Beta Readerஆக சிலகாலம் இருந்தேன். பெயர்க்குழப்பம், தகவல் குழப்பம், சம்பவங்களில் முரண்பாடு போன்றவற்றை கண்டுபிடித்துச் சொன்னால், உடனே திருத்தி விடுவார்கள். ஆங்கில நூல்கள் பெரும்பாலும் ஆய்வுக்குப்பிறகே எழுதப்படுவதால், அதிகம் குறைகள் இருக்காது. வேறு ஏதேனும் கருத்து சொன்னால், ஆசிரியருக்கு விருப்பமிருந்தால் செய்வார்கள், இல்லை இப்படியே இருக்கட்டும் என முடிவு செய்வார்கள். அத்துடன் அந்த நூலுக்கும் நமக்குமான தொடர்பு முடிந்தது.

தமிழிலும் எழுத்தாளர்கள் அவர்களுக்கு நம்பிக்கைக்கு உகந்தவர்களிடம் நூலை அனுப்பிக் கருத்து கேட்பதுண்டு. ஆனால் அது சிறிய வட்டம். நெருங்கிய நண்பர்களிடம் கருத்து கேட்கும் போது, ஜே.ஜே போல் ஓமனக்குட்டியின் கவிதைநூலை எல்லோராலும் வீசி எறிய முடியாது. Professional readersஐ தமிழில் அடையாளம் கண்டுபிடிப்பது கடினம். வெளியே கொடுத்து வாங்கும் போது, புத்தகத்தின் பகுதியோ அல்லது முழுதுமோ வேறு ஒருவரால் காப்பி அடிக்கப்பட்டு, இதற்குமுன் வெளிவரும் வாய்ப்பும் அதிகம்.

நான் தான் அந்தநூலை Readable ஆக்கிக் கொடுத்தேன் என்று சொன்னதையும் கேட்டிருக்கிறேன். எழுத்தாளர்கள் அதிகம் பயப்படுவது இதற்குத்தான். Creativity என்பதே முக்கியம். Proof reader ஒரு போதும் படைப்பாளி ஆக முடியாது. எடிட்டர் யோசனைகள் சொல்லலாம், பிரசுரிக்கலாமா இல்லை வேண்டாமா என்று முடிவெடுக்கலாம், அதைத்தாண்டி அந்தப் படைப்பில் அவர் என்ன உரிமை கொண்டாட முடியும். வாசகர்கள் எவ்வளவு பரந்த வாசிப்பைக் கொண்டிருந்தாலும், அவர்கள் படைப்பாளி இல்லை. எனவே Creativity தான் ஒரு படைப்பில் அடிப்படை, மற்ற எல்லாமே அதை நேர்த்தி செய்யும் முயற்சிகள். எனவே திருத்தினாலும், புரட்டிப் போட்டாலும் படைப்பு எழுத்தாளருடையதே.

எழுத்து நேர்த்தியாக வேண்டுமென்றால், பலரது யோசனைகளைக் கேட்பதில் தவறில்லை. குறைந்தது ஐந்து பேர் வாசிக்கும் அச்சுக்கு முந்தைய பிரதியில், தகவல் பிழைகளுக்கு வாய்ப்பு வெகுகுறைவு. ஆங்கிலத்தில் ARC நூறு பிரதிகள் வெளியிடப்பட்டு, புத்தகம் வருமுன்பே நூற்றுக்கணக்கில் விமர்சனங்கள் இணையத்தில் இருப்பதும் வழக்கம். வரிகளை எந்தக் காரணம் கொண்டும் அடுத்தவரின் மொழிநடையில் மாற்ற அனுமதிக்காதீர்கள். பிரபல எழுத்தாளர்களின் மொழிநடை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு படைப்பின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகும். அடுத்த புத்தகம் எழுதுமுன் நல்ல புத்தகம் என்று பரவலாகச் சொல்லப்படும், பத்து புத்தகங்களையேனும் படியுங்கள். வருடத்திற்கு ஆயிரம் பக்கமுள்ள புத்தகம் எழுதும் Stephen King குறைந்தபட்சம் 80 நூல்களேனும் படிக்கிறார்.
எழுத்தாளர்கள் அவர் சொல்லியதை தாரக மந்திரமாகவும் கொள்ளலாம். “If you don’t have time to read, you don’t have the time (or the tools) to write.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s