பெருவில் பிறந்து சிலியில் வளர்ந்த இஸபெல் இன்று எழுதிக் கொண்டிருக்கும் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். கலிபோர்னியாவில் வசிக்கும் இவரது நூல்கள், 7.5 கோடி பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளன, நாற்பத்திரண்டு மொழிகளுக்கு மேல் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. இவரது House of Spirits Magical realismற்கு உதாரணமாகச் சொல்லப்படும் நூல்களில் ஒன்று. இந்த நூல் ஜனவரி 2022ல் வெளியாகியது.

1920ல் இருந்து 2020 வரை நடக்கும் கதை இது. Spanish Fluவில் இருந்து Covid வரை.
ஒரு குடும்பத்தின் கதையை பாட்டி, பேரனுக்குச் சொல்கிறார். இஸபெல்லின் மற்ற நாவல்களைப் போலவே சிலியின் வரலாறும் சேர்ந்தே வருகிறது. 1930ல் அமெரிக்காவில் ஆரம்பித்த Great Depression சிலியில் வசதியாக வாழ்ந்த குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்துகிறது. கண்காணாத இடத்திற்குக் குடும்பம் புதுவாழ்வைத் தொடங்கச் செல்கையில் நாவலின் கதையும் தொடங்குகிறது.

மல்லையா மட்டுமல்ல, இந்தியாவின் முதன்மை வங்கியான ஸ்டேட் வங்கியில் குறிப்பிட்டதினத்தின் காலையில்
பணத்தை முதலீடு செய்தவர் அனைவரும் திரும்பத்தரச் சொல்லிக் கேட்டால் அந்த வங்கியும் திவாலாகும். ஆனால் Depression,. Recession முதலியவை மறைந்திருந்து கொரில்லாத் தாக்குதல் நடத்துவது போன்றது. கடனே இல்லாத நிறுவனங்கள் தப்பிக்கும். மீதி எல்லாமே விதியின் கையில் ஆடும் பொம்மைகள்.

பன்னிரண்டு வயதில் வீட்டுவேலைக்கு சென்ற போது, ராணுவஅதிகாரி ஒருவரால் பலமுறை பாலியல் வல்லுறவுக்குள்ளான சிறுமி பின் வளரும் போது ஆண்களை எப்படி அணுகுவாள்? நம்பிக்கைக்குரிய நண்பனின் கெஞ்சல்களைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாது எங்கோ உள்ளுக்குள் பழுதாகி இருக்க வேண்டும். அதனால் தான் அவள் Lesbionismல் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.
1920 களில் உலகின் எந்த பாகத்திலும் Homosexuality ஒரு பாவமாகக் கருதப்பட்டது.

Why does Love Die? இரண்டுபேருமே மிக நல்லவர்களாக இருந்த போதிலும் எல்லா பழக்கவழக்கங்களும் Predictableஆக இருப்பது ஒரு முக்கிய காரணம். ஒரு ஆயுள் என்பது மிக நீண்டது. அதன் முக்கால்பாகம் ஒருவருடனேயே என்பதைப் போல முட்டாள்தனம் வேறில்லை.

நாவல் புதிதாக எழுத நினைப்பவர்கள் இஸபெல்லைத் தவறாது படிக்க வேண்டும். ஒரு Family drama கதையைச் சொல்லிக் கொண்டு போகையில் Backdropஆக அரசியல் மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும். அத்துடன் விவாகரத்து இல்லாத காலத்தில் ஆண்கள் தான் annulmentஐ முடிவு செய்யமுடியும் போன்ற பெண்ணிய சிந்தனைகளும் கலந்து வரும். இஸபெல்லின் மையக் கதாபாத்திரங்கள் பெண்ணாக வரும்பொழுது அவரைப் பெரிதும் பிரதிபலிப்பார்கள். இஸபெல்லின் பாஷையில் Sinners. இந்த நாவலில் லத்தீன் அமெரிக்க நாடுகள், குறிப்பாக அர்ஜென்டினா, கம்யூனிஸ்ட் என்று கருதப்பட்டவர்களையும் Mass Murder செய்ததையும் அதற்கு கத்தோலிக்கத் திருச்சபைகள் சர்வாதிகாரிகளுக்கு ஆதரவாக இயங்கியதையும், CIAவின் பங்கையும் சொல்கிறது.

பாட்டி பேரனுக்கு எழுதும் கடிதம் அல்லது Confession என்று எடுத்துக்கொள்ளலாம் இந்த நாவலை. நூறாண்டுகள் விரியும் அவரது கதையில் எத்தனையோ விசயங்கள் வருகின்றது. முந்நூற்று முப்பத்தாறு பக்கங்களில் பலவிசயங்களை எடுத்துக் கொள்ளும் நாவல். இஸபெல் எண்பது வயதை நெருங்குகிறார். இது இவரது இருபத்தி ஒன்றாவது நாவல். மையக்கதாபாத்திரம் நான் இன்னும் முப்பது வயதாகவே உணர்கிறேன் என்பது உண்மையில் இஸபெல்லின் குரல். இஸபெல்லால் ஒருநாளும் ஒரு மோசமான அல்லது சராசரிக்குக் கீழான நாவலை எழுதவே முடியாது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s