கஞ்சுகம் – பா.கண்மணி:

மேலைநாட்டு True Crime Stories எல்லாவற்றிலும் வரும் பொதுவான விசயம் Rape victimsன் ஒரே சிந்தனை எப்படி உயிர் தப்பிப்பது என்பதே. அவர்களுக்கும் பின்னால் Trauma இருக்கும், நிரந்தர பயம் இருக்கும் ஆனால் உயிர் முக்கியம். இந்தியப் பெண்கள் மானம் முக்கியம், மயிர் நீத்தால் உயிர்நீக்கும் என்று புகட்டி வளர்க்கப்படுகிறார்கள். இந்த மனப்பான்மையை உடைக்க முயற்சிக்கும் கருவைக் கொண்டதே கண்மணியின் இந்தக்கதை.

நல்ல கதைக்கரு, Presentationல் ஏற்பட்ட இடைவெளிகளால் சாதாரண கதையாகிப் போனது. Logical situation மற்றும் பிரச்சனைக்கு கதையில் சொல்லும் தீர்வு இவற்றை கதையில் கொண்டு வருவதிலேயே கதைகள் வெற்றி பெறுகின்றன. அதனால் தான் நல்ல சிறுகதை எழுதுவது கடினமாகிறது. நல்ல கதைக்கருவை தேர்ந்தெடுத்ததற்கு பாராட்டுகள், ஆனால் கண்மணி சிறுகதைகளுக்கு நிறையவே உழைக்க வேண்டும்.

முடிவிலி – கிருத்திகா:

இதே இதழில் அமரந்தா கதையில் வரும் பெண்ணுக்கும், இந்தப்பெண்ணுக்கும் பெயரே இல்லை, அலுவலகத்தில் வேலை பார்க்கவில்லை, இருவரையுமே கணவன் படுக்கை நேரம் தவிர மீதிநேரங்களில் பொருட்படுத்துவதில்லை. ஆனால் இவளது உணர்வு, மொழி, அதை கடத்தும் விதம் வேறு. அப்படித்தான் கதைகள் இலக்கிய அந்தஸ்தைப் பெறுகின்றன.

தாம்பத்யம் ஒரு சங்கீதம் என்றால் அதில் அபஸ்வரத்தை யார் சிறிய முகச்சுழிப்பின்றி,
புன்னகையுடன் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களது மணவாழ்க்கை ஆல் போல் தளைத்தோங்கும். நிலாவை சிநேகம் கொண்டு, கிண்டல் செய்ய பழகிக் கொள்வது, வெளிச்சம், ஜன்னல் திறந்திருந்தால் ஆகாது (உமா மகேஸ்வரியின் கவிதை ஒன்றில் அந்தப்பெண் தென்னங்கீற்று அசைவதைப் பார்த்துக் கொண்டிருப்பாள்), கோபத்தில் கணவனுக்கு குரங்குமுகத்தைப் பொருத்துவது, என்னால் தாங்க முடியவில்லை என்பது, ஈகோவைக் குழி தோண்டிப் புதைப்பது என்று அவளது உணர்வுகள் அற்புதமாக வடிக்கப்பட்டிருக்கின்றன. சமகாலத்துப் பெண்களின் அலைபாய்தல்கள், அகஉணர்வுகளைத் தொடர்ந்து கதைகளில் திருத்தமாகக் கொண்டு வருகிறார் கிருத்திகா.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s