Bora கொரியாவைச் சேர்ந்த எழுத்தாளர். தற்போது Yonsei பல்கலையில் ருஷ்ய இலக்கியத்தைக் கற்பிக்கிறார். ருஷ்ய மற்றும் போலிஸ் மொழிகளிலிருந்து பல நூல்களை கொரிய மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இதுவரை மூன்று நாவல்கள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

Boraவின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலான இதுவே புக்கர் நீண்ட பட்டியலுக்குள் வந்து இப்போது இறுதிப்பட்டியலுக்குள்ளும்
நுழைந்து விட்டது. பத்து கதைகள் அடங்கிய தொகுப்பில் அநேகமான கதைகளில் அமானுஷ்ய விசயங்கள் நடைபெறுகின்றன.
Magical realism, Fantasy, Gothic romance, Surreal என்று எல்லா Genresகளிலும் கதைகள் இருக்கின்றன. Horror storyயும் Sci fi storyயும் Modern Fable மற்றும் Folk tales ஒரே தொகுப்பில் படிப்பதென்பதே வாசகர்களுக்கு ஒரு சர்ரியல் வாசிப்புத்தன்மையை அளிக்கக்கூடும்.

கதை சொல்லும் யுத்திகள் எதுவாகினும் பெண்கள் ஆண்களினால் துயரப்படுவது, கண்டு கொள்ளாமல் தனித்து விடப்படுவது அடிக்கடி நடக்கின்றன. முதல் கதையில் அந்தப்பெண் கழிவறைக்குப் போகும் போதெல்லாம் தலை மட்டும் வெளிவந்து அம்மா அம்மா என்கிறது. இரண்டாவது கதையில் PCODக்கு கர்ப்பதடை மாத்திரை சாப்பிட்ட பெண் ஆண்களுடன் உறவே இல்லாது கர்ப்பமாகிறாள். இரண்டிலும் அவர்கள் பிரச்சனையை அவர்களே தனியாக எதிர்கொள்கிறார்கள், மற்றவர்கள் இவர்களது தவறு என்று குறைசொல்ல மட்டுமே வருகிறார்கள். .Snare கதையில் பெண் Physical violenceஆல் காயங்கள் ஏற்படுவது மட்டுமின்றி சொந்த சகோதரனால் பாலியல் வல்லுறவுக்கும் உள்ளாகிறாள். Home Sweet Home கதையில் மனைவி, கணவனால் மனரீதியாகவும், பணரீதியாகவும் ஏமாற்றப்படுகிறாள். அதே நேரத்தில் ஆண்கள் சக்தி வாய்ந்தவர்களாக, அடக்கி ஆள்பவர்களாகக் கதைகளில் வருகிறார்கள்.

சாபம் என்ற Themeம்இவர் கதைகளில் அடிக்கடி வருகிறது. முதல் கதை The Head திருமணத்திற்கு முன் கருச்சிதைவு செய்யப்பட்ட Foetusன் சாபம். Cursed Bunny கதை முழுக்கவே சபிக்கப்பட்ட குடும்பத்தின் அழிவு. Scarsல் அநியாயமாகப் பலிகடா ஆனவனின் சாபம். Ruler of the Winds and Sandsம் ராஜா செய்த குற்றத்தின் சாபத்தை அனுபவிக்கும் இளவரசன் பற்றிய கதை.

Frozen Finger கதையின் முடிவு வரை வாசகர்களை Guessingல் வைத்திருக்கும் கதை. Snare கதை Greed மற்றும் Poetic justice என்று நாம் நூறாயிரம் தடவைகள் கேட்ட விசயத்தையே முற்றிலும் வேறுபட்ட பாணியில் சொல்லப்படும் கதை. Good by My Love தொகுப்பின் Sci fi கதை. Ishiguroவின் Klare and Sun போலவே Artifical Intelligenceஐத் தோழர்களாகக் கொள்ளும் கதை. ஆனால் இது Horror வகைமையைச் சார்ந்தது.

Bora Post Modernism படைப்புகள் எழுதும் ருஷ்ய பெண் எழுத்தாளர்களை மொழிபெயர்ப்பவர். அவர்கள் பாதிப்பு தவிர்க்க முடியாமல் இவர் எழுத்திலும் இருக்கிறது. கொரியாவின் மற்றுமொரு பெண் எழுத்தாளரான Han Kang போலவே இவருடைய பெயரும் உலக வாசகர்களிடையே விரைவாகப் பரவி வருகிறது. தொகுப்பின் நீண்ட கதை Scars Stephen King கதையை முற்றிலும் வேறு பாணியில் சொல்வது போல் இருக்கிறது.
நல்ல எதிர்காலம் இருக்கும் திறமை வாய்ந்த எழுத்தாளர் இவர். Anton Hurன் மொழிபெயர்ப்பு இந்தத் தொகுப்பிற்கு மிகப்பெரிய பலம். Not an easy read but it is worth the time and money.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s