ஆசிரியர் குறிப்பு:

விருதுநகர் மல்லாங்கிணறில் பிறந்தவர்.
சென்னையில் வசிக்கிறார். முழுநேர எழுத்தாளர். இருபத்திரண்டு சிறுகதைத் தொகுப்புகளும், பதினோரு நாவல்களும் தவிர, அநேகமாக தமிழில் வெளிவந்த எல்லா Genreகளிலும் நூல்கள் எழுதியுள்ளார்.
Demi 1×8 size paperல் நெருக்கி எழுதியும் இரண்டு பக்கங்கள் வந்திருக்கின்றன.

இவரே முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல, ஆங்கிலத்தில் மற்ற ஆசிரியர்களின் புனைவில் எழுத்தாளர்கள் கதாபாத்திரமாக வருவது அடிக்கடி நடந்திருக்கிறது. Milan Kunderaவின் Immortalityயில் Von Goetheக்கும்
Bettinaவிற்கும் இருக்கும் உறவு அல்லது உறவுச்சிக்கல் ஒரு பாகம். போலவே, Goethe இறந்த பின்னர் Hemingwayயுடன் இருக்கும் நட்பு ஒரு பாகம். எஸ்.ரா, டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றின் இரண்டு வாக்கியங்களில் வந்த இரண்டு பெயர்களில் இருந்து உருவான கதை இது என்றிருக்கிறார் முன்னுரையில்.

டால்ஸ்டாயின் Literary talentsஐக் குறித்த மாற்றுக்கருத்து யாருக்குமே இருக்க முடியாது. ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் ஒரு Monster, Hypocrite. தன்னுடைய புனித பிம்பம் கலையாதிருக்க பிரயத்தனப்பட்டவர். Sofiaவின் டைரி மட்டுமல்ல, அவர் பண்ணைப் பெண்களிடம் எப்படி நடந்து கொண்டார் என்பதற்கு பல நூல்கள் சான்று. அக்ஸின்யாவின் உள்பாவாடை அடர்த்தியாக இருந்தது என்றுசொல்வது புனைவாசிரியரின் உரிமை. அவரும் பார்க்கவில்லை, நாமும் பார்க்கவில்லை. ஆனால் டால்ஸ்டாய் திருமணத்திற்குப்பின் Loyalஆக இருந்தார் என்று அவர் மகள் சொல்வதாகச் சொல்வது தான் இங்கே பிரச்சனையே. பதினாறு முறை Labourக்கு போயிருக்கிறார் Sofia. கடைசி இருமுறைகளில் எவ்வளவு Complications என்பது டால்ஸ்டாய்க்குத் தெரியாதா? வெடித்த மார்க்காம்புகளோடு குழந்தைகளுக்கு பால் கொடுத்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்தியவர் டால்ஸ்டாய். Sofiaவுடன் உறவு கொள்ள முடியாத போது, பண்ணையின் எதிர்த்துக் கேட்க முடியாத Peasantsஇடம் காமத்தைத் தணித்துக் கொண்டார். இந்த நாவலும் அப்படி ஒரு பெண்ணின் கதை தான். ஆனால் டால்ஸ்டாய் போலவே எஸ்.ராவும் அவருக்கு அறிந்தோ அறியாமலோ புனிதபிம்பத்தைப் பூசுகிறார்.

நாவலில் வரும் டால்ஸ்டாய் மற்றும் சோபியா அவர்களது சாயல்கள் கூட இல்லை. டால்ஸ்டாய் மதவாதி. திருச்சபைகளை எதிர்த்துக் கேள்வி கேட்டது மட்டும் அவர் செய்த புரட்சி. அவர் ஒருநாளும் Socialistஆக இருந்ததில்லை. அது போலவே சோபியா, ஒரு முட்டாள் Complaining wife இல்லை. டால்ஸ்டாயின் டயரிகளில் தன்னைப் பற்றிய ஆட்சேப வரிகளைப் பிரசுரிக்குமுன் நீக்கியவர், டால்ஸ்டாய் மரணத்தின் பின் அவரது கையெழுத்துப்பிரதிகளை சீரமைத்து நூல்கள் வெளியிட்டவர், அவ்வளவு ஏன் War and Peace,, Anna Karenina இரண்டிற்கும் இவர் உழைப்பும் இருக்கிறது. இவர் எப்படி முட்டாள் பெண்ணாக இருக்க முடியும்?. இலக்கிய உலகில் மகத்தான தோல்வி அடைந்த திருமணவாழ்க்கை இவர்களுடையது.

