பதி – கமலதேவி:
Simpleஐன Story ஆனால் ஒரு உளவியல் அதில் ஒளிந்திருக்கிறது. பெண்களுக்கு மகனுக்குப் பிறகே கணவன். சிலர் அதை வெளிப்படையாகக் காட்டுகிறார்கள், பலர் அதை மறைத்துக் கொண்டு அவர் தான் எனக்கு எல்லாம் என்கிறார்கள். வேண்டாத விருந்தாளி போல் குடிபுகுந்து எல்லோரது மனதையும் கவர்ந்த தாத்தா. பொம்பளைப் பிள்ளைய கால் செருப்பா நினைக்கிறவனோட எதுக்கு வாழனும்?
தாத்தா அதிக நாட்கள் உயிரோடு இருக்க மாட்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது.
கடவுளுக்கென ஒரு மூலை- கன்னட மூலம்- வைதேகி- தமிழில் அனுராதா கிருஷ்ணசாமி:
குழந்தை இல்லாத தம்பதியர் பிரிவதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கின்றன. தொடர்ந்து சேர்ந்து இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களுக்குள் அதிகம் பேசிக் கொள்பவர்கள். வீட்டின் வாடகைக்கு வந்து போகும் ஒவ்வொருவரைப் பற்றிய வம்புப்பேச்சுகள், கடவுளுக்காக ஓதுக்கிய மூலையில் மாறும் கடவுளர்கள் என்று நகரும் கதையின் முடிவில் டிவிஸ்ட் இருக்கிறது. சாதாரணமான கதை ஆனால் இயல்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அனுராதாவின் மொழிபெயர்ப்பு எளிமை, இனிமை.
உளவாளி – எம்.கோபால கிருஷ்ணன்:
எழுத்தாளர் பைரவன், மன்னார் &Co பைரவன் இல்லை. அசல் எழுத்தாளர் தான்.
ஆனால் சில நாட்களாக அவர் பிரச்சனை என்னவென்றால் அவர் எழுத நினைப்பதை அல்ல, அவருடைய ஆழ்மனதில் இருப்பதை ஒரு வார்த்தை எழுதினால் கணிணி தானாகவே எழுதி விடுகிறது. பெண்கள்குறித்து உயர்வாக எழுதுபவரின் Subconsciousல் உள்ளதை கணிணி எழுதினால் அவர் பிம்பம் என்னவாகும்! சுஜாதா பலவருடங்களுக்கு முன் கம்ப்யூட்டர் எழுதிய கவிதை என்று பகிர்ந்திருந்தார். இப்போது மார்கழி என்று எழுதினால் பனி என்ற வார்த்தையை தேர்ந்தெடுத்துக் கொண்டு கதை எழுதும் கம்ப்யூட்டர்கள் வந்து விட்டன. எனவே இந்தக் கதையை Fantasy என்று சொல்ல முடியாது. கோபால கிருஷ்ணனிடமிருந்து முற்றிலும் வித்தியாசமான கதை. புனைவின் சுதந்திரத்தை முழுவதுமாக உபயோகித்து எல்லாற்றையும் பகடியாடியிருக்கிறார்.
பூதளயம் – சாரா ஜோசப்- தமிழில் அர்விந்த் வடசேரி:
விண்கலத்தில் பறந்தாலும் கற்பைப் பத்திரமாகப் பார்த்து கொள்ள வேண்டும். கேரளாவின் கிருத்துவக் குடும்ப வாழ்க்கை கதையின் பின்னணியில் வருகிறது.
எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண் பறப்பதற்கு எத்தனை பேர் யோசனை, அதற்குப் பின் நடக்கும் அரசியல் என்று சுவாரசியமாகப் போகிறது. அர்விந்த் வடசேரியின் நல்லதொரு மொழிபெயர்ப்பு
கார்கூடல் பட்டி – கோவிந்தராஜ் சுப்பிரமணியம்:
பேருந்தில் ஏறி உட்கார்ந்து சுற்றி நடப்பதைப் பற்றி எழுதியது போன்ற கதை.
லவ்சதாவும் கள்ளிக்காக்காவும் – சாரோன்:
வித்தியாசமாக ஆரம்பிக்கும் கதை காட்டுக்குள் திசை தெரியாது தடுமாறுகிறது. நிறையவே எடிட்டிங் செய்ய வேண்டிய கதை.
https://drive.google.com/file/d/1oD-11I0Ol0-H8bZLdE1W7qNbTlvcmj8r/view?usp=sharing