யுடா அகினாரி:

பதினெட்டாம் நூற்றாண்டின் ஜப்பானின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர். எழுத்தாளர், கவிஞர். அமானுஷ்யம் கலந்த கதைகளைப் பெரும்பாலும் எழுதியவர்.
இவரது இரண்டு படைப்புகள் ஜப்பானின் செவ்விலக்கியப் படைப்புகளாக இன்றும் கருதப்படுகின்றன. எழுபத்தைந்து வயதில் இறக்கும்வரை எழுதிக்கொண்டே இருந்தார்.

கீதா மதிவாணன்;

கீதமஞ்சரி என்ற வலைத்தள படைப்புகள் வழியாக பரவலாக அறியப்பெற்றவர். திருச்சியில் பிறந்து தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இவரது சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளிவந்துள்ளது. ஹென்றி லாஸனின் சிறுகதைகள் மொழிபெயர்ப்பு என்றாவது ஒருநாள் என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய கீழைநாடுகளில் பல சடங்கு சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், கலாச்சாரம் இவற்றில் ஒற்றுமை இருப்பதை பழைய நூல்களில் இருந்து நாம் கண்டுகொள்ள முடியும். உதாரணத்திற்கு தற்கொலை செய்து கொள்வதைப் புனிதப்படுத்துவது, , வேறுவேறு பெயரில் மூன்று நாடுகளிலுமே நடந்து வந்திருக்கின்றது. இன்று எழுதப்படும் இலக்கியத்தில், மூன்று நாடுகளிலும் கடலளவு வித்தியாசம். காலனி ஆதிக்கமும், உலகப்போர்களும் ஒவ்வொரு நாட்டையும் ஒவ்வொரு விதத்தில் மாற்றியிருக்கக்கூடும்.

Super Natural things மூன்று நாடுகளிலுமே ஆரம்பகால இலக்கியமாக இருந்திருக்கிறது. சிறுவயதில் பாட்டியின் கதைகளைக் கேட்டதன் பாதிப்பு, அழகான பெண்களின் கால் தரையில் பாவுகின்றதா என்று பலவருடங்கள் பார்க்க வைத்திருக்கிறது. வாய்மொழிக்கதைகளில் அமானுஷ்யம் கலப்பது தான் நல்ல கதைசொல்லல் என்று அப்போது நம்பிக்கை இருந்திருக்கக்கூடும். ஏழுமலை தாண்டி, ஏழுகடல் தாண்டி……….என்ற கதைகளை அரைகுறைத் தூக்கத்தில் கேட்ட ஒரு சமூகம் தொலைந்து போனது.

கூடுவிட்டுக்கூடு பாயும் வித்தை இந்தியத் தொன்மக் கதைகளில் வருவது போலவே கெண்டை மீன் கதை. கொடுத்த சத்தியத்துக்காக வரமுடியாத தூரத்தை ஆவியாகக் கடக்கும் நண்பன், தத்தாரியாகத்
திரிபவனுக்கு திருமணம் செய்து வைத்தால் திருந்திவிடுவான் என்று நம்பும் அம்மா, இறந்தும் பழிவாங்கும் மனைவி, பகாசுரன் போல் மனிதர்களைத் தின்னும் அரக்கத்துறவி, மனைவியை மறந்த கணவன் என்று இந்தக் கதைகளை எல்லாம் நாம் எங்கோ கேட்டிருக்கக்கூடும்.

Poeவின் அமானுஷ்யக் கதைகளில் இருந்து வேறுபட்டவை அகினாரியின் கதைகள். Scarinessஐக் கூட்டுவது Poeவின் கதைகளின் நோக்கமென்றால், அகினாரி Friendship, lust, betrayal, vengence போன்ற எப்போதும் மாறாத மனிதர்களின் குணத்தைச் சொல்ல உபயோகப்படுத்துகிறார். Folk tales மரபைப் பின்பற்றி எழுதப்பட்ட கதைகள். இன்றைய ஜப்பானியக் கதைகளில் நடப்பு வாழ்க்கை வெளிப்படுவதைப் போலவே பதினெட்டாம் நூற்றாண்டு ஜப்பானிய வாழ்க்கை இதில் காணக்கிடைக்கிறது.

வீட்டில் சிறுகுழந்தைகள் இருப்பவர்கள், குழந்தைகளுடன் சேர்ந்தே படிக்கலாம் இந்தக் கதைகளை. Bedtime storiesஐ சொல்வதற்கு நேரமிருப்பவர்கள், பின்னாளில் புத்தகங்களில் தொலையும் வாசகரை உருவாக்குகிறார்கள். நான்கு நூற்றாண்டுக்கு முந்திய ஜப்பானியக் கதைகள் என்று அலட்சியம் காட்டாமல் தமிழுக்குக் தரமான பதிப்பாகக்கொண்டு வந்த கனலி பப்ளிகேஷனுக்குப் பாராட்டுகள்.

ஹென்றி லாஸனின் மொழிபெயர்ப்புக் கதைகளைப் படித்தவர்கள் இந்த நூலில் எவ்வளவு வித்தியாசமான மொழிநடையைக் கீதா மதிவாணன் உபயோகிக்கிறார் என்பதைக் கண்டுகொள்ள முடியும். An important trait for any translator. ஏராளமான சிறந்த நாவல்கள் தமிழுக்கு வருவதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. கீதா மதிவாணன் போல் தரமான மொழிபெயர்ப்பாளர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு காத்திருப்பையும் இணைக்கும் பட்டுநூல் யார்வசம் இருக்கின்றதோ, தெரியவில்லை.

பிரதிக்கு:

Kanali Media and Publication 90800 43026
முதல்பதிப்பு ஜனவரி 2022
விலை ரூ.200.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s