முழுவதுமே புனைவு, பண்ணைப்பெண் அவள் மகன் போல் எத்தனை பேரோ டால்ஸ்டாயின் வாழ்வில். அதில் ஒருவரின் கதையை எஸ்.ரா இதில் கற்பனை செய்திருக்கிறார். இதை தமிழில் எழுதப்பட்ட ரஷ்ய நாவல் என்று ஒருவர் சொன்னதாக முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். ஆமாம் டால்ஸ்டாய் பெயர் வந்த பின் அது ரஷ்ய நாவல் தானே. மீன்களும், மீன்களைத் தேடிப்போன சிறுவனும் வருவதால் இது ரஷ்யன் Fableம் கூட. அப்படியே ஆப்பிரிக்க, இத்தாலிய, கிரேக்க நாவல்களும் உருவாகட்டும். தமிழ்வாசகர்கள் அதி புத்திசாலிகள்.

” அழகான பெண்கள் வாழ்க்கையில் அதிகம் துயரம் அடைவார்கள். அது தான் உலகின் விதி” என்பது போல் கதாபாத்திரங்களோ, அல்லது இடையிடையே கதாசிரியரோ பொன்மொழிகளை நாவல் முழுதும் அள்ளித் தெறித்திருக்கிறார்கள். புனைவில் காரணகாரியம் விளக்கச்சொல்லிக் கேட்கக்கூடாது என்பதால் நாமும் புன்னகைத்துக் கடக்கிறோம். ஆனால்
” பறவையைப் போல் மரம் பறந்து போய் வாழ விரும்புவதில்லை. இருப்பிடத்திலேயே தன்னை வளர்த்துக் கொள்கிறது” போன்ற பொன்மொழிகளை நம் அனுபவத்தின் போதாமை என்ற மனக்கிலேசத்துடன் கடக்கிறோம்.

சோபியாவின் டயரிகள் என்று ஒரு அத்தியாயமே வருகிறது. சோபியா 1862ல் இருந்து 1919வரை டயரிகள் எழுதியிருக்கிறார். Cathy Porterன் மொழிபெயர்ப்பில் 850 பக்கங்களில் Hardbound. எஸ்.ரா வருடத்தைக் குறிப்பிடாது, தேதி, மாதம் ஆகியவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார். சோபியா அக்ஸின்யா மற்றும் திமோஃபி குறித்து அவரது டயரியில் குறிப்பிட்டதாக வரும் குறிப்புகளைப் படித்ததாக எனக்கு நினைவிலில்லை. என்னுடைய போறாத நேரம், அவற்றை எத்தனை தேடியும் கிடைக்கவில்லை.

” இந்த நாவலை எழுதுவதற்கு மூன்று ஆண்டுகள் டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாறு, ரஸ்ய வரலாறு, அவரது டயரிக் குறிப்புகள், டால்ஸ்டாய் குடும்பத்தினரின் நினைவலைகள், டால்ஸ்டாய் பற்றி எழுதப்பட்ட கட்டுரைத் தொகுப்புகள் என தேடித்தேடிப் படித்தேன்”_ எல்லாம் எதற்கு? இந்தக் கற்பனைக்கதையை எழுதுவதற்கு.

எழுத்தாளர்கள் மேல் குற்றமில்லை. அவர்கள் விரும்புவதை அவர்கள் எழுதலாம். பிரதியைப் படித்து எடைபோடத் தெரியாத ஒவ்வொரு இலக்கியவாசகரும் தமிழ் இலக்கியத்திற்கு நஞ்சைப் பாய்ச்சுகிறார்கள். எழுத்தாளரின் முகரூபத்தைப் பார்த்து சிறந்த நூல் என்று சொல்பவர்கள் மனமறிந்து தவறு செய்கிறார்கள். இந்த நூலை ஆங்கிலத்திற்கு எடுத்துச் சென்றால் நம் மானம் கப்பலேறும். சின்னத்தீவில் மட்டுமே பேசும் சிங்கள மொழிக்காரர்கள், குறுங்கதை, சிறுகதை இரண்டிலும் International prizes வாங்கி இருக்கிறார்கள்.
You scratch my back and I’ll scratch yours என்று தமிழ் இலக்கிய உலகம் இயங்கட்டும்.
மண்டியிடுங்கள் இல்லை எது வேண்டுமானாலும் செய்யுங்கள்.

பிரதிக்கு:

தேசாந்திரி பதிப்பகம் 044- 2364 4947
முதல்பதிப்பு டிசம்பர் 2021
விலை ரூ.350.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s