ஜில்லா விலாஸம் – கார்த்திக் புகழேந்தி:

அண்மைக்கால சரித்திரத்தை பின்னணியாக வைத்துக் கதை எழுதுவது மிகவும் சிரமம். இதில் கூட வ.வு.சியின் கைது 1908 எனவே மற்ற தேதிகளில் குழப்பம் இருக்கிறது.தேதிகளே இல்லாமல் கதையை எழுதியிருக்கலாம். இதைவிட்டுப் பார்த்தால் இந்தக்கதை ஒரு காலகட்டத்தின் வாழ்க்கையை அப்படியே கொண்டு வந்திருக்கிறது. ஆங்கீலேய ஆட்சியில் இருந்து தி.மு.க முதலாவதாகப் பதவியேற்ற காலம் வரை நகரும் கதையில் எப்போதோ செய்த mischief கண்டுபிடிக்கப் படுகிறது. தெளிவாக தங்கு தடையின்றி நகரும் கதை. கார்த்திக் புகழேந்தி கவனிக்க வேண்டிய எழுத்தாளர்.

ஜில்லா விலாஸம்

நியமம் – ஜா.தீபா:

கான்சர் வருபவர் எல்லாம் Jane McGrath போல அதற்கான விழிப்புணர்வு செயல்களைச் செய்வதில்லை. பலருக்கு என்ன பாதிப்பு என்றாலும் சில நாட்களில் மறக்கப்பட்டு, வாழ்க்கை மாமூல் நிலைக்குத் திரும்புகிறது. தீபாவின் கதை முற்றிலும் புதிய கதைக்களம் மட்டுமல்ல, ஒரு அடங்கிய தொனியில், ஆழமாகச் சொல்லப்பட்ட கதை.
இன்னும் சொல்லாத கதைகள் ஆயிரக்கணக்கில் என்பதற்கு உதாரணம் இந்தக்கதை. ஆரம்பத்தில் கேட்கப்படும் ஏன் சிறிது நேரத்திலேயே தீர்த்து வைக்கப்படுகிறது. முடிவு தெரிந்த நபர்களின் பெயரும் எண்ணும் நீக்கப்படுவது போன்ற சிறு தகவல்களில் இருந்தே Perfect ஆகச் சொல்லப்பட்ட கதை.

நியமம்

அடியேந்திரம் – சுஷில்குமார்:

சுஷில்குமாரின் மொழிநடையில் மீண்டும் ஒரு நல்ல கதை. வீட்டைப் பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்ததற்கும், மாமா அம்மாவைக் கடைசிவரை பார்க்காததற்கும், பேசாதற்கும் இருக்கும் சம்பந்தம் கவனமாக ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது. அம்மாவிற்குத் தெரியாத விஷயம் ஒன்றிருக்கிறது. முக்கியமாக கதையில் மேல்கரை அம்மாவும் கூட அதிகமாக ஒரு வார்த்தை பேசவில்லை. தேடலிருக்கும் கதையில் ஒரு பரபரப்பே இல்லாமல் பூரண அமைதி.

அடியேந்திரம்

வாக்குச்சாவடியில் நிற்பவன் – சுப்பிரமணி இரமேஷ்:

தேர்தல் நடக்கையில் Running commentary போல வருகின்றது. கதை என்று எதுவுமில்லை.

வாக்குச்சாவடியில் நிற்பவன்

ராஜ்யோத்சவா – தருணாதித்தன்:

வங்கிக்கிளைக்குள் வேகமாக வந்த கும்பல், அட்டெண்டர், கிளார்க் எல்லாம் நாங்க, ஆபிஸர், மேனேஜர் எல்லாம் நீங்களா என்று கேட்ட சம்பவம் நினைவுக்கு வந்தது. கதையில் சற்று exaggeration இருந்தாலும் உண்மை இல்லாமல் இல்லை. தமிழ் மட்டுமே தெரிந்த தமிழர் கர்நாடகாவில் பயப்படாமல் இருக்க முடியாது. தமிழகத்தை விட ஜாதி பிரச்சனை தீவிரமாக இருக்குமிடத்தில், தமிழருக்கு எதிராக என்றால் எல்லோரும் ஒன்று சேர்ந்து கொள்வார்கள். இங்கும் இந்திக்காரர்கள் சொந்த ஊரில் இருப்பது போல் சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறார்கள்.

http://www.yaavarum.com/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%8d%e0%ae%af%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b5%e0%ae%be/
கைமாறு – கா.சிவா:

சிவாவின் கதைகளில் பாதி வருகையில் ரிதத்தை இழந்து விடுவதாகத் தோன்றுகிறது. கதைகளுடன் சில நாட்களை அவசரமின்றிக் கழிப்பது தான் ஒரே வழி. நிகழ்வும் சற்று முன் கடந்ததும் ஒரிடத்தில் சங்கமிப்பதை இன்னும் முயற்சித்திருந்தால் ஆழமாகச் சொல்லியிருக்க முடியும்.
http://www.yaavarum.com/%e0%ae%95%e0%af%88%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/

ராஜமுனி – ரம்யா:

பெண்களின் பிரத்யேக உலகத்திலிருந்து அடுத்த கதையில் அகண்ட உலகத்திற்கு வந்திருக்கிறார் இரம்யா. Parallel Universes, botanical research, சித்தர்கள் , சற்றே Magicsl realismன் சாயல் என்று நகரும் முதல் பகுதியும், நாட்டார் வழக்கத்தைச் சொல்லும் இரண்டாம் பகுதியும் ஒரு கதாபாத்திரத்தால் கச்சிதமாக இணைக்கப்பட்டிருக்கின்றன. வெகு காலமாக கதை எழுதுபவருக்கு வருகின்ற Flow இவரிடம் இயல்பாக இருக்கிறது.

ராஜமுனி

டார்லிங் என்று பெயர் சூட்டப்பட்ட சித்தாந்தம்- லட்சுமிஹர்:

பேண்டஸி கதைகளின் பாணியில் சொல்லப்பட்ட கதை. Visual effectsக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட கதை.

‘டார்லிங்’ என பெயர்சூட்டப்பட்ட சித்தாந்தம்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s