இரவில் -ஜமைக்கா கின்கெய்ட்- தமிழில் சமயவேல்:

இரண்டுகாரணங்களால் கின்கெய்டை மொழிபெயர்ப்பது சிரமம். முதலாவது கவிதை கலந்த அவரது மொழிநடை. இரண்டாவது யதார்த்தவாதத்தில் நகரும் கதை திடீரென சர்ரியல் பேண்டஸிக்குச் சென்று திரும்புவது. சமயவேல் எளிதாக, எளிமையாக மொழிபெயர்ப்பை செய்திருக்கிறார்.

இந்தக் கதை முழுக்கவே ஒரு சிறுபெண்ணின் பார்வையிலான உலகமும் அவள் கனவுகளும். அவள் உலகநடப்புகளைக் கேள்வி கேட்பதில்லை, அவள் பார்வையை மட்டும் சொல்கிறாள். வழக்கமாக இவர் கதைகளில் வரும் பெண்- அம்மா உறவின் Dynamics இந்தக் கதையிலும் வருகிறது. Racism, Caribbean culture, கறுப்பினப் பெண்ணாக இருப்பதன் சங்கடங்கள் இவரது கதைகளில் அடிக்கடி வரும் நிகழ்வுகள். அமெரிக்காவிற்கு வேலைக்காரப் பெண்ணாக நுழைந்த கின்கெய்ட், ஆண்கள் வசமிருந்த West Indian Literatureல் குறிப்பிட்ட இடத்தை அடையக் கடந்ததூரம் மிக நீண்டது.

கள்ளியின் கதை – ச.ஆதவன்:

இந்தக்கதை ஒரு நல்ல முயற்சி எனினும் இன்னும் ஆழமாகச் சொல்லி இருக்கலாம். எல்லாவற்றையும் மாற்றுகிறவள் காதலை மறக்காமல் இருக்கிறாள். அலுவல் நேரம் எல்லாம் அவளுடன் இருந்து விட்டு, அவளுடன் தொட்டுப் பழகிவிட்டு கள்ளி இன்னும் கொஞ்சம் அவளைப் பற்றி நாம் புரிந்துகொள்ள சொல்லியிருக்கலாம். Klara and the Sun நாவலில் Artificial Friendக்கு மனிதர்களுக்குரிய நன்றி, பாசம் வருவதை Ishiguro சொல்லியிருப்பார். கதைகள் இலக்கியமாவது அப்படித்தான். பக்கஅளவில் இரண்டு பக்கங்களேனும் குறைவு இந்தக் கதைக்கு.

அயோனிஜாவுடன் சில பெண்கள் – கோணங்கி:

முப்பது வருடங்களாக மனைவி உருவில், Physics என்னுடன் பயணம் செய்தாலும் அதில் ஒரு அட்சரம் இன்றும் கூட எனக்குத் தெரியாது. இந்த இதழில் வந்திருக்கும் கின்கெய்ட் கூட வாசிக்க எளிதான எழுத்தாளரில்லை. Zadie Smithல் இருந்து புக்கர் பட்டியல்களின் பல ஆசிரியர்கள் எளிய வாசிப்புக்கு உகந்தவர்களல்லர். ஆனால் அவர்களைத் தொடர்ந்து படிக்கையில் ஒரு சித்திரம் உருவாகும், அவர்கள் தெரிவிக்க விரும்புவதில் எழுபது சதவீதம் உள்வாங்கிக் கொண்டால் கூட நீங்கள் நல்ல வாசகர்கள். இந்தக் கதையில் என்னை இரண்டாகப் பிரித்துக் கொண்டு அடிமுடியைத் தேடினேன். பொய்சாட்சி சொல்ல தாழம்பூ கூட கண்ணில்படாமல் திகைத்தேன். இது இதுவரை அறிந்திராத புதிய Genre. வாசித்துப் புரிந்து கொண்டவர்களுடன் உரையாடலை நடத்த தயாராக இருக்கிறேன்.

கவிதைகளும், கட்டுரைகளும் மிக நன்றாக வந்திருக்கின்றன. குறிப்பாக ஆட்வுட் பற்றிய ச.வின்சென்டின் கட்டுரை. வெகு சரளமான மொழிபெயர்ப்பு. சிற்றிதழ் என்பதற்கு மாதிரியை யாரேனும் கேட்டால் நான் தமிழ்வெளியை எடுத்துத் தைரியமாகக் காட்டுவேன்.

• சென்னையில் இதழ் கிடைக்கும் இடங்கள்:

டிஸ்கவரி புக் பேலஸ், கலைஞர் கருணாநிதி நகர்
பாரதி புத்தகாலயம், தேனாம்பேட்டை
பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர்
பி4புக்ஸ் – யாவரும், வேளச்சேரி
பரிசல் புத்தக நிலையம், அரும்பாக்கம்

• கோவையில் விஜயா பதிப்பகத்திலும் கிடைக்கிறது.

• மற்றும் இணைய வழி வாங்க:

http://www.commonfolks.in

Buy Books By Phone:
WhatsApp: wa.me/+919094005600

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s