சாரா இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர். YA மற்றும் பெரியவர்களுக்கான திரில்லர் நாவல்கள், Fantady fiction, Cross Genre novels, தொலைக்காட்சி சீரிஸ்களுக்கான கதைகள் என்று பல Genresகளில் எழுதி வருகிறார். இதற்கு முந்தைய Behind Her Eyes என்ற இவரது நாவல் பலத்த வரவேற்பைப் பெற்றதுடன் Netflix Series ஆகவும் வெளிவந்தது. இந்த நூல் 31St March 2022ல் வெளியாகியது.

எம்மாவிற்கு பலரும் பொறாமைப்படும் வகையான வாழ்க்கை. இருபது வருட மணவாழ்க்கைக்குச் சாட்சியாக இரண்டு குழந்தைகள். வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டு வீட்டிலிருந்தே பகுதிநேர வேலை செய்யும் கணவன். வேலைபார்க்கும் வழக்கறிஞர்கள் நிறுவனத்தில் பார்ட்னர் ஆகும் வாய்ப்பு நெருங்குகிறது. அவளது நாற்பதாவது பிறந்தநாள் ஒரு மாதத்திற்குள் வரப்போகிறது. அவளது கணவனும் பதினேழு வயது மகளும் அதைக் கொண்டாட தீர்மானித்திருக்கிறார்கள். ஆனால்………

எம்மாவிடம் ஒரு இரகசியம் இருக்கிறது. அவளது அம்மாவிற்கு மனச்சிதைவு ஏற்பட்டு மருத்துவமனையில் இன்னும் இருக்கிறாள், ஆனால் எம்மா கணவனிடம் அவள் ஐந்து வயதிலேயே இறந்ததாகச் சொல்லி இருக்கிறாள். தொடர்பிலில்லாத மூத்த சகோதரி திடீரென இவளிருக்கும் ஊருக்கு வருகிறாள். குடும்பநண்பர் ஒருவரின் மனைவி அவள் கணவனுடன் எம்மாவிற்குத் தொடர்பிருப்பதாக சந்தேகப்படுகிறாள். நிறுவனத்தின் முக்கிய Client எம்மாவிடம் விடாது Flirtingல் ஈடுபடுகிறான் இவளது மகன் Nightmaresல் அலறுகிறான். எல்லாவற்றிற்கும் மேலாக எம்மா பல நாட்களாகத் தூங்கவில்லை. அதனால் வித்தியாசமாக நடந்து கொள்கிறாளா இல்லை ஒருவேளை அவள் அம்மாவிற்கு சரியாக நாற்பது வயதில் பைத்தியம் பிடித்தது போல் இவளுக்கும் பிடிக்கப் போகிறதா?

Am I the thing I dread? எப்போதாவது உங்களைப் பார்த்து நீங்கள் பயந்திருக்கிறீர்களா? கண்கள் சாலையைக் கடமையாகப் பார்க்க இருபது முப்பது கிலோமீட்டர் எப்படிக் கடந்தோம் என்று யோசித்தபோது பயம் வந்திருக்கிறது. நாம் என்ன செய்தோம், செய்யப் போகிறோம், செய்வதற்குத் துணிந்தவர்களாக இருக்கிறோம் என்று நமக்கே தெரியவில்லை என்றால் இந்த உலகில் நாம் அதிகம் பார்த்துப் பயப்படப்போவது நம்மைப் பார்த்துத் தான் இருக்கும். Psychological thriller ஆன நாவல் முழுவதுமே இந்த அச்சில் தான் சுழல்கிறது.

விவாகரத்துகள் எளிதாகிப் போன நாட்டிலும் குழந்தைகள் அவதியுறுகிறார்கள். அவர்கள் வாழ்க்கை வி.மு, வி.பி என்று மாறிப் போகிறது. விவாகரத்து மட்டுமன்றி அமெரிக்காவின் டீன்ஏஜ் குழந்தைகளின் மனநிலையும் இந்த நாவலில் தெளிவாக சொல்லப்படுகிறது. பாலியல் உறவுகள் மலிதாக, நாமும் அவர்கள் பாதையில் நடந்து கொண்டிருக்கிறோம். ஆனால் Break downல் இருந்து Recovery என்பது அமெரிக்கப் பெண்களின் ஜீனில் ஊறிய விசயம். இந்தியர்கள் தடுமாறிப் போகிறார்கள்.

தூக்கமின்மை என்பது ஒருநாளைக் கடந்தாலேயே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. பலநாட்கள் தூக்கமின்மையை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல் இது. கதை நகர நகர மேலும்மேலும் முடிச்சுகளைப் போட்டுவிட்டு கடைசியில் எழுத்தாளரே அவிழ்க்க முடியாது திணறியது போல் தோன்றுகிறது. சாரா நல்ல எழுத்தாளர். ஒரு திரில்லர் நாவல் எப்படி எழுத வேண்டும் என்று சொல்ல விரும்பினால் அமெரிக்காவில் குறைந்தது நூறு பேராவது தேறுவார்கள் என்பது உறுதி.
Litrrary classics இதயத்தையும் திரில்லர் நாவல்கள் Adrenalineயும் குறிபார்க்கின்றன.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s