மேலங்கி – ஆங்கில மூலம் ஐசக் தினெசென்- தமிழில் சுசித்ரா:

Infidelity மற்றும் அதனால் ஏற்படும் குற்ற உணர்வே கதை. ஏஞ்சலோவின் பார்வையிலேயே கதை நகர்கிறது. ஒரே சம்பவத்தை ஒட்டி வேறுவேறு கனவுகள் காண்கிறான். அல்லோரியின் மௌனமே இந்தக் கதையின் மிக நுட்பமான விஷயம்.
லுக்ரீசியா தவறுக்குத் துணிந்தவள். அவள் கனவில் வந்தது போல் பேர் சொல்லி அழைக்காமல் இருந்திருக்கலாம். கணவன் முகத்தைப் பார்க்கும்வரை பேசாமல் இருந்திருக்கலாம். அல்லோரிக்குக் கடைசிவரை தெரியாமல் போயிருக்கலாம்.
அவர் ஏஞ்சலோவின் கன்னத்தில் முத்தமிடுகிறாரே! ஆனால் யூதாஸ் கூடத்தான் முத்தமிட்டான். அவர் ஏன் எதுவுமே பேசவில்லை. ஒரு வார்த்தை நன்றி சொல்லி இருக்கலாமே. ஆனால் ஓரிரவில் அவனுக்குரிய தண்டனையைப் பெற்று விட்டான் ஏஞ்சலோ. மரணமே அவன் நினைத்தவகையில் அவனுக்குப் பெரிய விடுதலையாக இருந்திருக்கக்கூடும். ஒரே இரவில் வயோதிகத் தோற்றத்தை அடைந்த ஏஞ்சலோ. காமம் எல்லாவற்றையும் வெல்லக்கூடியது. நல்ல கதை. Over all சுசித்ராவின் மொழிபெயர்ப்பு நன்றாக இருக்கிறது. ஆனால் அவர் தவிர்க்க வேண்டியது கீழே வருவதுபோன்ற வரிகள்:

“அதேபோல் தான் நம்பிக்கைமீறிய மாணவனுக்கும் தனக்குள் இருந்த உக்கிரமான காமத்தின் விசையுடன் தனக்கு அனைத்துக்கும் மேலான லட்சியமாக இருந்த உயர்கலை இணைந்தபோது, அதனுடன் ஆசிரியரிடம் அவனுக்கிருந்த தனிப்பட்ட ஆராதனையும் கலந்தபோது அது உருவாக்கிய தீயை அவனே நினைத்தாலும் கட்டுப்படுத்தியிருக்க முடியாது.”

https://vallinam.com.my/version2/?p=8458

தைலம் – அரவின் குமார்:

மியான்மாரிலிருந்து லங்காவிக்கு அகதியாக வந்து சேர்ந்த பரிதாபத்திற்குரிய பெண்ணின் கதை. தைலம் புகைபிடிப்பது போல் ஒரு வடிகால். ரோக்கியா ஒரு கொழுகொம்பைத் தேடும் நேரத்தில் கூட இருப்பவர்களும் அதற்கு தூபம் போடுகின்றனர். ஆனால் ஹசானின் Agenda வேறு. அவன் வியாபாரத்திற்கு முன்பான Surveyஐ செய்திருக்கிறான். வித்தியாசமான கதைக்கரு. எதையுமே கதையில் சொல்லவில்லை ஆனால் ரோக்கியாவின் தனிமைத்துயர் நம்மை சரியாக வந்தடைகிறது.

https://vallinam.com.my/version2/?p=8434

இசக்கி – ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்:

மதுரையில் மடப்புறம் காளியம்மனுக்கு காசு வெட்டிப் போட்டால் எதிரியால் தப்பிக்க முடியாது என்பார்கள். அது போல் முப்பந்தல் இசக்கியம்மன். கடவுளின் மேல் பாரத்தைப் போட்டு என்ன வேலைகள் வேண்டுமானாலும் செய்யலாம் போலிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே ஒரு திரில்லர் கதையின் பரபரப்புடன் எந்தத் தொய்வுமின்றி விரைவாக நகர்ந்து முடியும் கதை. நவீன் தொடர்ந்து நல்ல கதைகளை எழுதி வருகிறார். கதையைப் படித்ததும் Sherlock Holmes நினைவுக்கு வந்தார். “When you have eliminated the impossible, whatever remains, however improbable, must be the truth.”

https://vallinam.com.my/version2/?p=8462

மெக்தலீன் – ரம்யா:

Mary Magdaleneனை மனிதகுமாரனுக்கு அடுத்து அன்பானவராகச் சித்தரித்திருக்கிறார் ரம்யா இந்தக் கதையில். Dan Brown அவரது புகழ்பெற்ற நாவலில் இவரை இயேசுவின் மனைவியாக சித்தரித்திருப்பார். அவர்களுக்கு பிறந்த குழந்தையின் வழி இயேசுவின் வம்சம் தளைத்தோங்கும். கத்தோலிக்கத் திருச்சபைகள் வழமை போல் கடுமையாக எதிர்த்தன இந்த நாவலை. ஆனால் Dan Brown உலக அளவில் பிரபலமாகி விட்டார். இந்தக் கதையில் அந்த Controversyஐ எளிதில் புறம்தள்ளி விட்டு, அன்பே வடிவாக மெக்தலீனுக்கு ஞானஸ்நானம் செய்திருக்கிறார் ரம்யா. கதைக்கருவான அறிவை விட, ஞானத்தை விட அன்புதான் உயர்ந்தது என்பதில் யாரும் சந்தேகம் கொள்ள இயலாது.

https://vallinam.com.my/version2/?p=8427

தொடர்பவைகளின் கூற்று – லட்சுமி ஹர்:

நம்பிக்கை தான் எல்லாவற்றிற்கும். நாம் நன்றாக இருக்கிறோம் என்பதும் நம்பிக்கை, துயரத்தில் இருக்கிறோம் என்பதும் நம்பிக்கை. ஆனால் ஏன் ஒருவருக்கு வாழ்க்கை மொத்தமும் துயரங்களின் மூட்டையாவதும், சிலருக்கு தியேட்டரில் டிக்கட் கிடைக்காதது, சுண்டு விரலில் பட்ட காயம் போன்ற இடர்களும் நேர்கின்றன. இந்துமதம் முன்வினை என்ற நம்பிக்கையின் மூலம் கடந்து விடுகிறது. கடைசியில் வாழ்க்கை ஒரு புதிர் தான். இந்தக் கதை அந்தப் புதிரின் ஒரு பக்கத்தைப் பேசுகிறது.

https://vallinam.com.my/version2/?p=8440

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s