ஜப்பானின் Dan Brown. இவருடைய Devotion of Suspect X என்ற நாவல், இருபத்தோராம் நூற்றாண்டின் சிறந்த 100 Crime fictionல் எளிதாக இடம் பிடிக்கக் கூடியது. அந்த நாவலில் வந்த ஒரு முக்கியமான Threadஐ வைத்தே, திருஷ்யம் என்ற மலையாளத் திரைப்படம் எடுக்கப்பட்டது. அது Galileo Seriesன் முதல் நாவல். இது சமீபத்தில் வந்த அதே சீரிஸின் நான்காவது நாவல்.
கொலைகாரர்களைத் தேடித்திரியும் போலீஸ்காரர்களின் வாழ்க்கை எந்த தேசத்திலும் கடுமையானது. ஜப்பானில் அது கூடுதல் கடுமையாவது எப்படி என்றால், சட்டப்புத்தகத்தில் சொல்லியதைத் தாண்ட பெரும்பாலான ஜப்பானிய போலீஸ் தயாராக இருப்பதில்லை அத்துடன் ஜப்பானின் Limitation law. Statue of Limitation for Murder கூட பத்துவருடங்கள் முன்பே அங்கு மாற்றியமைக்கப்பட்டது. இந்த சூழலில் சந்தர்ப்ப சாட்சியங்கள் எல்லாமே ஒருவனைக் கைகாட்டி, அவனைக் கைதுசெய்து, நீதிமன்றத்தில் நிறுத்தினாலும் அவன் எதற்குமே பதில் சொல்லாது, அவனைத் தண்டிக்க போதுமான சாட்சியங்கள் இல்லாததால் விடுதலை செய்யப்படுகிறான். பத்தொன்பது வருடம் கழித்து, வேறு ஏதோ கேஸை விசாரித்துக் கொண்டு இருந்த அதே விசாரணை அதிகாரிக்கு, அதே கொலைகாரன் சம்பந்தப்பட்ட புதிய கேஸ் தரப்படுகிறது. இப்போதும் இரண்டாவது கொலை நடந்து மூன்று வருடங்கள் முடிந்து விட்டன. துப்புத் துலக்குவது எளிதல்ல. ஆனால் விசாரணை அதிகாரி தான் சென்றமுறை ஏமாந்ததை மறக்கவில்லை. Cat and Mouse game has just begun.
வழக்கமான Whodunit நாவல்களை Higashino
எழுதுவதில்லை. இதில் கொலை செய்யும் முயற்சிக்காக, கொலையாளி கையாளும் ஆயுதம் வித்தியாசமானது. அத்துடன் இந்த நாவலில் the hunter is being hunted. ஜப்பானிய Crime fictionல் கூட குடும்பஉறவுகளுக்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவம், சமூகத்தின் பழக்கவழக்கங்கள் முதலியன இடையில் வருவதைத் தவிர்க்க முடியாது.
Higashino ஏராளமான தகவல்களை இந்த நாவலுக்காக ஆய்வு செய்திருக்கிறார்.
Higashinoவின் மற்ற நாவல்களைப் போலவே இதுவும் ஒரு Roller coster ride. முடிச்சுக்கு மேல் முடிச்சாக விழுந்து கொண்டே போகிறது.
கொலையாளி யார் என்று முதலிலேயே தெரிந்த பின் 435 பக்கங்களை விறுவிறுப்பாகக் கொண்டு செல்வது கடினம். கடைசிப்பகுதி மட்டும், யாரும் யூகிக்கக்கூடாது என்பதற்காக எழுதியது போலிருக்கிறது. உலகளவில் Crime fiction, thrillers படிப்பவர்கள் Literary novelsஐப் படிப்பவர்களை விடப் பலமடங்கு அதிகம். என் வரையில் இப்போது எழுதும் உலக எழுத்தாளர்களில் Crime fictionல் எளிதாக முதல் பத்துஇடங்களில் வருபவர் Higashino.
முரகாமி அளவிற்கு உலகஅளவில் இவருக்கு ஏன் வாசகர்கள் இல்லாமல் போனது தெரியவில்லை. அறுபத்து ஆறு நாவல்கள் எழுதிய இவரது ஒன்பது நூல்கள் மட்டுமே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இவரை இதுவரை வாசிக்காதவர் Devotion of Suspect Xல் இருந்து ஆரம்பிக்கலாம்.