Jonas டென்மார்க்கில் 1991ல் பிறந்தவர். இருபத்து நான்கு வயதில் நாவல் ஒன்றின் மூலம் இலக்கியப்பயணத்தை ஆரம்பித்த இவர், இரண்டாவதாக இந்த சிறுகதைத் தொகுப்பை 2018ல் Danish மொழியில் எழுதினார். சென்ற வருடத்தில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு,
2022 புக்கரின் நீண்ட பட்டியலில் இடம்பெற்றது.

Sci fi மற்றும் Surreal சூழல் கொண்ட கதைகளே தொகுப்பில் முழுவதுமாக இருக்கின்றன. ஐந்து நீள் கதைகள் (அதில் ஒன்று ஒரே கதையின் இரண்டாம் பாகம்) பெரும்பாலும் தனிமையையும், யாருடனாவது இணைந்து கொள்ளும் ஆர்வத்தையும், காமத்தையும் Themesஆகக் கொண்டுள்ளன. எளிதாக வாசிக்க முடியாத, எதையும் அதிகம் விளக்காத கதைசொல்லல், ஆனால் அதையும் மீறிச் செல்லும் வாசகர்களுக்கு உண்மையில் ஒரு Treat காத்திருக்கிறது. நான்கு கதைகளில் எது சிறந்த கதை என்று பலமுறை யோசித்தும் என்னால் சொல்ல முடியவில்லை. Jonasன் வெற்றி அங்கே தான் ஒளிந்திருக்கிறது.

Alvin கதையை எடுத்துக் கொள்ளலாம். IT நிபுணர் வேலையாக வந்த இடத்தில், அவர் வேலைபார்க்க வந்த வங்கிக் கட்டிடம் இருந்த இடத்தில் குழி தான் இருக்கிறது. முன்னாள் மனைவியின் முறையற்ற உறவில் மனம் நொந்து தனிமையில் இருக்கும் நடுத்தரவயதுக்காரரான இவரும், இளைஞன் ஒருவரும் தற்செயலாகப் பத்து நாட்கள் ஒன்றாகத் தங்க வேண்டியிருக்கிறது. இருவருக்கும் ஏற்படும் உறவு ஒரு அடுக்கு, Derivatives trading நடைமுறைகள் குறித்த பகுதி தனியடுக்கு, அடுத்து கட்டிடம் மொத்தமும் காணாமல் போனாலும், வங்கி ஊழியர்கள் அதற்குள் வேலைபார்ப்பது இன்னொரு அடுக்கு. மூன்றுமே ஒன்றுக்கொன்று நேரடித்தொடர்பு இல்லாத விசயங்கள். பின்னிரண்டும் Finance சம்பந்தப்பட்டவை. Derivative tradingன் அபத்தங்களும், அபரிதலாபமும், Brick and mortar என்ள Concept அழிந்து வங்கிகள் என்ன நடந்தாலும் வேலைசெய்தே ஆகவேண்டும் என்ற பொருளாதாரத்தின் பேரெதிர்பார்ப்புமே இந்தக் கதையில் இவர் சொல்ல விழைந்தது. இவர்கள் இருவரையும் பகடைகாய்களாகக் கதையைச் சொல்ல உபயோகித்துக் கொள்கிறார்.

Bad Mexican Dog இருபாகமுமே பதின்வயது சிறுவர்கள், வாழ்வாதரத்திற்காக Beach Boy வேலைக்கு வந்து, Touristகளின் பாலியல் தேவை உட்பட எல்லாத்தேவைகளையும் பூர்த்தி செய்வது. ஒருசிறுவன் அடித்துக் கொல்லப்பட்டது கூட ஒரு சம்பவமே இல்லை என்ற தொனியில் சொல்லப்படும் கதை. Me, Rory and Aurora சந்தர்ப்ப சூழ்நிலையால் போதைமருந்துக்கு அடிமையான இருவருடன் தங்குபவர் பற்றிய கதை. Rachel, Nevada இரண்டு பெண் குழந்தைகளைப் பறிகொடுத்த தம்பதியரில் ஒருவர் மதத்தில் மூழ்கி ஆறுதல் தேடுவதையும், மற்றொருவர் Adventureல் தன்னை ஒப்புவிப்பதையும் பற்றிய கதை. இந்தக் கதைக் கருவில் ஒரு முழுமையான Sci fi கதையும் கூட இந்தக்கதை.

நான்கு கதைகளுமே நேர்க்கோட்டில் ஒரே கதைக்கருவை விரித்துச் சொல்லப்படும் கதைகள் இல்லை. கதைகளை விட உணர்வுகளை அதிகமாக வாசகருக்குக் கடத்தும் முயற்சியாகவே இந்தக் கதைகள் தோன்றுகின்றன. Contemporary political மற்றும் Finance Worldல் இருக்கும் நெருக்கடிகளை அடிக்கடித் தொட்டுச் செல்கிறார். வழமைமீறிய நுட்பம் இவருடைய கதை சொல்லும் பாணியாக இருக்கிறது. சிறந்த மொழிபெயர்ப்பு என்று மூலஆசிரியர் உட்படப் பலராலும் குறிப்பிடப்பட்ட மொழிபெயர்ப்பு இந்தத் தொகுப்பிற்கு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s