Osakaவில் பிறந்தவர். கவிஞராக இலக்கியப் பயணத்தை ஆரம்பித்தவர். இவர் படைப்புகளில், கவிதை நடை, பெண்ணுடலின் மீதான ஆழ்ந்தபார்வை, புதிய சமுதாயத்தில் ஏற்படும் குழப்பங்கள் முதலியன நிறைந்திருக்கும். இவர் முதன்முதலில் Breast and Eggs என்ற நூல் மூலம் உலகவாசகர்களின் கவனத்தைக் கவர்ந்தார். இந்த நாவல் ஜூன் 2021ல் வெளியாகியது.

Kojimaவின் அப்பாவை விவாகரத்து செய்து வேறு பணக்காரர் ஒருவரை மணந்து கொள்கிறார் அவளது அம்மா. அப்பாவின் அன்பும் அவரிருக்கும் வறுமைநிலையும் Kojimaவை குற்றஉணர்வில் சாப்பிடாமல், உடலை சுத்தம் செய்து கொள்ளாமல் வித்தியாசமாக நடந்து கொள்ளும் படி செய்கிறது. பெயர் சொல்லாது eye என்ற பட்டப்பெயரில் தன்னிலையில் கதை சொல்லும், பையனுக்கு அம்மா இறந்துவிட, அப்பா வேறு பெண்ணை மணக்கிறார். அவனுக்கு மாறுகண்.

முழுக்கவே School Bullying பற்றிய கதை இது. மேலே குறிப்பிட்ட இருவரும் மற்ற மாணவர்களில் இருந்து வித்தியாசமாய் இருப்பதனால், பலியாடுகள் ஆகிறார்கள். ஒருவரில் மற்றொருவர் ஆறுதல் தேடிக் கொள்கிறார்கள். கடிதங்கள் பரிமாறிக் கொண்டு, அவற்றை மறுபடியும் மறுபடியும் படிப்பதில் அடுத்தவர் துணையிருப்பதாக நம்புகிறார்கள்.

ஒன்பது அத்தியாயங்கள் கொண்ட நாவலில் எட்டு அத்தியாயங்கள் பாதிக்கப்பட்டவரின் கோணத்தில் Bullying மற்றும் இருவரிடையே வளரும் நட்பு. பதினான்கு வயது சிறார்களிடையே இருக்கும் வன்முறையும், sadismம் முழுமையாக வெளிவருகிறது.

எது சரி எது தவறு என்பது தனிப்பட்ட கோணத்தில் மாறுகிறது. ஒரே விசயத்தை பாதிக்கப்பட்ட Kojima சொல்வதற்கு முற்றிலும் வேறான பார்வையில் Momose சொல்கிறான். நாவலில் ஓரிடத்தில் ஒரு தந்தை தனது சிறுவயது மகளைக் கூட்டிச் செல்வதைப் பார்த்து Momose சொல்கிறான்.
” இவரது மகளை யாரோ ஒருவர் வல்லுறவு கொள்ளுவதை வீடியோவில் பார்க்கும் போது இவருக்கு ஏற்படும் மனநிலையும், யாரோ முகம் தெரியாத அதேவயதுப் பெண்ணுக்கு நடப்பதைப் பார்க்கையில் ஏற்படும் மனநிலையும் ஒன்றா? ” Bullyingகூட பாதிக்கப்பட்டவருக்கும் அதை செய்பவருக்கும் ஒன்றல்லவே.

Kojima அம்மாவின் புதிய கணவனை வெறுக்கிறாள். மாறாக இவன் அப்பாவின் புதிய மனைவியை அம்மா என்றே அழைக்கிறான், அப்பாவை விட புதுஅம்மாவிடம் நெருக்கமாக உணர்கிறான். அம்மாவிற்கும் அவனுக்கும் இருக்கும் உறவு கவிதை போல் விரிகிறது. பதினான்கு வயதில் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமாக நடந்து கொள்ளும் குழந்தைகளின் கோணத்திலேயே மொத்தக் கதையும் நடக்கிறது. ஒருபுறம் பணமிருந்தால் போதும் என்று அன்பானவனை தூக்கி எறியும் பெண், இன்னொரு இடத்தில் பணமிருந்தாலும் அன்பில்லாத இடத்தில் இருக்கக்கூடாது என்று நினைக்கும் பெண் என்று இரண்டு வித்தியாசமான பெண்கள் வருகிறார்கள். பாண்டஸியில் மெல்லிய குற்றஉணர்வை ஏற்படுத்தும் செயல் நேரில் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. பதினான்கு வயது சிறுவனின் பாலியல் உணர்வு தெளிவாகச் சித்தரிக்கப்படுகின்றது. இருநூறு பக்கங்களுக்குள், வாசகருக்கு நிறையக் கேள்விகளை மனதில் எழுப்பும், பல திசைகளில் பயணிக்கும், Powerful Novelஐ எழுதுபவர் யாரென்றாலும் Master Story teller தான். இந்த மேயில் இவரது புதுநாவல் All the Lovers in the night வெளிவருகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s