ஆசிரியர் குறிப்பு:
நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர். சென்னையில் வசிக்கிறார். இதுவரை இவரது ஐந்து கவிதைத் தொகுப்புகள், ஆறு சிறுகதைத் தொகுப்புகள், மூன்று குறுநாவல்கள் வெளியாகியுள்ளன. விகடன் விருது, சௌமா இலக்கியவிருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.
ஜி.நாகராஜனுக்கு நன்றியும் அவரது Quoteஉடன் தொடங்கும் முதல் அத்தியாயமே இது வழக்கமான நாவல் அல்ல என்பதைச் சொல்லிவிடும். Homesexuality பசித்த மானிடம் காலத்திலேயே வந்திருந்தாலும் அப்பட்டமாக, விவரணைகளுடன் இந்த நாவலில் வருகிறது.
இருண்ட உலகத்தைப் பற்றியும், சட்டவிரோதச் செயல்கள் செய்பவர்களைப் பற்றியும் எழுதும் பொழுது Profanity என்பது தவிர்க்க இயலாத விசயமாகிப் போகிறது.
Male & Female Prostitutes, மூன்றாம் பாலினம் மற்றும் அவர்களுடன் தொடர்பு கொள்பவர்கள் பற்றிய கதை இது.
மனிதர்களின் இருண்டபகுதிகளைக் குறித்த நேரடியான அனுபவம் இல்லாதபோது, இலக்கியத்தை விட, பாதுகாப்பாக அதைத் தெரிந்து கொள்ள வேறென்ன வழி இருக்கிறது.? தமிழில் எப்போதும் எழுதுவதில் தயக்கங்கள் ஏராளம், இல்லை அர்த்தமேயில்லாத கதையில் ஆபாசங்களைக் கூடையில் கொண்டு கொட்டிப் போயிருப்பார்கள். கணேசகுமாரன் எடுத்துக் கொண்ட கதையில் இருந்து விலகாது, தேவைப்படுவதைத் தயங்காமல் தந்திருக்கிறார். நூறு வருடங்களுக்கு முன் எழுதிய Sons and Loversஐ இப்போது தமிழ்ப்படுத்தினாலும் சிரத்சேதம் உறுதி என்ற சூழலில் இது தைரியமான விசயம்.
நல்ல கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்தவர், இது குறித்த ஆய்வுகள், நேர்காணல்கள் செய்திருந்தால் சம்பவங்களின் கனம் அதிகரித்து இருக்கும். Fifty shades of grey போல் தோன்றியிருக்காது. பாவப்பட்ட ஜீவன்களின் வாழ்க்கை என்பதைத் தாண்டி, வாசகரை நாவலில் உள்புக வைக்காது,
வெளியே தள்ளுவது அறியாத அல்லது அருவருப்பான களத்தினால் அல்ல, சம்பவங்களின் வீரியமும், நம்பகத்தன்மையும் இல்லாததால். புழு எப்படி முகத்தில் விழும்? இது போல் அதிர்ச்சி மதிப்பிற்காகவே பல சம்பவங்கள் இணைக்கப்பட்டுள்ளன. Kanae Minatoவின் Penance என்ற நாவலின் Climaxம் இந்த நாவலின் Climaxம் ஒன்றே. நான்கு வருடம் முன்பு வாசித்த நாவல் நினைவிலிருப்பது, சம்பவங்களின் தொகுப்பு தன் மொத்த அழுத்தத்தையும் Climaxக்குக் கொண்டு சேர்ப்பது. அதைத் தான் கணேச குமாரன் தவற விட்டிருக்கிறார். Score செய்ய வேண்டிய Subjectல் Just pass செய்தவரைப் பார்க்கையில் எழும் உண்மையான ஆதங்கம் எழுகிறது. எனினும் பேசாப்பொருளைப் பேசத்துணிந்தமைக்குப் பாராட்டுகள்.
பிரதிக்கு:
எழுத்து பிரசுரம் (Zero Degree) 89520 61999
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ. 240