Zorin ஆக்ஸ்போர்டு பல்கலையில் நவீன ருஷ்ய இலக்கியத்தைக் கற்பிக்கும் பேராசிரியர். இலக்கிய விமர்சகர். பல நூல்களை எழுதியவர். நூற்றுக்கணக்கான டால்ஸ்டாய் குறித்த நூல்களுக்கு அப்பாலும் இந்த நூல் முக்கியமாகக் கருதப்படுவதன் காரணம், இவருக்கு ருஷ்ய நவீன இலக்கியத்தில் இருக்கும் பயிற்சி. அத்துடன் இது முதலில் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டது.
டால்ஸ்டாயின் சுயசரிதை My Life சில வாழ்க்கைச் சிதறல்களை மட்டும் குறிப்பிட்டு விட்டுக் கடைசிவரை முடிக்கப்படாமலேயே போகிறது. இவரது முன்னோர்கள் பலரும் War and Peace நாவலில் வருவதாகச் சொல்லப்படுகிறது. பெயரில் சில எழுத்துக்களை மாற்றி அவர்களை அப்படியே நடமாட விட்டிருக்கிறார். உதாரணத்திற்கு
புகழ்பெற்ற பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்த Volkonsky என்பது இவரது தாயாரின் குடும்பப்பெயர். நாவலில் அது Bolkonskyஆகி விட்டது. இது போல் பல பெயர்களில் சிறு மாற்றங்கள். பணம்படைத்த டால்ஸ்டாயின் தாயார் இளவரசி மரியா வோல்கோன்ஸ்கை தன்னுடைய முப்பத்தி இரண்டாவது வயதில் நொடித்துப் போகும் நிலையில் இருந்த, நான்கு வயது இளையவரை மணம் செய்து கொள்கிறார். Soniaவின் தங்கை Tanyaவே War and Peaceல் வரும் Natasha.
பதினைந்து வயதில் விபச்சார விடுதிகளுக்குச் செல்ல ஆரம்பித்த டால்ஸ்டாய், அவருடைய சமூகப்படிநிலையில் இருக்கும் பெண்களை அணுகவேயில்லை. அவர் உறவுவைத்துக் கொண்டதெல்லாம், விபச்சாரிகள், வேலைக்காரர்கள், சிறுவிவசாயிகள், ஜிப்சி மற்றும் Cossack பெண்கள். நவம்பர் 1851ல்
எழுதப்பட்ட அவரது நாட்குறிப்பில் காணப்படும் வரிகள் ” I have never been in love with Women,:I have been very often in love with men”.
எந்தப் பெண்ணையும் விரும்பியதில்லை என்று 1851ல் எழுதிய டால்ஸ்டாய் 1858-60 நாட்குறிப்புகளில் Aksinya என்ற பண்ணையில் வேலை பார்க்கும்
பெண்ணைப் பற்றி அடிக்கடி குறிப்பிடுகிறார். வேறெப்போதையும் விட அதிகமாக அவள் மேல் காதலில் விழுந்ததாகவும் ஆனால் அவளால் ஒதுக்கப்பட்டதாகவும் கூறுகிறார். 1856ல் Valeria (அவளுக்கு இவரே Guardian) என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ளத் தீர்மானம் செய்யும் அளவிற்கு ஈர்க்கப்படுகிறார். Sonyaவின் அக்கா Lizaவை மணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, Sonyaவிடம் propose செய்கிறார். திருமணத்திற்குப் பின் Sonyaவின் தங்கை Tanyaவுடனான நெருக்கம். Tolstoyக்கு Love என்பதை விட Desire of love மீது தான் பெரிதும் நாட்டம் இருந்ததாகத் தோன்றுகிறது.
நான்கு பகுதிகளாக, அனாதை லட்சியவாதி,
திருமணமான அறிவுஜீவி, தனியான தலைவன், தப்பியோடிய பிரபலம் என்ற தலைப்புகளில் நூற்று எண்பது பக்கங்களில் டால்ஸ்டாயின் சரிதையைச் சொல்ல முனந்திருக்கிறார். Zorin டால்ஸ்டாயைப் பூஜிப்பவர். பூஜிப்பவர்கள் எழுதும் சரிதைக்குரிய அத்தனை குறைபாடுகளும் இந்த நூலில் இருக்கிறது. ஆனால் எப்படி டால்ஸ்டாயின் கதைகள் உண்மை சம்பவங்களையும், பழகிய மனிதர்களையும் புனைவாக்கி எழுதப்பட்டன என்பதற்கு ஏராளமான உதாரணங்களைக் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் இது மிக சுவாரசியமான நூல். டால்ஸ்டாயின் முக்கிய நூல்களைப் படிக்காதவர்கள் இந்த நூலை நெருக்கமாக உணரமுடியாது.
டால்ஸ்டாய் அவர் வாழும் காலத்திலேயே ருஷ்யாவில் மட்டுமல்ல உலகமெங்கும் புகழ்பெற்ற எழுத்தாளர். அவரது இலக்கிய நுட்பம், அந்தஸ்து கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. புதுமையான கல்வித்திட்டம்,
சிறுஉழவர்களின் குழந்தைகளுக்குக் கல்வி, பஞ்சகாலத்தில் உலகின் பலநாடுகளில் இருந்தும் தன் சொந்த செல்வாக்கில் நன்கொடை வாங்கி பொதுமக்களுக்கு உணவு ஏற்பாடு செய்திருக்கிறார். ஒரு நேர விருந்து ஒரு விவசாயின் மாத வருமானத்தை விட அதிகம் என்று மனம் கசந்திருக்கிறார். இவை எல்லாமே ஏழைகள் மேல் உள்ள உண்மையான Empathy ஆக இருக்கக்கூடும். ஆனால் இவருக்கு நிச்சயமாக மறுபக்கம் இருந்திருக்கிறது. தன்னை நம்பி பிழைப்பவர் வீட்டுப்பெண்களின் மீது கைவைப்பது என்ன மனநிலை? பதினெட்டு வயது Sonyaவை Propose செய்கையில் அவளது சகோதரியின் மனநிலை குறித்து இவர் சிறிதும் கவலைப்படவில்லை. மணமாகி பல வருடங்கள் கழித்து மனைவியின் இளைய சகோதரியுடனான நெருக்கம் Platonic என்று இவர் சொன்னாலும் பெண்களுக்கேயுரிய ஏழாவது அறிவு காரணமாக நாம் Sonya சொல்வதைத் தான் நம்ப வேண்டியதாகிறது.
இவரது முரண்பாடுகளை லெனினில் ஆரம்பித்துப் பலரும் சொல்லி இருக்கிறார்கள். விருப்பமில்லாத மணவாழ்வு, வெறுக்கும் மனைவி என்று எல்லாவற்றையும் தாண்டி டால்ஸ்டாய் தன் நூல்களின் உரிமையை மனைவிக்கும், குழந்தைகளுக்குமே கொடுத்தார். Peasantsக்குக் கொடுக்கவில்லை. டால்ஸ்டாய் தனிமனித இச்சைகளில் ஆட்பட்டு அலைகையில் அவரது Alter ego தன்னைப் புனிதமாக்க எல்லா முயற்சிகளும் எடுத்திருக்குமா? அவை இரண்டுக்குமான இடைவிடாத போராட்டம் தான் அவர் வாழ்க்கையா? எப்படி இருந்தாலும் டால்ஸ்டாயைப் படிக்காதவர்கள் நவீன இலக்கியத்தின் இனிமையான ஒரு பகுதியை அனுவிக்காதவர்கள்.