K.R.Meera:

மீரா தற்போதுஎழுதிக்கொண்டிருக்கும் சமகால எழுத்தாளர்களில் குறிப்பிடத் தக்கவர். இவரது நான்கு நாவல்கள், ஏழு குறுநாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுப்புகள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. கேரளாவின் Major Literary awards எல்லாவற்றையும் வாங்கியிருக்கிறார். Hang Woman என்ற நாவல் இவருடைய மாஸ்டர்பீஸ். M. செந்தில்குமார் மொழிபெயர்ப்பில் விரைவில் தமிழில் வரவிருக்கிறது.

Nisha Susan:

எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர். இரண்டு ஊடக நிறுவனங்களின் உரிமையாளர். புனைவு மற்றும் அல்புனைவு இரண்டுமே எழுதி வருகிறார்.

மீராவின் Hang woman மற்றும் Poison of Love இரண்டுமே பெண்களின் Anti Love stories.
இதிலும் ஒரு Anti Love வந்தாலும், ஒரு Sweeping love syoryம் இணைந்து வருகிறது.
இந்து- முஸ்லீம் காதலித்தால், பெண் இந்துவாக இருந்து விட்டால் பிரச்சனை வராது என்ற Mythக்கு மீராவும் விதிவிலக்கல்ல. நாயர் பெண், முஸ்லீமை மணந்து மதம் மாறுகிறாள். இந்துப்பெண் மாப்பிளை முஸ்லீமிடம் காதலில் விழுகிறாள்.

Slim ஆக ஆனால் Powerfulஆக நாவல்கள் எழுதுவது மீராவிற்கு வழக்கமாகி விட்டது.
முதலாவதாக பெண் விடுதலை. முப்பத்தாறு வருடங்கள் திருமணம் என்ற சிறையில் இருந்து அம்மா வெளியேறுகிறாள். மகள் சில வருடங்களிலேயே வெளியேறுகிறாள். பெண்ணியம் கூட யார் கோணத்தில் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து மாறும்.
அப்பா எல்லாப் பெண்களும் நாள்முழுக்க உழைக்கத்தானே செய்தார்கள் உன் அம்மா மட்டும் என்ன தனியாகச் செய்தாள் என்கிறார். அம்மா வாயில்லா ஜீவன்கள் காட்டும் அன்பு மனிதர்களைக் காட்டிலும் பலமடங்கு உயர்ந்தது என்று தனியாகப் போகிறாள்.

Single Parent வளர்க்கும் குழந்தைகள், நல்ல IQ இருந்தாலும் கூடப் பழகுவதில், கும்பலில் கலப்பதில் பெரும்பாலான சமயங்களில் வித்தியாசமாக நடந்து கொள்வார்கள். இந்த நாவலில் வரும் அத்வைத் எனும் சிறுவன் ABHD குறைபாடு மட்டுமின்றி சிறுவயதிலேயே தந்தையால் கைவிடப்பட்டவன். கூடுதல் மாவட்ட நீதிபதியாகத் தனியாக வாழும் தாய்க்கு அத்வைத்தை சமாளிப்பது என்பது இன்னொரு போராட்டம்.

அரசியல், இந்த நாவலில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு கற்பனை இடத்தின் மீது பாபர் மசூதியின் சாயல்களை ஏற்றுகிறார் மீரா. ஆவணங்கள் மட்டுமே நீதிமன்றத்தில் உரிமையை நிலைநாட்ட உதவும், தீர்ப்புகளும் ஆவணங்களுக்கு சாதகமாகவே இருக்கும். ஆனால் வழிவழியாய் வந்த நம்பிக்கை என்பது வேறு. புனிதர் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் இடத்தில், அதை வாங்கியவர் கழிப்பறைகள் கட்டப்போவதாக வதந்தி வருகிறது. பரஸ்பர அவநம்பிக்கை, பயம் எல்லா மோதல்களுக்கும் காரணமாக அமைகிறது.

மாயயதார்த்தத்தை இந்த நாவலில் வானுக்கு இழுத்துச் செல்லும் காதலுக்கு உபயோகித்திருக்கிறார். எட்வர்ட் ரோஜாவின் மணம் நாசியை நிரப்புவதில் இருந்து, பறக்கும் கார், காற்றில் கிடைக்கும் மிட்டாய்கள், வானத்தில் இருந்து பொழியும் பூ மழை, ஒருவரின் மனதை மற்றவர் அப்படியே படிப்பது என்று மாயயதார்த்தமும் காதலும் நாவலில் இணைந்து பயணிக்கிறது.

இந்த நாவலின் மையக்கதாபாத்திரம், அபூர்வ சக்தி படைத்த முன்னோர் ஒருவரைக் கனவிலும் நினைவிலும் உணர்கிறாள். அந்த வகையில் இதை Modrrn fable என்றும் சொல்லலாம். மொத்தத்தில் மீராவின் கலைநுட்பத்தில் மற்றுமொரு மாலை. நிஷாவின் மொழிபெயர்ப்பு நன்றாக உள்ளது, Poison of Love மொழிபெயர்த்த Ministhy S மற்றும் Hang Woman மொழிபெயர்த்த Devika என்று மலையாளத்தில் இருந்து ஆங்கிலத்திற்கு சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் பலர் இருக்கின்றார்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s