Fosse நார்வேயில் பிறந்தவர். கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் என்று எல்லா தளங்களிலும் இயங்குபவர். பல விருதுகளைப் பெற்றவர். இந்த நாவல் Trilogyன் கடைசிப்பகுதி. ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டதால் இது Septology. 2022 புக்கரின் நீண்ட பட்டியலில் இருந்து இறுதிப் பட்டியலுக்கும் நுழைந்து விட்டது.
வாசகர்களின் அதிகபட்ச கவனத்தைக் கோரும் நூல் இது. முதலாவதாக பா.வெங்கடேசன் பாணியில் முற்றுப்புள்ளியே இல்லாத வரியில் எழுதப்பட்ட நாவல். அதிலும் தன்னிலையிலும், third person singularலும் மாறிமாறி கதை நகர்கிறது. அடுத்ததாக Asle என்ற ஓவியர் தன் வயதான காலத்தில், பழைய நினைவுகளை அசைபோடுவது போல் நகரும் கதையில் நிகழ்காலமும் கடந்தகாலமும் ஒன்றறக்கலந்து வருகின்றன. இவை மூன்றும் பரவாயில்லை. அதே ஊரில் இன்னொரு Asleயும் இருக்கிறார், அவரும் ஓவியர், அவர் கதையும் கலந்து வருகின்றது. (ஆசிரியர் விளக்கம் எதுவும் சொல்லாத போதும் இரண்டாவது Asle உண்மையில் Alter ego, ஆனால் Alter ego தனியாக வேறுஇரு பெண்களை மணமுடித்து விவாகரத்தும் செய்வது என்பது கொஞ்சம் far fetched இல்லையா! )
Robert Burnsன் My Luve is like a red, red rose என்ற கவிதைவரியில் இரண்டாவது Red கொடுக்கும் தாக்கம் முக்கியமானது. இவரது நாவலில் பல இடங்களில் Repetition ஒரு Hypnotism செய்வது போன்ற அதிர்வை வாசகர்களுக்குக் கடத்துகிறது. ஒரு எழுத்தாளர் எழுதுகையில் Conscious ஆக இது போல் Effectஐ உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதுவது என்பதை நினைப்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது.
பெரும்பான்மையான ஆசிரியர்கள் போலவே Christianity குறிப்பாக கத்தோலிக்கர்களின் நம்பிக்கை, நாவலில் வெகு அழுத்தமாகப் பதிந்திருக்கிறது. முதலாவது Asle மனைவி கேட்காத போதும் கத்தோலிக்கராக மதமாற்றம் செய்து கொள்கிறான். அவன் மூலமாகவே கிறிஸ்துவைப் பற்றிய பல விசயங்கள் நாவலில் கலக்கின்றன. ஞாயிறு தேவாலயத்திற்குப் போகாவிட்டால் நரகம் என்று சொல்லி வளர்க்கப்படும் பிள்ளைகள் பின்னால் பெரிய இலக்கியவாதியாக ஆனபின்பும் மதத்தை கக்கத்தில் இறுக்கி எடுத்துக் கொண்டு செல்ல பழகிக் கொள்கிறார்கள்.
மரணம் இந்த நாவலில் அடிக்கடி நடக்கிறது. முதலாவதோ Asleன் மனைவி Ales (just jumbling) அதற்கு முன் அவனது தங்கை, Alesன் அப்பா, அத்தை, இரண்டாவது Gora, இரண்டாவது Asle எல்லோரும் இறந்து போகிறார்கள். பல Premature deaths. Samuel Beckettனால் வெகுவாகக் கவரப்பட்ட Fosseயும் மரணத்தை அடிக்கடி கொண்டு வருவதில் வியப்பில்லை.
இது ஒரு Sad story. கதை என்று பெரிதாக எதுவுமில்லை. மொழிநடையும் கூட வாசகரை வெளியே தள்ளுவதற்கு தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்யும் நடை. ஒரு மனிதனின் ஆழ்மனத்தில் ஒளிந்திருக்கும் உணர்வுகளை எல்லாம் வெளிக்கொணர நாவலை உபயோகப்படுத்தி இருக்கிறார். இந்த நாவலை மொழிபெயர்க்கும் நேரத்தில் எளிதாக நான்கு நாவல்களை மொழிபெயர்க்கலாம். மிகுந்த சிரத்தையுடன் சிறப்பாகச் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு. இந்த நூல் புக்கரின் இறுதிப்பட்டியலில் இருக்கும் எல்லா நூல்களுக்கும் Strong contender. இறுதிப்பட்டியலில் தனியாக நிற்கும் ஒரே ஆண் இவர் தான். Fosseஐப் படிக்காதவர்கள் என்னவென்று விளக்கிச் சொல்ல முடியாத ஏதோ ஒன்றை இழக்கிறார்கள். இவர் நோபல் பரிசு பெறும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்று தோன்றுகிறது.