அமெரிக்க எழுத்தாளர். Rules of Civility, A Gentleman from Moscow என்ற இரண்டு நாவல்களினால் உலகப்புகழ் பெற்றவர்.
சீனாவிற்கு ஆசிரியராகச் சென்று Tinnamon square சம்பவத்தால் பாதியில் திரும்பியவர். Investment Bankerஆக பல நாடுகளுக்குச் சென்றவர். சமீபத்தில் வெளிவந்த இவருடைய மூன்றாம் நாவல் இது.

Mark Twainன் The Adventures of Tom Sawyer போன்ற கதையை நவீன மொழியில் எழுதினால் Lincoln Highway. Juvenile campல் தண்டனையை முடித்துவிட்டு வந்த பதினெட்டு வயது இளைஞன் Emmett புதிதாக வாழ்க்கையை ஆரம்பிக்க நினைக்கிறான். அவனுடைய எட்டுவயது தம்பி, அவன் கைக்குழந்தையாக இருந்த போது வீட்டைவிட்டு சென்ற அம்மாவைத் தேடிச் செல்ல வேண்டும் என்கிறான். Emmettஉடன் அந்த Campல் இருந்து தப்பிவந்த இருவர், ஒவ்வொருவரும் ஒரு Agendaவை வைத்துக் கொண்டு இவர்கள் பயணத்தில் சேர்கிறார்கள்.

Lincoln Highway அமெரிக்காவின் கிழக்கில் நியூயார்க்கில் இருந்து மேற்கே சான்பிராஸிஸ்கோ வரையான 1500 மைல் தூரத்தில் அமெரிக்காவின் குறுக்காகச் செல்லும் சாலை. இப்போதும் இதன் பகுதி சாலைகள் உபயோகத்தில் இருக்கின்றன. வீட்டை விட்டுச் சென்ற அம்மா, இந்த சாலையின் வழியாகச் சென்றதற்கு அடையாளமாக, ஒவ்வொரு நகரத்தின் போஸ்ட்கார்டையும் அந்த நகரத்தில் இருந்து தினமும் அனுப்புகிறாள். எட்டுவருடம் கழித்து அதே சாலையில் சென்றால் அவளைக் கண்டுபிடித்துவிடலாம் என்பது சிறுவனின் நம்பிக்கை.

மையக்கதாபாத்திரம் Emmettஐச் சுற்றி நகரும் கதையல்ல இது. ஏராளமான கதாபாத்திரங்கள், ஏராளமான கதைகள். நாவலில் Thread கண்டிப்பாக வேண்டும் என்று திடமாக நம்பும் தமிழ்கூறும் நல்லுலகம் இடதுகையால் இந்த நாவலை ஒதுக்கிவிடும். இது மட்டுமல்ல Amorன் எல்லா நாவல்களும் Multilayered storiesதான்.
பெரிய அதிர்ச்சி தரும் சம்பவங்கள் என்று எதுவுமே இல்லாமல் பல நினைத்தறியா திருப்பங்கள், சம்பவங்களை சுவாரசியமாகச் சொல்லிக் கொண்டு நாவலின் வடிவமைதியை குலையாது கொண்டு செல்வது Amorன் பாணி.

கதாபாத்திரங்களை வெகு திருத்தமாக வடிப்பது Amorன் இன்னொரு பலம். கதாபாத்திரத்தின் செயல்களில் Ambiguity என்பதே துளியும் இருக்காது. Sarah, Sally, அம்மா, Duchess, Wooly, Billy என்று கல்லில் வடித்த சிலைபோல தெளிவான கதாபாத்திரங்கள். பிரதான கதாபாத்திரத்தைப் படர்க்கையிலும், இன்னொரு கதாபாத்திரத்தை தன்மையிலும் கதை சொல்லும்படி செய்திருப்பது இறுதியிலேயே புரியும். அது போல் நாவலின் ஒவ்வொரு பாகமும் ஒரு செய்தியை வாசகர்களுக்குச் சொல்கின்றன

ஐம்பதுகளின் அமெரிக்கசமூகத்தின் Values and structureஐ இந்த நாவல் அப்படியே பிரதிபலிக்கிறது. வெளியானதில் இருந்து இன்றுவரை Newyork times best sellers பட்டியலில் இருந்து வருகிறது. முழுக்கவே Romanceஆன Nicholas Sparksன் Wish, முழுக்கவே திரில்லரான David Baldacciன் Mercy, முழுக்கவே Literatureஆன Anthony Doerrன் Cuckoos land, Fantacy Literature வகைமையைச் சார்ந்த Midnight Library எல்லாமே ஒரே பட்டியலில் வருவதைப் பார்க்கையில் இனம்புரியாத ஆனந்தம் மனதில் தோன்றி மறைகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s