Violaine பாரிஸில் 1979ல் பிறந்தவர். இருபது வருடங்களுக்கு மேலாக நியூயார்க் நகரத்தில் வசிப்பவர். இது இவருடைய முதல் நாவல். பிரெஞ்சில் எழுதப்பட்டுப் பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. பல இலக்கிய விருதுகளைப் பெற்ற இந்த நூல் இந்த ஆண்டு புக்கர் நீண்ட பட்டியலிலும் இடம்பெற்றது.

Violaineன் இந்த நாவல் ஒரு auto fiction. அவரது அம்மாவின் கதையை எழுதிய பின் அதை எவ்வாறு திருத்தி அமைப்பது என்று தெரியாமல் சில வருடங்கள் திணறியிருக்கிறார். பின் முதல் குழந்தை பிறந்து சற்று இடைவெளியில் இரண்டாவது குழந்தையும் பிறந்தபிறகு இவருக்கு தாய் குறித்த புரிதல் உண்டாகியிருக்கிறது. அவர் Motherhoodக்கும் Womanhoodக்கும் சமன் செய்ய முடியாது போராடியது தெரிந்திருக்கிறது.

ஒற்றைப்பெற்றோரிடம் வளர்வதில் இயல்புக்கு மாறான விசயங்களை அனுசரித்துக் கொள்ள வேண்டியதாகிறது. அதிலும் அவர், மனச்சிதைவு அடைந்தவரென்றால், மாறும் தட்பவெட்பநிலை போல் கோபத்தில் இருந்து அழுகைக்கு, அழுகையில் இருந்து கொஞ்சலுக்கு சட்டென்று மாறுபவராக இருந்தால், குழந்தைகள் வாழ்க்கை நரகம் தான். நீங்கள் என் தியாகத்தை சிறிதும் அறியாதவர்கள் என்று கெட்டவார்த்தைகளில் திட்டிவிட்டு சிறிது நேரத்தில் நீங்களே என் உலகம், என்னை நேசிக்கிறீர்கள் தானே என்று கேட்கும் அம்மாவை எப்படி எதிர் கொள்வது?

மூன்று பாகங்கள் கொண்ட நாவலில் ஆசிரியரே (அவரது அம்மாவிற்கு இரண்டாவது மகள்) கதைசொல்லியாக முதலிலும், மூன்றாம் பாகத்திலும் வருகிறார். முதல் பாகம், மகளின் கோணத்தில் அம்மாவின் Wildernessஐப் படம்பிடிக்கிறது. நான்கு மணமுறிவு, எண்ணிக்கையில்லா காதலர்கள் என்று Active sexlife கொண்ட அம்மா காத்தரினின் வாழ்க்கை. தினம் ஒருவனை வீட்டுக்குக் கூட்டிவரும் பேரழகியான அம்மா. குடியால், போதை மருந்தால், சிகரெட்டால் மனச்சிதைவைக் கரைக்க அவள் செய்யும் முயற்சிகள். இரண்டு குழந்தைகளை காரில் வைத்துக் கொண்டு Nowayல் வேகமாக செல்வதாகட்டும், மிதமிஞ்சிய போதையால் படுக்கையை விட்டு எழமுடியாமல் இருப்பதாகட்டும் எல்லாமே அதீதம். ஒரு காலை விட மற்றொரு கால் மூன்றரை சென்டிமீட்டர் பிறப்பிலேயே குறைவாக இருப்பதை மீறி, பலரும் பாராட்டும் நடனமணியாகிய பெண். முதல் பாகத்தில் அவளது குறைகள் எல்லாம் திரும்பத்திரும்ப சொல்லப்பட்டு அவளைக் குறித்த பிம்பம் ஒன்றை நாம் வளர்த்துக் கொள்ளும் போது இரண்டாவது பாகத்தில் அவளின் வரலாறு அந்தபிம்பத்தை உடைத்தெறிகிறது.

Violaine நாவலில் அவர் பெயர் உட்பட எல்லாமே நிஜப்பெயர்களாகவே உபயோகித்திருக்கிறார். மிகவும் தைரியமான, பாசாங்கில்லாத எழுத்து. சென்ற புக்கர் இன்டர்னேஷலை வென்ற
Douglas Staurt ன் Shuggie Bain குடிக்கு அடிமையான தாயாரைப் பற்றிய கதை. அந்த நூல் ஏதோ ஒரு வகையில் இந்த Brilliant novelஐ இறுதிப் பட்டியலுக்குள் நுழைய விடாமல் செய்திருக்க வேண்டும். மிகவும் Powerfulஆன நூல் இது. தாய்மை என்பதை முற்றிலும் எதிர்பாராத கோணத்தில் சந்திக்கும் நாவல். Buy/borrow/steal but never miss this one.

“The good mother necessarily fails”— Sigmund Freud

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s