கேரளா வர்க்கலாவைச் சேர்ந்த எழுத்தாளர். இதுவரை ஏழு நாவல்களை எழுதியுள்ளார்.
Vanity Bagh என்ற நாவல் நல்ல வரவேற்பைப் பெற்றது. The Blind Lady’s Descendants சாகித்ய அகாதமி விருதுபெற்ற மற்றுமொரு முக்கிய நாவல். விலாசினியின் மொழிபெயர்ப்பில் தமிழில் வந்தது. இந்த நாவல் சமீபத்தில் வெளிவந்தது.
Historical Fantasy வகைமையைச் சேர்ந்த நூல் இது. பெயரிடப்படாத நகரத்திற்கு ஹைதராபாத்தின் சாயல். மரணப்படுக்கையில் இருந்து கொண்டு, இறக்க மறுக்கும் அரசன் ஒரு பெண் பித்தன். ஊரெங்கும் நூற்றுக்கும் மேலாக பிள்ளைகள். நாவலின் தலைப்பிற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறது.
ஹைதராபாத் நிஜாம் Mir Osman Ali Khan 1967ல் இறக்கிறார். அவரது இரு மகன்களின்
பெயரும் இந்த நாவலில் வரும் இரு சட்டபூர்வமான மகன்களின் பெயரும் ஒன்று. இது போல் ஏராளமான Similarities, நாவல் நேரடியாக நிஜாமைக் குறிப்பிடாத போதும்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே ராஜாக்களோ, ராணிகளோ பெயரளவில் தான் அதிகாரமில்லாது இருந்தார்கள்.
William Dalrympleன் The Last Mughal மற்றும்
Chitra Banerjee Divakaruniன் The Last Queen போன்ற நூல்கள், உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு புனையப்பட்ட நூல்கள். இந்த மன்னர் மீதி இருந்த அதிகாரங்களும் போய், இந்திய அரசு என்னும் மையநீரோட்டத்தில் சேர்ந்த காலம் இது. நான் ஒரு சர்க்கஸ் கம்பெனி நடத்தி வந்தேன் என்று அரசர் சொல்வது Metaphor.
நூற்றுக்கணக்கான குழந்தைகளில், எட்டு பேருக்கு அவர் தான் தந்தை என்று தெரிகிறது. அதில் இருவர் மட்டுமே அதிகாரபூர்வமான மகன்கள். ஒரு மனிதன் எல்லோரிடமும் ஒன்றே போல் இருப்பதில்லை. ஒருவருக்கு கனவானாக இன்னொருவருக்கு கீழ்பிறவியாக பல வேஷங்கள். அரசனுக்கும் பல பிம்பங்கள். இறந்ததாக சொல்லப்படுவதற்கும், இறப்பதற்கும் இடையில் இவர்கள் எட்டு பேரின் அரசன் குறித்த சிந்தனைகளே இந்த நாவல்.
இந்திய ஆங்கிலநூல்கள் என்றால் Pulp fiction என்ற அவப்பெயரில் இருந்து வெளிவர, கடந்த பத்து வருடங்களில் தங்கள் படைப்புகளின் மூலம் உதவியவர்களில் அனீஸ் சலீமும் ஒருவர். இந்த நாவலை அவருடைய Most ambitious novel என்றே சொல்ல வேண்டும். முதன்முறையாக சரித்திரக் கதையில் புகுந்திருக்கிறார்.
நாவலில் ஒருவரைப் பற்றிய பலரது குரல்கள் தொடர்ந்து ஒலிக்கையில், அந்தந்த குரலை அடையாளம் கண்டு கொள்வது வாசகருக்கு எவ்வளவு சவாலோ அதைவிடப் பலமடங்கு சவால், அந்தக் கதாபாத்திரத்தின் அசல்வடிவம் மாறாமல் கொண்டு செல்வது என்பது எழுத்தாளருக்கு.
200 பக்கங்களுக்கும் குறைவான நாவல் இது. துயரத்தை நகைச்சுவையாகச் சொல்லும் மொழிநடை. மையக்கதாபாத்திரமோ ஒரு தெளிவான
Story lineஓ இல்லாத பரிட்சார்த்த முயற்சி.
ரத்த சம்பந்தமுள்ளவர்களின், குடும்பங்கள் வேறு, சூழல் வேறு, வளர்ப்பு மற்றும் நம்பிக்கைகள் வேறு, பன்னிரண்டு பொற்காசுகளில் இரண்டை தரகனுக்குக் கொடுத்து விட்டு, பத்து பொற்காசுகளுக்காக மகளை விட்டுக்கொடுத்துப் பிறந்த மகனும் இருக்கிறான், இல்லாத ராஜ்ஜியத்திற்கு எதிர்காலக் கனவுகளுடன் ராஜகுமாரனும் இருக்கிறான், கடைசியில் Sense of Loss என்பது தான் எல்லோரையும் இணைக்கும் மையச்சரடு.