ஆசிரியர் குறிப்பு:

ஆங்கில இலக்கியத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர். மொழிபெயர்ப்பில் தொடர்ந்து இயங்கி வருகிறார். ஏற்கனவே அமிதபா பக் ஷியின் நூலொன்றை மொழிபெயர்த்துள்ள்ளார். இது இவரது இரண்டாவது மொழிபெயர்ப்பு நூல். பல ஆசிரியர்களின்சிறுகதைகளின் தொகுப்பு.

பத்து கதைகள் கொண்ட தொகுப்பு இது. ஒன்பது ஆசிரியர்களின் கதைகள் இடம் பெற்றிருக்கின்றன. ஐந்து மாஸ்டர்களின் கதைகள், நான்கு நாவலாசிரியர்களின் கதைகள். Willa Catherன் My Antonia போலவே
மற்றவர்களுக்கும் அவர்கள் பெயர் சொல்லும் நாவல்கள் இருக்கின்றன.

இஸபெல்லின் முதல் கதைக்கும் Maupassantன் Vendetta கதைக்கும் கரு ஒன்றே. அம்மா மகனது கொலைக்குப் பழிவாங்குவது. Maupassantன் கதையில் அது இரகசியமாகவும் இஸபெல் கதையில் Celebration ஆகவும் நடக்கிறது. இஸபெல்லின் கதை முடிவில் அவிழ்க்கும் ஒரு முடிச்சு அவருடைய Special touch. இஸபெல்லின் பெண்கள் Predict செய்ய முடியாதவர்கள்.
இரண்டாவது கதை சிலியின் இருண்ட நினைவுகளைத் தோண்டி எடுக்கிறது. ஆணால் Perform பண்ணமுடியாமல் போவதும் இஸபெல் Touch. போவின் கதையைப் படிக்கையில் எப்போதும் லப்டப்
என்று வேகமாகத் துடிக்கும் நம் இதயத்தோடு துணைக்கு இந்தக்கதையில் இன்னொரு இதயம் துடிக்கிறது. வழக்கமான Poe கதைகளுக்கு மாறாக Moral ending.

பிரிய தஸ்தாயேவ்ஸ்கியின் கதை ஒரு மேஜிக். கடிதங்களால் கதை சொல்லும் யுத்தி. நண்பர்கள் இருவர் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாதது மட்டுமல்ல, உடன் இருப்பவர்களையும் புரிந்து கொள்ளவில்லை. அடுத்து Double என்ற தனது முதலாவது நாவலிலேயே தெளிவான மொழிநடையை உபயோகித்தவர் அதன்பின் எழுதிய இந்தக் கதையில் வேண்டுமென்றே குழப்பமான மொழிநடையைப் பயன்படுத்துகிறார், நண்பர்கள் இருவருக்கும் Communicationம் பிரச்சனை
என்பதைச் சொல்ல. கடைசியாக இருவரும் ஒருவரிடமே ஏமாறுகிறார்கள். எப்படி ஏமாறுகிறார்கள் என்பது தான் இந்தக் கதையின் மர்மமுடிச்சு.

வில்லா காதர் முழுமையான நாவலாசிரியர் போலிருக்கிறது. அவரது கதையைப்பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. டிம் பார்க்ஸ் கதை அதிர வைத்தது. ஆட்டுக்குட்டி போல் பழகிய தடத்தில் ஓடும் மனம். எவ்வளவு நுட்பமான கதை! இவரது சிறுகதைகளைப் படிக்க வேண்டும். மற்ற இருவரது சிறுகதைகளும் என் பார்வையில் சாதாரணமானவை. ஸாமடாரின் கதை Speculative fiction ஆனால் தாக்கம் குறைவு.

சுபத்ராவின் மொழிபெயர்ப்பு சிறப்பாக உள்ளது. குறிப்பாக பால்சாக், மார்ஷல் ப்ரூஸ்ட் கதைகள். தாஸ்தயேவ்ஸ்கியின் கதையில் கூட வேண்டுமென்றே அவர் குழப்பமான நடையைத் தேர்ந்தெடுத்திருப்பார். ஆனால் அவற்றை எல்லாம் எளிதாகக் கடந்திருக்கிறார் சுபத்ரா. மாஸ்டர்களின் கதைகளைத் தமிழில் படிப்பதில் எப்போதும் தனி ஆனந்தம். மற்ற ஆசிரியர்களின் கதைகள் தேர்வை மட்டும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பிரதிக்கு:

தமிழினி 86672 55103
முதல்பதிப்பு ஜனவரி 2022
விலை ரூ. 150.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s