அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர். கறுப்பின எழுத்தாளரான இவரது கதைகளில் பெரும்பாலும் கருப்பினப் பெண்களே முக்கிய கதாபாத்திரங்கள். பதினோரு நாவல்கள் எழுதிய இவரது ஒரே சிறுகதையிது, பிப்ரவரி 2022ல் முதன்முறையாகப் புத்தகமாக வெளிவருகிறது. இவரது நாவல்களைப் படிக்க விரும்புபவர்கள் The Bluest Eye அல்லது Beloved நாவலில் இருந்து ஆரம்பிக்கலாம். நோபல், புலிட்சர் உள்ளிட்ட பல விருதுகள் பெற்ற இவர் 2019ல் மறைந்தார்.
Twyla and Roberta இருவரும் முதல் முதலாகப் பார்த்துக் கொண்டது அனாதை இல்லத்தில்.
ஒருவர் Black மற்றவர் White. சிறிது காலத்தில் இருவரும் அதை விட்டு வெளியே வருகிறார்கள். சில வருடங்கள் இடைவெளியில் தற்செயலாகச் சந்திக்கிறார்கள். ஒவ்வொரு சந்திப்பிலும் ஒரு மாற்றம்.
Racism இரண்டு நண்பிகள் இடையில் நுழைவது தான் Morrison சொல்ல விரும்புவது. இருவரது பின்புலம், அம்மாக்கள், வசிக்கும் பகுதி, நம்பிக்கைகள் என்று எல்லாமே சொல்லப்பட்டும் இருவரில் யார் Black யார் White என்பதே கடைசிவரை தெரியாத Hide and Seek Game இந்தக்கதை.
Roberta தான் ஒவ்வொரு முறையும் வித்தியாசமாக நடந்து கொள்கிறாள், கூட்டமாக Twylaவின் காரை ஆட்டும் போது அவள் உதவிக்கு வருவதில்லை, எனவே அவள் Black ஆக இருக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது, ஆனால், கதை Twylaவின் கோணத்தில் சொல்லப்படுவதால் அவள் தன்னை Victimஆகத் தான் Project செய்வாள்.
இருவருமே மற்ற குழந்தைகள் போல் அனாதைகள் இல்லை, பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள், அத்துடன் இருவருக்குமே படிப்பு வரவில்லை, இருவரையும் யாரும் விளையாடச் சேர்த்துக் கொள்வதில்லை. அதனால் இயல்பாக இருவருக்கிடையில் ஏற்படும் பிணைப்பு, வருங்காலங்களில் உறுதியாக நிலைப்பதில்லை. சா. கந்தசாமி அவருடைய தொலைந்து போனவர்கள் நாவலில் இந்த Themeஐயே கையாண்டிருப்பார்.
Morrison சொல்ல விரும்புவது அமெரிக்கா எப்போதும் Black மற்றும் Whiteக்கான இருதேசம். எப்போதும் ஒருதேசம் இல்லை. ஒருவர் உரிமைக்காகப் போராடுகையில் அடுத்தவர் பகையாகிறார். இதற்கிடையில்
Childhood memory என்பது எப்படி Fadeஆகி நிஜம் போலவும் கற்பனைபோலவும் தோற்றமளிக்கிறது என்பதற்கு Maggie Incident உதாரணம். நீ இல்லையென்றால் உயிருடன் இருக்கமாட்டேன் என்றவர், அந்நியருடன் தோளுரச எதிர்திசையில் கடந்து சென்றதைப் பார்த்திருக்கிறீர்களா?