்கங்களும், தனிநபர்களும் அப்பாவிப் பொதுமக்களை, பல தலைமுறைகளை, இயற்கையைப் பலிபோடுகிறார்கள்.

ரஷ்யா, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு பத்துமடங்கு மேலிருந்த கோதுமையை அணுஉலை விபத்துக்குப் பிறகு, இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்தது போன்ற வரலாற்றுத் தகவல்களும் இடையிடையே வருகின்றன. இந்தக் கேள்வி துரத்திக் கொண்டே இருக்கிறது என்கிறார் இவர் முன்னுரையில். எதற்கு எல்லோரும் சேர்ந்து எதிர்க்க வேண்டுமோ அப்போது நான்கு குழுக்களாகப் பிரிவோம். ஒரு செயலைச் செய்பவர் அல்ல, அந்த செயலே அது நல்லதா அல்லது தீயதா என்பதைத் தீர்மானிக்கிறது. Union Carbide விபத்து போல பத்தில் ஒரு பங்கு அமெரிக்காவில் நடந்திருந்தாலும், அமெரிக்கா ஆள் ஏவி அந்த CEOவைக் கொன்றிருக்கும். நாம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க சட்டவிளையாட்டு விளையாடி முடிவதற்குள், முதுமையில் அவர் இறந்து விட்டார். அது ஒன்று என்றால் Evereadyயின் Productsஐ மொத்த இந்தியரும் ஒதுக்கவேண்டும் என்ற சின்னப்புரிதல் கூட நமக்கு இல்லை. இப்படியான தேசத்தில் அப்படித்தான் நடக்கும்.

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், சமகால
சுற்றுச்சூழல் பேரபாயத்தைப் பற்றி எழுதியதே பெரியவிசயம். இவருக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால், இது போன்ற நாவல்களில் புனைவு குறைந்தது எழுபத்தைந்து சதவீதம், நாம் சொல்ல வேண்டியது இருபத்தைந்து சதவீதத்தை மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த நாவலில் இறக்குமதியான கோதுமை, எப்படி எல்லாம் போய்ச் சேர்கின்றது என்பது புனைவு. அதற்குண்டான அழுத்தமும், செல்லும் தூரமும் தனி. பண்ணையார், அவர் மனைவி, ஓதம் வந்தவன் என்று பலர் குறித்த புனைவு நன்றாகவே வந்துள்ளது. சாத்தா, குதிரை உயர நாயாக ஊரை வலம் வருவதும் நல்ல கற்பனை. காலம் தனக்கு வேண்டிய பசுமை இலக்கியத்தைக் கேட்டு வாங்கிக் கொள்கிறது.

பிரதிக்கு:

புலம் 98406 03499
முதல்பதிப்பு நவம்பர் 2021
விலை ரூ.220.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s