அனிருத் லூதியானாவைச் சேர்ந்தவர். சைக்யாட்ரிஸ்டாகப் பணிபுரிபவர். Stories of Partition and Madness என்பது இவரது முதல் நூல். இது சமீபத்தில் வெளிவந்த இரண்டாவது நூல்.

அகண்ட பஞ்சாப்பில் ஐந்து நதிகள் ஓடின, அதனாலேயே அந்தப்பெயர். பின் பஞ்சாப்பின் பெரும்பகுதி (மேற்கு) பாகிஸ்தானுடன் இணைந்தது. மீதியிருந்த பஞ்சாப்பில் ஜாதி ரீதியாக மாநிலம் கேட்கக்கூடாதென யோசித்து மொழிவாரியாகக் கேட்டார்கள். பஞ்சாப்பில் இருந்து ஹரியானா, ஹிமாச்சல் பிரதேஷ் இரண்டும் பிரிந்தன. கடைசியாக மிஞ்சிய பஞ்சாபில் இரண்டரை நதிகளே ஓடுகின்றன.

இந்தியாவில் ஜாதி ஒழிய எத்தனை நூற்றாண்டுகள் இன்னும் ஆகுமோ தெரியவில்லை. அரசுப்பள்ளியில் தலித் மாணவர்களை ஆசிரியர்களின் வீட்டு வேலை செய்யச் சொல்கிறார்கள். மியூசித்திற்குள் தலித் வரக்கூடாது என்று வெளியில் இருக்கும் கழிப்பறைகளை மட்டும் சுத்தம் செய்யும் பணியைக் கொடுக்கிறார்கள். தலித் பெண்கள் உயர்ஜாதி இந்துக்களுக்கு வேலைசெய்து கொடுப்பதை வாங்கிக் கொள்கிறார்கள். சூரியன் உதயமாகும் போது அவர்கள் உடல்களைத் தழுவி உயர்ஜாதி ஜாட்களைத் தீண்டிவிடக்கூடாதென மேற்கே தலித் குடியிருப்புகள் அமைக்கப்படுகின்றன. உபயோகப்படுத்திய நீர் மேடாக இருக்கும் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி செல்கிறது. தலித்கள் சீக்கியராக மதம் மாறினால் ஜாதி வித்தியாசம் போய்விடும் என்ற நம்பிக்கை முறியடிக்கப்படுகிறது.

Dera Garibparvar இரண்டு முஸ்லீம்கள் ஒரு இந்து தலித்தால் கண்டுபிடிக்கப்படுகிறது. ஒரு யோகி சமாதி அடைந்த இடத்தைச் சுற்றி குடியிருப்புகளை எழுப்புகிறார்கள். பிள்ளைவரம் வேண்டியோர், மற்ற குறைகளைச் சொன்னவர்கள் இங்கு வந்து வழிபட்டதும் நல்லவைகள் நடக்கின்றன. அதனால் இது முஸ்லீம்களுக்கு, இந்துக்களுக்கு, சீக்கியர்களுக்குப் பொதுவான புனிதத்தலம் ஆகிறது (சமாதிக்குள் யாரிருப்பது என்பது பெரிய இரகசியம்) அகண்ட பாரதம் பிரிந்ததும், முஸ்லீம்களில் பெரும்பாலோர் பாகிஸ்தான் போகிறார்கள், தங்கியவர்கள் கொல்லப்படுகிறார்கள். Dera Garibparvar தலித் தலைமை தாங்கும் புனிதத்தலமாகிறது.

மனஅழுத்த நோய் கொண்ட, சமீபத்தில் விவாகரத்து பெற்று. தன் முன்னோர்களின் இடத்தில் தனித்து வாழ விரும்பிய டாக்டருக்கு, சீக்கியர்கள் நிரம்பிய பகுதியில் ஒரே இந்துவாக வாழ்வதில் நிறைய சிக்கல்கள் வருகிறது. சிறுவயது முதல் சுற்றித் திரிந்த தலித் தம்பதிகளில் அந்தப்பெண் தன் அடையாளத்தைத் துறந்து
passionஐத் துரத்திச் செல்ல எண்ணுகிறாள். இவர்கள் வாழும்காலம் மோசமானது. பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்திவிட்டு பொற்கோயிலுக்குள் அடைக்கலம் புகுவதும்,
ஏராளமான பக்தர்கள் இருக்கும் நேரத்திலேயே ராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்துவதும், பின்விளைவாக இந்திரா அவருடைய நீண்டகால நம்பிக்கைக்குரிய பாதுகாவலரும் சேர்ந்து கொண்டு கொலைசெய்யப்படுவதுமான காலம்.

இந்திரா கொலைக்கும் அதை ஒட்டி நடைபெற்ற நாடு தழுவிய கொலைகளுக்கும் பின்னர், மதம் குறித்த அதிக சிந்தனை இல்லாத சீக்கியர்கள், குறிப்பாக ஜாட் சீக்கியர்கள் மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றத் தொடங்குகிறார்கள். மீண்டும் தீவிரவாதம் தழைத்தோங்குகிறது. பெண்களுக்கு ஒழுக்கநெறி போதிக்கப்படுகிறது. புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டு தீவிரவாதிகளை ஒடுக்க காவல்துறைக்குக் குறுக்கீடுகளில்லாத முழு அதிகாரம் வழங்குகிறது. காவல்துறையினர் தீவிரவாதிகளாகிறார்கள். எட்டாயிரம் இளைஞர்கள் எங்கு சென்றார்கள் என்பது இன்று வரை தெரியவில்லை.

அநிருத் பழைய காயத்தின் தழும்புகளை வருடிப் பார்த்திருக்கிறார். மதம், ஜாதி, பயங்கரவாதம், Police excesses ஆகிய நான்கையும் ஒரு மனநோய் கொண்ட மருத்துவர், இரண்டு தலித் தம்பதிகளின் கதைகளை வைத்து நாவலை நகர்த்தி இருக்கிறார். இந்தியாவில் டெல்லியில் நடப்பது மட்டுமே நாடெங்கும் எதிரொலிக்கும். இல்லையேல் அது பஞ்சாப் பிரச்சனை, தமிழர்கள் பிரச்சனை என்றளவில் முடிந்து விடுகிறது. அடுத்ததாக ஜாதி. அது ஆரம்பப்பள்ளி சான்றிதழில் இருந்தே இருக்கக்கூடாது. ஒரு ஜாட்டால், பிராமணரால் நான் ஜாதிவித்தியாசம் பார்ப்பதில்லை என்று பெருமையாக சொல்லிக் கொள்வது போல் ஒரு தலித்தால் இந்த தேசத்தில் சொல்ல முடியுமா? அனிருத் சைக்யாட்ரிஸ்ட் ஆக இருப்பது அவரது கதாபாத்திரங்களை Develop செய்வதில் பெரிய Advantage ஆக இருந்திருக்கக்கூடும்.
Beautifully written Contemporary realistic fiction இந்த நாவல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s